
தம்பி... இ.பி.எஸ் அணியினர் வந்துட்டாங்களாம்... அவங்களைச் சந்திக்காம வெளியே போக வேற பாதை ஏதும் இருக்கா?
ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!
@parveenyunus
அண்ணாமலை: ஃபிளைட்ல எப்பவாவது எமர்ஜென்சி கதவைத் தொறந்திருக்கீங்களா?
ஓ.பி.எஸ்: இல்ல... எங்க கட்சி ஆபீஸ் கதவைத்தான் கடப்பாரையால இடிச்சுத் தொறந்திருக்கேன்.
@Vkarthik_puthur
அண்ணாமலை: அ.தி.மு.க-வுல உங்களுக்கே ஆதரவு இல்ல. எப்படிண்ணே மனசாட்சியே இல்லாம எங்களுக்கு ஆதரவு தர்றேன்னு சொல்றீங்க..?
ஓ.பி.எஸ்: மனசாட்சியை பா.ஜ.க-கிட்ட அடகுவெச்ச தைரியத்துலதான் தம்பி.
@saravankavi
அண்ணாமலை: பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறையே இருக்காது.
ஓபிஎஸ்: அறநிலையத்துறை மட்டுமா... எந்தத் துறையுமேதான் இருக்காதே... எல்லாத்தையும்தான் தனியாருக்கு வித்துடுவீங்களே!
@Vkarthik_puthur
அண்ணாமலை; ‘ஈரோட்ல’ நீங்களே நில்லுங்கண்ணே... உங்களுக்கு வாய்ப்பு அருமையா இருக்கு.
ஓ.பி.எஸ்: ஈரோட்லயா... இல்ல, நடுரோட்லயா?
@amuduarattai
அண்ணாமலை: என் வழி... தனி வழி...
ஓ.பி.எஸ்: எது... ஏரோபிளேன்ல இருக்குமே அந்த எமர்ஜென்சி வழியா தம்பி?!
@RahimGazzali
ஓ.பி.எஸ்: பேசாம ஈரோட்டுல நீங்களே நில்லுங்க தம்பி. தோத்துடுவீங்க. நல்லதாப்போயிரும்.
அண்ணாமலை: தோத்தா எப்படிண்ணே நல்லதாகும்?
ஓ.பி.எஸ்: தோத்தாத்தானே எல்.முருகன் மாதிரி மத்தியில உங்களையும் அமைச்சராக்குவாங்க.
@DevAnandR155
ஓ.பி.எஸ்: தம்பி... இ.பி.எஸ் அணியினர் வந்துட்டாங்களாம்... அவங்களைச் சந்திக்காம வெளியே போக வேற பாதை ஏதும் இருக்கா?
அண்ணாமலை: ஒரு ‘எமர்ஜென்ஸி எக்ஸிட்’ இருக்கு. உங்ககிட்ட ‘ஸ்க்ரு டிரைவர்’ இருக்கா?
VKarthik
அண்ணாமலை: அண்ணே... நீங்க பா.ஜ.க சார்பா போட்டியிட்டா போதும். ஜெயிக்கக்கூட வேணாம்.
ஓ.பி.எஸ்: பின்ன... பா.ஜ.க சார்பா போட்டியிட்டா எப்படிப்பா ஜெயிக்க முடியும்?
Uzhavan Navaneetha Krishnan
அண்ணாமலை: பயப்படாதீங்கண்ணே... உங்க ஆடியோ, வீடியோ எதுவும் என்கிட்ட இல்ல.
Deva Rakki
ஓ.பி.எஸ்: `ரஃபேல் வாட்ச்சுக்கான பில்லை ஏப்ரல் மாசம் தருவேன்’னு நீங்க சொன்ன மாதிரி, `நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு வேட்பாளரை அறிவிப்பேன்’னு சொல்லிடவா?
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan