அரசியல்
அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

பொன்முடி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்முடி, ஸ்டாலின்

“மீதி மூணு முதல்வர்களும் வந்தாத்தான் நாங்க வருவோம்னு சொல்றாங்க தலைவரே!”

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

பொன்முடி, ஸ்டாலின்
பொன்முடி, ஸ்டாலின்

TWITTER

@Kirachand4

பொன்முடி: தலை வலிக்குதா தலைவரே... ஒரு காபி வாங்கிட்டு வரட்டுமா?

ஸ்டாலின்: முதலமைச்சருக்குன்னு சொல்லி ‘ஓசி’ காபி வாங்கிட்டு வந்துடாதீங்க. உங்க கையிலருந்து காசு போட்டு வாங்கிட்டு வாங்க!

@Kirachand4

பொன்முடி: நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு தலைவரே...

ஸ்டாலின்: சொந்த ஐடியாவா... இல்ல, ஓசியில கிடைச்சதா?

@RamAathiNarayen

பொன்முடி: திரும்பின பக்கமெல்லாம் பெட்ரோல் குண்டுவீச்சா இருக்கு தலைவரே.

ஸ்டாலின்: நீங்களும் ஆ.ராசாவும் பேசுற பேச்சு அதைவிட ஆபத்தான குண்டால்ல இருக்கு.

@RamAathiNarayen

மஸ்தான்: தலைவரே... துர்காம்மாவும் மாப்பிள்ளையும் இந்த வாரம் எந்தெந்தக் கோயிலுக்குப் போறாங்கன்னு லிஸ்ட் வந்துருச்சு.வாசிச்சுக் காட்டவா?

ஸ்டாலின்: இருக்கிற பிரச்னை போதாதுன்னு இது வேறயா... படுத்துறாய்ங்களே என்னிய!

@urs_venbaa

பொன்முடி: நான் வேணும்னா, `ஓசியில ஓட்டுப் போட்டவங்க மட்டும் என்னைத் திட்டுங்க’ன்னு சொல்லிடவா தலைவரே?

ஸ்டாலின்: ஏங்க... வாயவெச்சுக்கிட்டு சும்மாருக்க மாட்டீங்களா?

@saravankavi

பொன்முடி: தலைவரே... பெட்ரோல் குண்டு வீசினவங்களை அரை மணி நேரத்துல பிடிச்சுருவேன்னு சொல்றாரே அண்ணாமலை?

ஸ்டாலின்: இதுலருந்தே தெரியலையா... குண்டு வீசுனவன் எங்கே இருக்கான்னு?

@parveenyunus

ஸ்டாலின்: மஸ்தான் என்னத்தைப் பார்த்துக்கிட்டிருக்கார்?

பொன்முடி: உங்களுக்குக் கொடுக்கப்போற துண்டுச்சீட்டுல ‘ஓசி’ங்கற வார்த்தை இருக்குதான்னு தேடிப் பார்த்துக்கிட்டிருக்காரு தலைவரே!

@kayathaisathya

ஸ்டாலின்: இனிமே உங்களுக்கு ஆங்கில எழுத்துகள் 24-தான்!

பொன்முடி: புரியலை தலைவரே...

ஸ்டாலின்: OC-ங்கற ரெண்டு எழுத்தையும் உங்க அகராதியிலருந்தே எடுத்தாச்சு.

FACEBOOK

Ambai Deva

பொன்முடி: என்னை தி.மு.க-வின் ஹெச்.ராஜான்னு சொல்றாங்க தலைவரே.

ஸ்டாலின்: தி.மு.க-வின் செல்லூர் ராஜூவும் நீங்கதான்!

M Peter Francisca

“மீட்டிங்குக்கு ஏன் தொண்டர்கள் கூட்டமே வரலை?”

“மீதி மூணு முதல்வர்களும் வந்தாத்தான் நாங்க வருவோம்னு சொல்றாங்க தலைவரே!”

Jiya Sen

பொன்முடி: நமக்கு முதல் எதிரி யார் தலைவரே?

ஸ்டாலின்: வேற யாரு... நாமதான்.

Ragunathan Swaminathan

“நான் கண்ணைத் தொறக்குறதுக்குள்ள... அரசாங்கம் உங்களுக்குக் கொடுத்திருக்கிற ‘ஓசி’ காருல ஏறி இங்கேயிருந்து ஓடிப்போயிருங்க.”

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.