அலசல்
அரசியல்
Published:Updated:

போட்டோ தாக்கு

கே.எஸ்.அழகிரி - ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
கே.எஸ்.அழகிரி - ராகுல் காந்தி

கட்சி ஆபீஸ் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்குனு சொல்றீங்களே எப்படி?

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

கே.எஸ்.அழகிரி - ராகுல் காந்தி
கே.எஸ்.அழகிரி - ராகுல் காந்தி

TWITTER

@saravankavi

ராகுல்: கார்த்தி சிதம்பரம் வரலையா?

கே.எஸ்.அழகிரி: அவருக்கு காளான் பிரியாணி பிடிக்கலையாம். காடை ஃப்ரை சாப்பிட்டுட்டு வர்றேன்னு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியிருக்கார்.

@h_umarfarook

“பாரத் ஜோடா யாத்ராவுக்கு மிஸ்டு கால் கொடுப்பதற்கு பதிலா பா.ஜ.க-வுக்கு மிஸ்டு கால் கொடுத்துட்டேன் போலிருக்கே... ‘கட்சியில் சேர்ந்ததற்கு நன்றி’னு மெசேஜ் வந்திருக்கு!”

@Vkarthik_puthur

ராகுல்: தேர்தலை மனதில்கொண்டு நாங்கள் யாத்திரை நடத்தவில்லை!

கே.எஸ்.அழகிரி (மைண்ட் வாய்ஸ்): ஆமாமா... காங்கிரஸ்னு ஒரு கட்சி இருக்கா, இல்லையான்னு தெரிஞ்சுக்கத்தான் யாத்திரை நடத்துறோம்.

@h_umarfarook

கே.எஸ்.அழகிரி: ஐயய்யோ... பாரத் ஜோடா யாத்ராவில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் 18% ஜி.எஸ்.டி கட்டணும்னு சொல்லி மெசேஜ் வந்திருக்கே!

@LAKSHMANAN_KL

ராகுல்: மொபைல்ல என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க ஜி?

கே.எஸ்.அழகிரி: 2024 தேர்தலுக்கு தி.மு.க-வோட தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தை நடத்தணும். அதான் இப்பவே ஆன்லைன்ல கிளிசரின் ஆர்டர் பண்ணிக்கிட்டிருக்கேன் ஜி!

@parveenyunus

அழகிரி (மைண்ட் வாய்ஸ்): நடைப்பயணத்தால ராகுல் பிரதமர் ஆகிடுவாருன்னு சொல்றாங்க. அப்படிப் பார்த்தா வைகோ நடந்த நடைக்கு அமெரிக்க அதிபரால்ல ஆகியிருக்கணும்?!

@balasubramni1

ராகுல்: கட்சி ஆபீஸ் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்குனு சொல்றீங்களே எப்படி?

அழகிரி: புதுப்பட ஷீட்டிங்குகளுக்கு ஆளே இல்லாத கட்டடம் வாடகைக்கு வேணுமாம்!

@amuduarattai

ராகுல்: ஒருத்தர் நடைப்பயணத்துக்கு வராமல் நெட்ஃபிளிக்ஸில் படம் பார்க்கிறார். நடைப்பயணத்துக்கு வந்த ஒருத்தர், மொபைலில் டெம்பிள் ரன் விளையாடுகிறார். பிறகெப்படி காங்கிரஸ் வளரும்?

@DevAnandR155

ராகுல்: இந்த போட்டோவுல கறுப்பா, கொஞ்சம் வில்லங்கமா கார்த்திகூட நிக்கிற தம்பி நம்ம கட்சியில என்னவா இருக்கிறார்?

அழகிரி: அவர் நம்ம கட்சிக்காரர் இல்லை. அவர்தான் அண்ணாமலை... தமிழக பா.ஜ.க தலைவர்.

FACEBOOK

முகம்மது தௌபீக்

அழகிரி: உண்மையிலேயே அவர்லாம் நன்றிகெட்ட மனிதர்தான் ஜி...

ராகுல்: யாரைச் சொல்றீங்க?

அழகிரி: குலாம் நபி ஆசாத்தைத்தான். ஒற்றுமைக்காக எவ்வளவு கஷ்டப்படுறீங்க. மனுஷன் ஒரு லைக்கூட போடலையே!

பார்த்தசாரதி

அழகிரி: நாலஞ்சு யூடியூப் சேனல்காரங்க பிரியாணி செய்ய வர முடியுமான்னு கேட்டிருக்காங்க ராகுல் ஜி.

Pamaran Paramaguru

ராகுல்: நான் வந்த பிறகுதான் போன் போடுவீங்களா, முன்கூட்டியே எல்லா கோஷ்டிகளையும் வரச் சொல்ல மாட்டீங்களா?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan