ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்! - ஆபீஸ் செல்பவர்களை யோசித்து... ஒரு ஐடியா!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்! - ஆபீஸ் செல்பவர்களை யோசித்து... ஒரு ஐடியா!

சூப்பர் ஐடியா பாஸ்!

சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, திருமணம் முடிந்ததும் போட்டோ எடுப்பது, மொய் வைப்பது என வழக்கமான சடங்குகள் அரங்கேறின. இன்னொரு பக்கம், காலை நேரம் என்பதால் விசேஷம் முடித்துவிட்டு அங்கிருந்து நேரடியாகத் தங்கள் அலுவலகம் செல்பவர்களுக்கு எல்லாம், சாப்பாட்டை பார்சல் செய்து தாம்பூலப் பையில் போட்டுக் கொடுத்தது... வாவ் ஐடியா. நேரம் இருந்தவர்கள் பந்தியில் சாப்பிட, அவசரகதியில் ஆபீஸ் கிளம்புபவர்களுக்கு மட்டும் பார்சல் சாப்பாடு வழங்கிய இந்தப் பழக்கத்தை நம் விசேஷங்களிலும் பரவலாக்கலாமே!

- எம்.அசோக்ராஜா, திருச்சி-15

அனுபவங்கள் ஆயிரம்! - ஆபீஸ் செல்பவர்களை யோசித்து... ஒரு ஐடியா!

இப்படி வேண்டும் ஓர் ஆசிரியை!

பக்கத்து வீட்டு பதின்ம வயதுச் சிறுமி பருவமடையும் வயதில் இருந்தாள். அவள் நீண்ட தொலைவில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கிறாள். அந்தக் குழந்தையின் தாய், எந்த நாளிலும் தன் மகள் பூப்பெய்திவிடலாம் என்ற எதிர்பார்ப்பிலும், ஒருவேளை பள்ளியில், வழியில் என்றால் எப்படிச் சமாளிப்பாள் என்ற கவலை யிலும் இருந்தார். அவள் பள்ளிப் பையில் ஒரு நாப்கினை வைத்து, பூப்பெய்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தி வைக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தார். அதற்கு முன்ன தாக, பள்ளியிலேயே ஒரு நாள் பூப்பெய்துவிட்டாள் சிறுமி. அவள் வகுப்பு ஆசிரியை, அவளை மிக அழகாகக் கையாண்டிருக்கிறார். பள்ளியில் பெண் பிள்ளைகளுக்காக `ஸ்டாக்’ செய்யப்படும் நாப்கினை அவளுக்கு அளித்து, பயன்படுத்த கற்றுக்கொடுத்து, பூப்பெய்தல் பற்றிய அடிப்படை உடலியல் தகவல் களைச் சொல்லி, இனி ஒவ்வொரு மாதமும் இந்த நாள்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும், சுகாதாரம் பேண வேண்டும் என்பதையெல்லாம் விளக்கி, தேவை யற்ற அச்சம், தயக்கத்தை எல்லாம் அகற்றியிருக்கிறார். வீட்டுக்கு போன் பண்ணி தகவல் சொல்லப்பட, அவள் அம்மா சென்று பிள்ளையை அழைத்து வந்தார். நற்செயல்!

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

அனுபவங்கள் ஆயிரம்! - ஆபீஸ் செல்பவர்களை யோசித்து... ஒரு ஐடியா!

தோழியின் புத்திசாலித்தனம்!

என் தோழி ஒருவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். கட்டடம் பாதி முடிந்துள்ள நிலையில் அவரின் உறவினர்கள், தோழிகள் என அவ்வப்போது பலரும் அவருக்கு வீடு கட்ட ஆலோசனைகளை, ஐடியாக்களை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ‘சரிங்க அதையும் பார்க்குறோம்...’ என்று புன்னகையுடன் கூறிய தோழி யிடம், `இதையெல்லாம் உன் வீட்டுல செய்யப்போறியா?’ என்றேன். `நிச்சயமா இல்லை. வீட்டை கட்டும் என் கணவரோட பொருளாதாரம், கையிருப்பு, எங்க வீட்டுக்கு எதெல்லாம் தேவை, எதெல்லாம் தேவை யில்லைனு இதன் அடிப்படையிலதான் நாங்க எங்க வீட்டை கட்டிக்கிட்டு வர்றோம். புது வீடு, கல்யாணம்னா இப்படித்தான் ஆளுக்கொரு ஆலோசனை சொல்வாங்க. அதை இந்தக் காதில் வாங்கி அடுத்த காதில் விட்டுட்டா, நம்ம பட்ஜெட்ல முடிஞ்சிடும். இல்லைன்னா கடனாளி ஆகிடுவோம்’ என்று யதார்த்தமாகப் பேசிய தோழியின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினேன்.

- எஸ்.சித்ரா, சென்னை-64

அனுபவங்கள் ஆயிரம்! - ஆபீஸ் செல்பவர்களை யோசித்து... ஒரு ஐடியா!

அது ஃபிரிட்ஜா, கிடங்கா?

எங்கள் பகுதியில் மாதம் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இணைப்பு துண்டிக் கப்படும். அப்படி ஒருநாளில், ஃபிரிட்ஜை சுத்தம் செய்தேன். உள்ளே இருந்த பொருள்களையெல்லாம் எடுக்க எடுக்க... வந்துகொண்டே இருந்தன. காய்கறிகள், பழங்கள், கிரேவி, பொரியல், மாவு வைத்துள்ள பாத்திரங்கள், பால், தயிர், கூல்டிரிங்க்ஸ் பாட்டில்கள், இதர பொருள்கள் என... இத்தனையுமா நாம் உள்ளே வைத்திருந்தோம் என வைத்த நானே மலைத்துப் போனேன். அதில் நல்ல நிலையில் இருந்தவற்றைவிட, பயன்படுத்த முடியாத நிலையில் வீணாகிப் போயிருந் தவையே அதிகம். இனி இதுபோல் எல்லாவற்றையும் ஃபிரிட்ஜ் உள்ளே தள்ளிவிடக் கூடாது, தேவைக்கு மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அன்று முதல், அன்றன்றைக்குத் தேவை யான காய்கறிகளை மட்டுமே வாங்குவது, தேவையான அளவுக்கு மட்டுமே சமைப்பது, தேவையான நாள்களில் மாவு ஆட்டுவது, தேவையான அளவில் மட்டுமே பழங்கள் வாங்குவது என்று செயல்படுத்தி வருகிறேன். பெரும்பாலும் பால், தயிர், பழங்கள் என மிக மிக அவசியமான பொருள்களை மட்டுமே ஃபிரிட்ஜில் வைக்கிறேன். இப்போது ஃபிரிட்ஜ் பளிச் என்றும், அதிலுள்ள பொருள்கள் ஃப்ரெஷ் ஆகவும் உள்ளன.

- எஸ்.முத்துச்செல்வி, சேலம்-3