அரசியல்
அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

உதயநிதி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி - ஸ்டாலின்

என்னது நடிப்பை நிறுத்தப்போறியா... இனிமேதான் மகனே நீ பயங்கரமா நடிக்கணும்.

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

உதயநிதி - ஸ்டாலின்
உதயநிதி - ஸ்டாலின்

TWITTER

@arulrajmv1

உதயநிதி: எனக்கு திடீர்னு அமைச்சர் பதவி கொடுத்து ‘வாரிசு’ அரசியல்னு பேசவெச்சீங்க பார்த்தீங்களா... உங்களுக்கு ‘துணிவு’ அதிகம்தாம்ப்பா!

@parveenyunus

உதயநிதி: எந்தத் தகுதியைவெச்சு என்னை அமைச்சராக்குனீங்கப்பா?

ஸ்டாலின்: ‘பாபா’ ரீ-ரிலீஸை ரெட் ஜெயன்ட் வாங்குனா லாஸ் ஆகும்னு தெரிஞ்சு வாங்காம விட்டியே... அந்தச் சாதுர்யத்தை வெச்சுத்தான்.

@saravankavi

ஸ்டாலின்: `கலகத்தலைவனா’ நடிச்சது போதும்.

உதயநிதி: இனிமே `கழகத்தலைவனா’ நடிக்கணும்... அதானே!

@Kirachand4

ஸ்டாலின்: உனக்கு ஒதுக்கப்பட்டது விளையாட்டு மேம்பாட்டுத்துறைதான். அதுக்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டை மேம்படுத்தணும்னு அர்த்தம் இல்லை. ஞாபகம் வெச்சுக்கோ... மை டியர் சன். அதை சரத்குமார் பார்த்துப்பார்.

@saravankavi

உதயநிதி: ‘சொல்லாததையும் செய்வோம்’னு தேர்தல் சமயத்தில் ஏன் வாக்குறுதி கொடுத்தீங்கன்னு இப்ப எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கறப்பதான் புரியுது டாடி.

FACEBOOK

Ravikumar Krishnasamy

உதயநிதி: அப்பா... என்ன சொல்லி பதவி ஏற்கணும்?

ஸ்டாலின்: எதையெல்லாம் நாம செய்ய மாட்டோமோ... அதையெல்லாம் சொல்லிப் பதவி ஏற்கணும்.

VKarthik

ஸ்டாலின்: அனைவருக்குமான வளர்ச்சியாகத்தான் ‘திராவிட மாடல்’ வளர்ச்சி இருக்கணும் மகனே.உதயநிதி: சரி டாடி... நம்ம குடும்பத்திலுள்ள அனைவருக்கும்தானே?

எம்.கல்லூரி ராமன் மாலு

ஸ்டாலின்: அமைச்சரான பிறகு, திராவிட மாடல் ஆட்சியைப் பற்றி மீட்டிங் போட்டு மக்களுக்கு நீ விளக்கணும் தம்பி.

உதய்: அதெல்லாம் தேவையில்லை டாடி. நீங்க என்னை அமைச்சராக்குனதுதான் திராவிட மாடல் ஆட்சினு மக்களுக்குத் தெளிவா இப்பவே புரிஞ்சிருக்கும்.

VKarthik

உதயநிதி: இனிமே நான் நடிக்கிறதை நிறுத்திடுறேன்ப்பா.

ஸ்டாலின்: என்னது நடிப்பை நிறுத்தப்போறியா... இனிமேதான் மகனே நீ பயங்கரமா நடிக்கணும்.

Sanjeevi Bharathi

ஸ்டாலின்: இனி உன் கவனம் அரசியலில்தான் இருக்கணும் மகனே.

உதயநிதி: டாடி... அப்போ சினிமா?

ஸ்டாலின்: அது பொழச்சுப் போகட்டும் போ!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.