
தமிழ்நாட்டுக்கு வந்தா மட்டும் தமிழை வளர்க்கணும்கிறீங்க, பெருமையா பேசுறீங்க. இங்கிருந்து போன அடுத்த நாளே இந்தியைத் திணிக்கிற வேலையைப் பார்க்குறீங்களே
ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@arulrajmv1
ஸ்டாலின்: இந்தக் குல்லாவோட உங்களைப் பார்க்கும்போது எனக்கு நேரு ஞாபகம் வருது.
மோடி: எனக்கு இந்தக் குல்லாவைப் போட்டவுடனே நேரு உருவாக்குன பொதுத்துறை நிறுவனம் இன்னும் என்னென்ன மிச்சம் இருக்குன்னு யோசனை வருது.
@LAKSHMANAN_KL
ஸ்டாலின்: நாட்டுல பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வெல்லாம் எப்பதான் சரியாகும் ஜி?
மோடி: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வெல்லாம் சரியாகும்போது!
@RahimGazzali
மோடி: என்னைப் பற்றி மற்றவர்கள் பேசும் அவதூறெல்லாம் எனக்குச் சத்துணவு மாதிரி.
ஸ்டாலின்: அப்போ தமிழ்நாட்டுப் பக்கம் அடிக்கடி வாங்க... சத்துணவு போட்டு ‘முட்டை’யும் தருவோம்.
@NedumaranJ
ஸ்டாலின்: தமிழ்நாட்டுக்கு வந்தா மட்டும் தமிழை வளர்க்கணும்கிறீங்க, பெருமையா பேசுறீங்க. இங்கிருந்து போன அடுத்த நாளே இந்தியைத் திணிக்கிற வேலையைப் பார்க்குறீங்களே. நியாயமா ஜி?
மோடி: இதுக்குப் பேர்தான் இரு மொழிக் கொள்கை ஜி!
@saravankavi
மோடி: ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருந்தது. அப்புறம் போகப் போகப் பழகிடுச்சு.
ஸ்டாலின்: எது ஜி?
மோடி: தமிழ்நாட்டுல தாமரை மலராதுங்கறது.
@manipmp
ஸ்டாலின்: உங்க ஃபிட்னெஸ் ரகசியம் என்ன ஜி?
மோடி: காலைல 2 கிலோ வசவு... மதியம் 1 கிலோ விமர்சனம்... இரவு முக்கா கிலோ அவதூறு.இடையில அப்பப்ப கொஞ்சம் மூணும் கலந்த ஜூஸ்!
@DevAnandR155
ஸ்டாலின்: உங்களுக்கு ஏன் காந்தியைப் பிடிக்கிறதில்லை?
மோடி: மற்ற விழாக்களுக்குப் போனா, எழுபத்தைந்து லட்ச ரூபாய் கோட் போடலாம். காந்தி சம்பந்தமான விழாக்களுக்குப் போனா வெறும் கதர் ஜிப்பாவும், காந்தி குல்லாவும்தானே காஸ்ட்யூம். அதான்.
M Peter Francisca
மோடி: இப்ப தூக்கம் எப்படி ஜி?
ஸ்டாலின்: கட்சியில என்னைத் தவிர எல்லாரும் நல்லாத் தூங்குறாங்க.
Ravindran Kannan
மோடி: எப்படியாவது காங்கிரஸை தி.மு.க கூட்டணியிலிருந்து பிரிக்க வேண்டும் என்று முயல்கிறோம். ஆனால், முடியவில்லையே?
ஸ்டாலின்: எங்களாலேயே முடியலை. உங்களால எப்படி முடியும்?
Deva Rakki
மோடி: மைசூரில் கொடி அசைத்துத் தொடங்கிவைத்த ‘வந்தே பாரத்’ ரயில் சென்னைக்கு வந்துருச்சா?
ஸ்டாலின்: ‘கோமாதா’ குறுக்க வராம இருந்தா, வந்திருக்கும்.
VKarthik
ஸ்டாலின்: ஜி இந்த கெட்டப்ல நீங்க நேரு மாதிரியே இருக்கீங்க.
மோடி: நீங்ககூடத்தான் இந்த கெட்டப்ல கெஜ்ரிவால் மாதிரியே இருக்கீங்க.
ஸ்டாலின்: சரி விடுங்க... மாறி மாறி குல்லா போட்டுக்க வேணாம்!
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.