
பின்னாடி வர்றவங்கல்லாம் பொதுமக்கள்தானே... காங்கிரஸ் கட்சியினர் இல்லையே?
ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!
@parveenyunus
கனிமொழி: நடைப்பயணத்தை சென்னை சத்தியமூர்த்தி பவன்லருந்து ஏன் தொடங்கல?
ராகுல்: ஆரம்பமே அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தக்களறியா இருக்க வேணாமேன்னுதான் மேடம்.
@amuduarattai
கனிமொழி: இந்த நடைப்பயணத்தின் முடிவுல என்ன பலன் கிடைக்கும்னு நினைக்கிறீங்க ஜி?
ராகுல் காந்தி: இந்த ஜென்மத்துல மட்டுமில்லை, ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு சுகர் வராது.
@RavindranRasu
கனிமொழி: ஜி... ஏன் இடது கையை பேன்ட் பாக்கெட்டுல வெச்சு மறைச்சுக்குறீங்க?
ராகுல் காந்தி: நான் என்ன வாட்ச் கட்டியிருக்கேன்னு யாரும் பார்க்கக் கூடாதுன்னுதான்!
@parveenyunus
ராகுல்: இந்த நடைப்பயணத்தால பிரதமர் ஆயிடுவேனா மேடம்?
கனிமொழி: அப்படிப் பார்த்தா வைகோ அண்ணன் நடந்த நடைக்கு அமெரிக்க அதிபராவே ஆகியிருக்கணுமே!
@LAKSHMANAN_KL
ராகுல்: ஆமா... அடுத்ததா... ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ ஒரு ஆக்ஷன் படம் எடுக்கப்போறாங்களாமே... எங்கே ஷூட்டிங்?
கனிமொழி: அடிதடிக்கு ஏற்ற சத்தியமூர்த்தி பவன்லதான்.
@LAKSHMANAN_KL
கனிமொழி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே பேரை எதுக்கு டிக் அடிச்சீங்க..?
ராகுல்: பேருக்குத்தான்..!
@saravankavi
கனிமொழி: பின்னாடி வர்றவங்கல்லாம் பொதுமக்கள்தானே... காங்கிரஸ் கட்சியினர் இல்லையே?
ராகுல் காந்தி: அட ஆமா... எப்படி கரெக்டா சொல்றீங்க?
கனிமொழி: கோஷ்டிகளா இல்லாம எல்லாரும் ஒண்ணா வர்றாங்களே?!
Ravikumar Krishnasamy
கனிமொழி: இவ்வளவு தூரம் நடந்ததுல மக்களைப் பத்தி என்ன தெரிஞ்சுக்
கிட்டீங்க?
ராகுல்: அத்தனை பேரும் செல்ஃபி எடுக்குறதுல கில்லாடிங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்.
Ravikumar Krishnasamy
ராகுல்: என்னமோ தெரியலை... ஒரே குழப்பமா இருக்கு.
கனிமொழி: ஒண்ணும் கவலைப் படாதீங்க. கமல் வந்துட்டுப்போனாலே அப்படித்தான் இருக்கும்.
ரஹீம் கஸ்ஸாலி
கனிமொழி: பா.ஜ.க-வை ‘துணிவு’டன் எதிர்க்கும் `வாரிசே’-ன்னு பேனர் வெக்கச் சொல்லிட்டேன். தல, தளபதி ரசிகர்களையும் கவர் பண்ற மாதிரி ஆச்சு.
Jiya Sen
ராகுல்: அப்பா இருந்தா எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது மேடம்.
கனிமொழி: எனக்கும் அதேதான் ராகுல் சார்.
M Peter Francisca
ராகுல்: உதயநிதி உங்களைவிட ஜூனியர்தானே மேடம்?
கனிமொழி: நடிப்பில் அவர் எனக்கு சீனியர் ராகுல் சார்!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan