ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

உலகம் என் பார்வையில்... பழி ஓரிடம்... பாவம் ஓரிடமா?

பழி ஓரிடம்... பாவம் ஓரிடமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பழி ஓரிடம்... பாவம் ஓரிடமா?

ரொக்கப் பரிசு ரூ.300

உங்கள் உணர்வுடன் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகிவிட்ட ஓர் அனுபவத்தைப் பற்றித் திருத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுங்கள் என்று அறிவித்திருந்தோம். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரொக்கப் பரிசு ரூ.300 பெறுகிறது, இந்த அனுபவப் பகிர்வு...

அன்று அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. கோயிலின் ஓரிடத்தில் ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று, அழுதுகொண்டு நின்றது.

நான் குழந்தையிடம் போய், ``ஏன் பாப்பா அழுவுற?’’ என்றேன். ‘`அம்மாவைக் காணோம் ஆன்ட்டி’’ என்றது.

குழந்தையின் அழுகையைப் பார்த்ததும் மனது கேட்க வில்லை. “வா! அம்மாவைத் தேடிப் பார்ப்போம்” என்று குழந்தையின் கையைப்பற்றி பத்தடி தூரம்தான் நடந்திருப்பேன்.

பின்னாலிருந்து ஒரு பெண் குரல், ‘யமுனா... யமுனா’ என்று கத்துவது கேட்டது. குழந்தையும் `அம்மா' என்று கதறியபடியே தாயிடம் ஓடிச் சென்றது.

உலகம் என் பார்வையில்... பழி ஓரிடம்... பாவம் ஓரிடமா?

குழந்தையை அணைத்துக்கொண்டு ஏற இறங்கப் பார்த்தவர், ‘`எங்கடி கால்ல போட்டிருந்த கொலுசைக் காணோம்’’ என்றார். அடுத்த விநாடி என்னைப் பிடித்துக் கொண்டு ‘`ஐயோ... குழந்தையின் கொலுசை திருடிவிட்டாள்’’ என்று கூச்சலிட ஆரம்பித்தார்.

சிறிது நேரத்துக்குள் கூட்டம் சேர்ந்துவிட்டது. அதில் சிலர், ``ஆமா... இப்பல்லாம் டீசென்டா டிரஸ் பண்ணிட்டுதான் திருடுறாங்க’’ என்று தொடங்கி வாயில் வந்ததையெல்லாம் சொல்லித் திட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஒரு பெண் என் கையைப் பிடித்துவைத்துக்கொண்டு, ‘`சீக்கிரம் போலீஸுக்கு போன் பண்ணுங்க’’ என்று சொல்ல, எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அதற்குள் அந்தக் குழந்தை, “அம்மா! இந்த ஆன்ட்டி கொலுச எடுக்கல. ஒரு மாமாதான் சாக்லேட் குடுத்து கொலுச கழட்டிட்டுப் போனாரு. இந்த ஆன்ட்டி உன்னைத் தேடி கண்டுபிடிக்கலாம்னுதான் என்னைக் கூட் டிட்டு வந்தாங்க” என்று தன் மழலைக் குரலில் சொன்னது.

அந்தக் குழந்தைக்குப் பேசத் தெரிந்ததால் நான் பிழைத் தேன். குழந்தையின் அம்மாவும் என்னிடம் மன்னிப்புக் கேட்க கூட்டம் கலைந்தது.

ஒரு பத்து நிமிடம் ‘திருடி’ என்ற பட்டத்துடன் கூனிக் குறுகி நின்றதை மறக்கவே முடி யாது. அன்று தீர்மானித்தேன்... அநாவசியமாக யாருக்கும் வலுக்கட்டாயமாகச் சென்று உதவி செய்யக்கூடாது என்று.

‘பழி ஓரிடம்...பாவம் ஓரிடம்’ என்ற பொன்மொழி என் வாழ்வில் உண்மையானது!

- சரோஜா ஸ்ரீனிவாசன், பெங்களூரு-5

வாசகர்களே....

நீங்களும் எழுதி அனுப்பலாம்...

அனுப்ப வேண்டிய முகவரி:

உலகம் என் பார்வையில்...

அவள் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com