Published:Updated:

போட்டோ தாக்கு

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

தொகுதிப் பக்கம் வரவும். தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது.

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

FACEBOOK

Ram Aathi Narayenan

‘யார்ரா அது... ‘சின்னம்மாவைப் பார்த்தா எப்படி தொபுக்கடீர்னு கீழே விழுவீங்க? செய்து காட்டவும்’னு கேட்டிருக்குறது?’

Mani Pmp

தொகுதிப் பக்கம் வரவும். தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது.

Ravikumar Krishnasamy

‘போச்சுடா! டெல்லியிலருந்து இந்தியில எழுதி அனுப்பிட்டாங்களா? வழக்கம்போல ஏதாவது சொல்லிவைப்போம்!’

அதிரை புகாரி

‘சசிகலாவை அதிகம் விமர்சிக்காமல் பேசவும்’னு எழுதிட்டு கீழே பெயர் போடாம இருக்கே?

அநேகமாக இது ஓ.பி.எஸ் வேலையாத்தான் இருக்கும்.

சு.பிரசாத் பெருந்துறை

படித்த உடன் கிழித்துவிடவும்

‘சின்னம்மா ரிலீஸ்.’

TWITTER

@kayathaisathya

தேர்தல் முடிந்து சும்மாதானே இருப்பீங்க... ‘பிக் பாஸ்’ அடுத்த சீஸனில் கலந்துகொள்கிறீர்களா?

- இப்படிக்கு கமல்ஹாசன்

@RajaAnvar_Twits

பட்ஜெட் பற்றி பாராட்டி நாலு வார்த்தை மட்டும் பேசவும்.

இப்படிக்கு,

தலைமை.

@LAKSHMANAN_KL

‘என்னடா இது... கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொண்ணும் கேட்டிருக்கிற தொகுதிகளோட எண்ணிக்கையைக் கூட்டினா மொத்தம் 432 தொகுதிகள் வருதே?!’

@RajaAnvar_Twits

இனிமேல் என்னுடை சினிமா பாடல்களைத் தயவுசெய்து பாட வேண்டாம்.

இப்படிக்கு,

எம்.ஜி.ஆர்.

@poonasimedhavi

அப்பா, வரும்போது மறக்காம எம்.எல்.ஏ சீட் வாங்கிட்டு வரவும்.

அன்புடன்

ஜெயவர்தன்.

@LAKSHMANAN_KL

`நான் மீன்வளத்துறை அமைச்சர்தானே... இதுல என்ன ‘மீம்’வளத்துறை அமைச்சர்னு போட்டிருக்கு?!’

@RajaAnvar_Twits

உங்கள் கட்சிக்கு ஆட்கள் தேவைக்கு அணுகவும்.

இங்ஙனம்,

நாம் தமிழர் கட்சி.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.