அரசியல்
Published:Updated:

போட்டோ தாக்கு

பிரேமலதா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரேமலதா

பிரேமலதா மைண்ட் வாய்ஸ்: லட்சக்கணக்கான தம்பிகளை வெச்சுக்கிட்டு சீமான் பரபரப்பா கட்சியை நடத்துறார்

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

பிரேமலதா
பிரேமலதா

TWITTER

@LAKSHMANAN_KL

``கட்சியில் இருந்தவரைக்கும் ‘அண்ணியார்’ என அன்போடு அழைத்தவர்களெல்லாம்... கட்சியைவிட்டுச் சென்றவுடன் ‘அண்ணி யார்?’ என்று கேட்பதைப் பார்க்கும்போது, எனது ரத்தம் கொதிக்கிறது!’’

@JaNeHANUSHKA

“கூட்டணி அமைக்க யாரும் அழைப்பதும் இல்லை... கூட்டணி அமைக்கச் சென்றாலும் எவரும் கேட்டைத் திறந்து உள்ளே அனுமதிப்பதும் இல்லை. இதைத்தவிர நாங்கள் தனித்துப் போட்டியிடுவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை!”

@RahimGazzali

‘‘மஞ்சள் நிறம் எங்களுக்கும் சொந்தமானது. நான் கட்டியிருக்கும் மஞ்சள் நிறச் சேலையைப் பார்த்து, பா.ம.க-வினர் குறுக்கே புகுந்து அஞ்சு கோடி நஷ்டஈடு கேட்கக் கூடாது என்று எச்சரிக்கிறேன்...’’

@LAKSHMANAN_KL

‘‘அடுத்ததாக... தி.மு.க-வில் வாரிசுகளின் ஆதிக்கம் பற்றி விஜயபிரபாகரன் அவர்கள் பேசுவார் என்பதை...’’

@IamUzhavan

மேடையிலிருப்பவர் மைண்ட் வாய்ஸ்: என்னடா இது... அன்னபூரணிக்கு வந்த கூட்டம்கூட அண்ணியாருக்கு வரலை!

@balasubramni1

‘‘பல வில்லன்களை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய எங்கள் கேப்டனிடம் பொறுப்பைக் கொடுத்திருந்தால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எப்போதோ கண்டுபிடித்துக் கைதுசெய்திருப்பார்!’’

@parveenyunus

பிரேமலதா மைண்ட் வாய்ஸ்: லட்சக்கணக்கான தம்பிகளை வெச்சுக்கிட்டு சீமான் பரபரப்பா கட்சியை நடத்துறார்... ஒரே ஒரு தம்பியை வெச்சுக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே... ஐயய்யய்யோ!

FACEBOOK

VKarthik

‘‘தே.மு.தி.க தொண்டர்களின் நலன் கருதி... ஒமைக்ரான் போன்ற புதிய புதிய தொற்றுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளவே நாம் தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளோம் என்பதை...’’

பார்த்தசாரதி

‘‘நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லையென்றால், விஜய பிரபாகரன் பேச்சைக் கேட்கவேண்டி வரும்!’’

H Umar Farook

‘‘தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்றால், கேப்டன் முதல்வர் ஆகணும்... நான் துணை முதல்வர் ஆகணும்... சுதீஷ் சுகாதாரத்துறை அமைச்சராகணும்... விஜய பிரபாகரன் நிதியமைச்சர் ஆகணும்... சண்முகப் பாண்டியன் பொதுப்பணித்துறை அமைச்சராகணும்!’’

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan