அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டோ தாக்கு

என்ன ‘விவசாயி’ சார்... நாலு வருஷமா செம ‘அறுவடை’ போலிருக்கு..?!

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

FACEBOOK

@absivam

“என் விடுதலையே உங்களுக்கெல்லாம் பிடிக்கலை. நீங்களா ஏழு பேர் விடுதலைக்கு முயற்சி செய்யறீங்க?!”

@LAKSHMANAN_KL

சசிகலா: ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் எப்படி நடந்துட்டு இருக்கு?!

இ.பி.எஸ்: எங்கே நடந்துட்டு இருக்கு... அதுவும் எங்களை மாதிரி ‘தவழ்ந்துட்டு’தான் இருக்கு சின்னம்மா!

@LAKSHMANAN_KL

சசிகலா: என்ன ‘விவசாயி’ சார்... நாலு வருஷமா செம ‘அறுவடை’ போலிருக்கு..?!

@RajaAnvar_Twits

“ADMK-வா கொடுத்துட்டுப் போனேன்... இப்ப MODIMK-வா மாத்தி வெச்சிருக்கீங்க!”

@krishmaggi

இ.பி.எஸ்: வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறோம்... நன்றி, வணக்கம்!

TWITTER

நடராஜன் பிரபாகரன்

சசிகலா: நான் ஊர்ல இல்லாதப்போ... நாலு பேரு நாலுவிதமா பேசுனாங்கன்னு சொன்னாங்க. அந்த நாலு பேரு நீங்கதானா?

மு.ரா.விவேக்

“அப்புறம்... நாங்க விளையாட்டா பேசினதையெல்லாம் நீங்க உண்மைன்னு நம்பிடீங்க!

ஐயோ... ஐயோ...”

சு.பிரசாத், பெருந்துறை.

“வணக்கம்வெக்கிறது எப்படிங்கிற கிளாஸ் இன்னிக்கு முடிஞ்சுது. நாளைய கிளாஸ், குப்புற விழுந்து வணங்குவது எப்படினு... ஓகே?”

துடுப்பதி வெங்கண்ணா

எடப்பாடி: நாங்க அண்ணா கொடிக்குத்தான் தலை வணங்கினோம்... அந்த நேரம் பார்த்து இந்தம்மா வந்துட்டாங்க. ஹி... ஹி...

Ram Aathi Narayenan

சசிகலா: எங்கேய்யா... என்னை எதிர்த்து பேட்டி கொடுத்த ஜெயக்குமாரும் சி.வி.சண்முகமும்?

வேலுமணி: அப்படியே உங்க பொற்பாதத்தைக் கொஞ்சம் குனிஞ்சு பாருங்க சின்னம்மா!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan