
#Avaludan
உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...
மக்கள் ஐடி... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தமிழக அரசு, மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு `மக்கள் ஐடி’ என்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ‘மக்கள் ஐடி’ என்ற பெயரில் 10-12 இலக்க எண் வழங்கப்படவிருப்பதும், அனைத்து சேவைகளையும் இதன் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. `ஏற்கெனவே ஆதார் எண் இருக்கும்போது இது தேவையா?’ என்ற கேள்விகளும், ‘இந்த எண் மூலம் குடும்பங்களின் தகவல் தொகுப்பை உருவாக்கி, திட்டமிடுதல், செயல்படுத்துதலை மேம்படுத்துவதே தமிழக அரசின் நோக்கம்’ என்ற பதில்களும் பகிரப்படுகின்றன. இது குறித்த உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்...

Anbu Bala
ஏற்கெனவே, மக்களின் தனிப்பட்ட டேட்டாக்கள் திருடப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்த எண்ணும் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தலாம்.
செ.கௌதம்
இந்த பிரத்யேக எண், மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும். மக்கள் நலத் திட்டங்கள் உரியவர்களுக்குச் சென்றடைய உதவும்.
Lotus Selvan
அகில இந்திய அளவில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்ற பிரத்யேக எண் இருக்கும்போது, இது தேவையற்றது. மாநில தேவைக்கு ஏற்ப அதையே மேம் படுத்திக்கொள்ளலாம்.

Sivan Narayanan
ஒவ்வொரு குடும்பத்தின் விவரங்களையும், மாநில நிர்வாக சேவைகளுக்காகத் தொகுக்கவிருக்கிற இந்த ‘ஐடி’ தேவையான ஒன்று, வரவேற்கிறேன்.
Ntvalluvan Valluvan
இந்தியர்களுக்கு என்று பிரத்யேக அடையாள எண் இருப்பதுபோல, தமிழர்களுக்கு என்று பிரத்யேக அடையாள எண் இருப்பதில் என்ன தவறு? இந்திய ஒற்றுமை பேசுபவர்கள், ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மூலம் கிடைக்கும் வருவாய் என்ன, ஒன்றிய அரசு தமிழ கத்துக்கு ஒதுக்கும் நிதி என்ன போன்ற விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும்.
Ahamed Siddiq
மக்களுக்கான சேவைகள், திட்டங்களுக்குப் பின் ஓர் அரசியல் காரணம் அல்லது ஓர் அரசியல் கட்சியின் ஆதாய காரணம் இருப்பதை பார்த்துவருகிறோம். ஆதார் முதல் மக்கள் ஐடி வரை எங்களுக்கு நல்லது செய்யும் முயற்சி என்றால் நாங்கள் வரவேற்கிறோம்தான். மற்றவை ஆட்சியாளர்கள் கையில் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறோம்.
Sultan Basha
தமிழக மக்களுக்கான இந்த பிரத்யேக ஐடி, காலத்தின் அவசியம். தமிழக அரசின் திட்டங்கள் தமிழர்களுக்கு சென்றடைய செப்பனிடப்படும் பாதை.
Karuvel Pandian Raju
இதே போல் ஒவ்வொரு மாநிலமும் செய்தால், பிரிவினையும் கலவரமும் அதிகரிக்கலாம். லஞ்சம் நிறைந்த அதிகாரிகள் இருக்கும் வரை, எந்தத் திட்டத்தின் நோக்க மும் சிதையத்தான் செய்யும் என்பதையும் புறந்தள்ள முடியாது.
Jvsam Wanderer
மிகச் சிறந்த முன்னெடுப்பு. மற்ற மாநிலங்களைவிட மாநிலம் சார்ந்த அமைப்புகள் எல்லாம் நம்மிடம் திறம்பட உள்ளன. முக்கியமாக மின் விநியோகத்தை தனியார் மயமாக்க நினைக்கும் மத்திய அரசுக்கு இந்த முயற்சி ஒரு தடையை ஏற்படுத்தலாம்.
Karthi Karthi
இது புதிய திட்டம் அல்ல. தமிழக மக்களுக்கு பிரத்யேக எண் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு, 2013-14ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றது. எப்போது நிறைவேற்றப்படவிருக்கிறது, எவ்வாறு செயல் படுத்தப்படவிருக்கிறது, பயனாளர்கள் யார், பாதிக்கப் படப்போகிறவர்கள் யார் என்பதையெல்லாம் பொறுத் திருந்து பார்ப்போம்.
Dinesh Kumar
இந்தத் திட்டத்துக்கு செலவிட ஒதுக்கும் தொகையை, குடிநீர், விவசாயம் என இதைவிட அவசியமான, இதற்கு முன்னர் செயல்படுத்தப்பட வேண்டிய அவசிய திட்டம் வேறு எதுவும் இருக்கிறதா என்று பரிசீலித்து அரசு இயந்திரம் முடிவெடுக்க வேண்டும்.
வலைதள சிறுகதை
எழுத்தாளர் வாசகர்களே... உங்கள் சிறுகதைகளை விகடன் வலைதளத்தில் மேடையேற்ற நாங்கள் தயார். சிறப்பாகவும், ஜொலிப்பாகவும் நீங்கள் அனுப்பும் சிறுகதைகள் 1,000 வார்த்தைகளுக்குள் இருப்பது அவசியம். ஆன்லைனில் பதிவாகும் சிறுகதைக்கான ரொக்கப் பரிசு ரூ.500; சிறந்த சிறுகதைக்கு குக்கர் பரிசு என்று அறிவித்திருந்தோம். ஏராளமான சிறுகதைகள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ரூ.500 பரிசு பெற்று, விகடன் இணையதளத்தில் வெளியான சிறுகதை... அனுராதா ஜெய்ஷங்கர் எழுதிய ‘லவ் யூ ஹரிணி.’
பரிசு ரூ.500 பெறும் படைப்பு!
கதையில் இருந்து...
``இது புஸ்தகம்மா, பொம்மை இல்ல. காதைத் திருகிற மாதிரி பக்கத்தை மடிச்சு விடறது, மூச்சு முட்டற மாதிரி பக்கத்தை வேக வேகமாகப் புரட்டறது , அலங்கோலம் பண்ற மாதிரி அங்கங்க எழுதறது, அதுக்கு உயிர் போற மாதிரி தொப்புன்னு தூக்கிப் போடறது... அப்படியெல்லாம் பண்ணலாமாம்மா? ஒரு புத்தகத்தை எழுதற ஒவ் வொருத்தரும் எவ்வளவு சிந்தனையை கொடுத்து எழுதி இருப்பாங்க, அவங்க உயிரோட ஒரு சொட்டு அந்தப் புத்தகத்தில இருக்காதாம்மா?" என்றாள் ஹரிணி.
வித்யா மிரண்டு போனாள். 13 வயசுக் குழந்தை பேசு கிற பேச்சா இது? கடவுளே, இவளுக்கு சாதாரணமான புத்தியை கொடுத்திருக்கக் கூடாதா? எல்லா குழந்தை களையும் போல், வயதுக்கு ஏற்ற மாதிரி உடையிலும் நடையிலும் ஆர்வத்துடன், தோழிகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிற மாதிரி இருக்கக்கூடாதா என்று மனதுக்குள் மருகினாள் வித்யா.
இந்தக் கதையை https://bit.ly/3WJjda2 லிங்க்கில் முழுமையாகப் படிக்கலாம்.
வாசகர்களே... நீங்களும் எழுதி அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
வலைதள சிறுகதை
அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com