
``அருண்மொழிவர்மன் கடலில் விழுந்தபோது, 60,000 ஆமைகள்கொண்ட படையைத் திரட்டிக் கொண்டுபோய், அவரைக் காப்பாற்றியது நான்தான்.
ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@saravankavi
“ `பொன்னியின் செல்வன் யாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க... அவங்களாவே கண்டுபிடிக்கட்டும். அதுவரைக்கும் அது நான்தான்கற உண்மையைச் சொல்லப்போறதில்லை.”
@DevAnandR155
“தம்பி ராகுல் காந்தி இன்று மழையில் நனைந்துகொண்டே பேசுகிறார். இதை அன்றே செய்து பார்த்துவிட்டவன் என்ற முறையில் சொல்கிறேன், வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பில்லை!”
@RahimGazzali
“ `பொன்னியின் செல்வன் பார்த்தாச்சா?’ன்னு கேட்கறாங்க. நான் ஏன் பார்க்கணும்... கல்கி அதை நாவலா எழுதும்போது, இலங்கை சம்பந்தமா எந்த சந்தேகம் வந்தாலும் என்கிட்டதான் கேட்பாருன்னு இவங்களுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பேன்?!”
@amuduarattai
``அருண்மொழிவர்மன் கடலில் விழுந்தபோது, 60,000 ஆமைகள்கொண்ட படையைத் திரட்டிக் கொண்டுபோய், அவரைக் காப்பாற்றியது நான்தான். ஆனால், ஐஸ்வர்யா ராய் படத்தைக் காட்டி என்னை இருட்டடிப்பு செய்துவிட்டார் மணி ரத்னம். இது அந்த 60,000 ஆமைகள்மீது சத்தியம்!’’
@Kirachand4
சீமான்: நான் ஆயிரம் பொய் சொன்னாலும், அப்பப்ப ஒண்ணு ரெண்டு உண்மையும் பேசுவேன்.
கூட்டத்தில் ஒருவர்: அதான் உங்க கூட்டத்துக்கு ஆயிரம் பேர் வந்தாலும், ஒண்ணு ரெண்டு பேருதான் உங்களுக்கு ஓட்டுப் போடுறாங்கபோல!
@PG911_twitz
``நான் ஆட்சிக்கு வந்தால்... ஆதித்த கரிகாலன் கொலையிலுள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவேன். இது என் முப்பாட்டன் முருகன்மீது சத்தியம்.’’
@chennappan10
``என்ன... காளான் பிரியாணி வாசனை வருது... ராகுல் காந்தி நடைப்பயணத்தை நம்ம பக்கம் திருப்பிட்டாரா?!’’
@LAKSHMANAN_KL
``ஒவ்வொரு மாசமும் ஐந்தாம் தேதிக்குள் வீட்டு வாடகையை ஒழுங்காகச் செலுத்திவிடுவேன்... இது சத்தியம்.’’
@urs_venbaa
“டேய்... யார்றா அவன்... தமிழ்த் தேசிய பாட்டைப் போடுறான்னா... ‘உன் உதட்டோர செவப்ப...’னு பாட்டுப் போடுறது?!”
@parveenyunus
“எக்கச்சக்கமா கதை சொல்ற ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர்லாம் சந்தோஷமா இருக்காங்க. ஆமைக்கறின்னு ஒரே ஒரு கதையைச் சொல்லிட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கே... ஐயய்யோ!”
Ravikumar Krishnasamy
“உறவுகளே... நான் சொல்வது மட்டுமே உண்மை. உண்மை இல்லையென்றாலும், அதுதான் உண்மை!”
Ambai Deva
``ராஜராஜ சோழன் சிலைக்கு மாடலாக நின்றவன் நான்தான் என்பதைத் தம்பிகளுக்குச் சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்கிறேன்!’’
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.