
தீபாவளி நெருங்கிவிட்டதால், இனியும் என்னால் ‘ஷாப்பிங்’ செய்யாமல் சும்மா இருக்க முடியாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!
@LAKSHMANAN_KL
“நான்கு வருடங்களாகச் சிறையில் நான் காய்கறி பயிரிட்டுக்கொண்டிருந்தபோது... தன்னை விவசாயி எனச் சொல்லிக்கொண்டு, ஒருவர் இங்கே வகைதொகை இல்லாமல் அறுவடை செய்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது...”
@San8416
சின்னம்மா மைக் வாய்ஸ்: நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும்...
மைண்ட் வாய்ஸ்: அதுவும் மொத்தமா எல்லாத்தையும் ஜப்தி பண்றதுக்குள்ள!
@balasubramni1
“ஆடியோவோல் நான்... ஆடியோவுக்காகவே நான்..!
@Vkarthik_puthur
சசிகலா: தீபாவளி நெருங்கிவிட்டதால், இனியும் என்னால் ‘ஷாப்பிங்’ செய்யாமல் சும்மா இருக்க முடியாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
@LAKSHMANAN_KL
ஒருத்தர் கேட்கிறார், நான் என்ன புரட்சி செய்தேன் என்று... சிறையில் இருக்கும்போதே ஷாப்பிங் போனேனே, அது புரட்சி இல்லையா..?!
@Vkarthik_puthur
சசிகலா: என் நடிப்புக்கு ஆஸ்கர் விருது தரலாம் என்றால், ‘என்னை யாருன்னு தெரியாது, என்னை பார்த்ததே இல்லை’ என்று சொல்லும் அவர்கள் நடிப்புக்கு என்ன விருது தரலாம்?!
Adhirai Yusuf
`அம்மா உணவகம்’ பெயர் மாற்றாமைக்கு நன்றி. அப்படியே ‘சின்னம்மா தேநீர் விடுதிகள்’ திறக்க வலியுறுத்துகிறேன்!
Raja Gopal
“சிறையில் நான் மெழுகுவத்தி உருட்டியது பற்றி கேலி பேசியவர்களுக்குத் தெரியாது... அது
அ.தி.மு.க-வுக்கு ‘ஒளிமயமான’ எதிர்காலத்தை உண்டாக்கித் தருவதற்கான ஒத்திகை என்பது!”
Raja Gopal
“இ.பி.எஸ் உட்பட சிலர் எனக்கு எதிராக மாறியதைப் பற்றி, பலர் பலவிதமாகச் சொன்னாலும், ‘தவழ்ந்த’ குழந்தை ‘எழுந்து’ நடப்பதை ரசிக்கும் தாயுள்ளத்தோடுதான் அதை நான் பார்க்கிறேன்!”
துடுப்பதி வெங்கண்ணா
“இந்தப் பச்சைப் புடவை புரட்சித்தலைவி எனக்குக் கொடுத்தது. ஆகவே, கட்சி எனக்குத்தான்!”
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan