அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

போட்டோ தாக்கு

உதயநிதி - சேகர் பாபு
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி - சேகர் பாபு

அடுத்த படத்துக்கு யாருமே நம்ப முடியாத அளவுக்கு ஒரு கதை வேணுமேண்ணே!

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

உதயநிதி - சேகர் பாபு
உதயநிதி - சேகர் பாபு

TWITTER

@parveenyunus

உதயநிதி: என்னது... `கலகத் தலைவன்’ படம் இன்னும் பாக்கலியா?

சேகர் பாபு: ‘பட்டத்து இளவரசன்’ உங்க படம்னு நெனச்சு அதைப் போய் பார்த்தேன் சின்னவரே!

@saravankavi

சேகர் பாபு: கோயில்கள்ல அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலையை மாற்ற வேண்டும் தம்பி.

உதயநிதி: ஓகே... ஓகே... ஆனா அதையெல்லாம் அங்கேயே நிறுத்திக்கங்க. கட்சியிலல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.

@parveenyunus

உதயநிதி: `லவ் டுடே’ படத்துல மாதிரி, நாம மொபைலை மாத்திக்கலாமாண்ணே?

சேகர் பாபு: வேணாம் சின்னவரே... நான்

அ.தி.மு.க-வில் இருந்தப்ப தளபதியைத் திட்டிப் போட்ட மெசேஜெல்லாம் அதுல இருக்கும்.

@NedumaranJ

சேகர் பாபு: சின்னவரே... ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா விவகாரத்துல ஆளுநருக்கு ஆதரவா அறிக்கைவிட்டிருக்கிறாரே அண்ணாமலை?

உதயநிதி: ஒரு ரிட்டையர்டு ஐபிஎஸ்-ஸோட மனசு ஒரு ரிட்டையர்டு ஐபிஎஸ்-ஸுக்குத்தானே தெரியும்.

@parveenyunus

உதயநிதி: ஏன் கையைவெச்சு வாயை மூடிக்கிறீங்கண்ணே?

சேகர் பாபு: அமைச்சர்கள் நாங்க பேசுனாத்தான் உங்கப்பாவோட தூக்கம் கெட்டுப்போகுதே..!

@rishivandiya

உதயநிதி: அடுத்த படத்துக்கு யாருமே நம்ப முடியாத அளவுக்கு ஒரு கதை வேணுமேண்ணே!

சேகர் பாபு: அப்போ... நீங்க சீமான்கிட்டதான் கேட்கணும் தம்பி!

@manipmp

சேகர் பாபு: ‘வாரிசு’ இருக்க... ‘துணிவு’ ஏன் வாங்கினீங்க?

உதய்: வாரிசு அரசியல்னு சொல்லிடுவாங்க. அதான் துணிஞ்சு முடிவெடுத்துட்டேன்!

@Kirachand4

உதயநிதி: கோயில் நிலங்களை ஆக்கிரமிச்சவங்க கிட்டருந்து மீட்கும் வேலையெல்லாம் முடிஞ்சுருச்சாண்ணே?

சேகர் பாபு: நம்ம கட்சிக்காரங்ககிட்டருந்து மீட்குறதே பெரும் பிரச்னையா இருக்கே தம்பி!

@RahimGazzali

உதயநிதி: அமைச்சர்கள் எல்லாரும் என்னை அமைச்சராக்கணும்னு சொல்றாங்கண்ணே!

சேகர் பாபு: அப்படிச் சொல்றவங்ககிட்ட ‘உங்க அமைச்சர் பதவியை எனக்கு விட்டுக்கொடுக்க முடியுமா?’ன்னு கேட்டுப்பாருங்களேன். செம காமெடியா இருக்கும்.

@LAKSHMANAN_KL

சேகர் பாபு: கரன்ட் மினிஸ்டர்ஸ்ல எக்கச்சக்கமா சம்பாதிக்கிறது யாரு தம்பி?!

உதயநிதி: ‘கரன்ட்’ மினிஸ்டர்தான்னு ஊருக்கே தெரியுமேண்ணே!

FACEBOOK

Ambai Deva

சேகர் பாபு: அப்பா தூங்கினா எனக்குச் சொல்லுங்க தம்பி.

உதய்: ஏன்?

சேகர் பாபு: அந்த நேரத்துல தைரியமா எதையாவது பேசலாம்னுதான்!

Jiya Sen

உதய்: நடிப்பில் புதிய பரிமாணத்தைக் காட்ட ஆசையா இருக்குண்ணே!

சேகர் பாபு: கவலைப்படாதீங்க தம்பி... அதுக்கு சட்டசபையில நிறைய வாய்ப்பிருக்கு!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan