அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சீமான்

அங்கே பாகிஸ்தான்மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினோம் என்று அவர்கள் கூறினால் கண்ணைத் திறந்துகொண்டு நம்புகிறார்கள்.

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@absivam

``நான் ஆட்சியில இருந்திருந்தா... இந்நேரம் ஒவ்வொருத்தனுக்கா தடுப்பூசி போட்டு நேரத்தை வீணாக்கியிருக்க மாட்டேன். அப்படியே வேக்சினை எடுத்து வானத்துலே தூவி விட்டுருப்பேன்..!”

@San8416

“இஸ்ரேல் விமானம்தான்... நான் இருக்கறது தெரியாம வந்துட்டானாம். அதான் மன்னிப்பு கேட்டுட்டுப் போறான்... புஹாஹாஹா...”

@LAKSHMANAN_KL

சீமான்: அதோ நிற்கிறதே அந்தப் புறா, இலங்கையிலிருந்து எனக்குத் தூது கொண்டு வந்திருக்கும் புறா!

தம்பிகள் (மைண்ட் வாய்ஸ்): ஆகா... அண்ணனுக்கு லஞ்ச் மெனு ரெடி ஆகிடுச்சு போலிருக்கே..?!

@JaNeHANUSHKA

“அங்கே பாகிஸ்தான்மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினோம் என்று அவர்கள் கூறினால் கண்ணைத் திறந்துகொண்டு நம்புகிறார்கள். நான் அங்கே ஈழ மண்ணில் பாராசூட்டில் குதித்தேன் என்று கூறினால் கண்ணை மூடிக்கொண்டு கலாய்க்கிறார்கள்!”

@RavindranRasu

“தம்பிகளா, எனக்கு மேல யாரும் இருக்கக் கூடாது... கீழ இறங்குங்க!”

FACEBOOK

Kavi Chennappan

“யார்றா அது... ‘சீமான்தான் வர்றாரு... கட்டுக்கதை சொல்லப்போறாரு’ன்னு பாட்டுப் போடுறது!?”

Uzhavan Navaneetha Krishnan

“முதன்முதலா மயில் மேல ஏறி ஆகாயத்துல பறந்தது நம்ம முப்பாட்டன் முருகன்தான். ஆனா, விமானத்தைக் கண்டுபிடிச்சது ஏதோ ரைட் சகோதரர்களாம். எப்படி நம் இனத்தை ஏமாத்திவெச்சிருக்காங்க பாருங்க!”

Pamaran Paramaguru

“நான் மட்டும் ஆட்சிக்கு வந்தேன்னா... அதோ தெரியும் நமது விமான எல்லையில், இலங்கை விமானத்துக்கு மட்டுமல்ல, இந்திய விமானம் நுழையவும் தடைவிதிப்பேன்!”

தேனா லட்சுமி மதுரை

“அடுத்த தேர்தல்ல வேட்பாளர் தேர்வு நிலாவுலதான் நடக்கப்போகுது. அங்க இருக்கிற என்னோட பாட்டி இப்பவே அதுக்கான வேலைகளை ஆரம்பிச்சிடுச்சு.”

Thullukutti

“அதோ தெரியுதே சூரியன்... அதுக்குக் கொஞ்சம் கீழ வரைக்கும் அண்ணன் பிரபாகரன் என்னை அவருடைய படகில் அழைத்துச் சென்றார்!”

C P Senthil Kumar

“பிரதமராக இருப்பவர் அடிக்கடி வடை சுடுகிறார்... நானும் வடை சுடுகிறேன்... அப்போ என்ன அர்த்தம்... நானும் ஒருநாள் பிரதமர் ஆவேன்தானே?”

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan