பயன்படுத்திய துணிமணிகள், பாத்திரங்கள், உடைந்த மரச்சாமான்கள் போன்றவற்றை யாருக்காவது அங்கேயே பயன்படுத்தக் கொடுத்து விடவும்
`தேவைக்கு அதிகமானதை நாடுவதில்லை’, `அவசியத்துக்கும் அதிகமாக வாங்கிக் குவிப்பதில்லை’ என்பதை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதெல்லாம், எதிலெல்லாம், எங்கெல்லாம், எப்படியெல்லாம் பின்பற்றுகிறீர்கள்... அதன் மூலமாக அடைந்த பலன்கள் என்னென்ன? அந்த ரகசியங்களை மற்றவர்களுக்கும் பகிரலாம். தேர்வுபெறும் ஒவ்வொரு பகிர்வுக்கும் ரொக்கப் பரிசு ரூ.300. சிறந்த பகிர்வுக்கு, விகடன் குழும இணையதள ஆறு மாத சந்தா வழங்கப்படும். இதன் மூலம் விகடன் குழுமத்தில் அனைத்து இதழ்கள் மற்றும் பிரீமியம் கட்டுரைகளை டிஜிட்டலில் படிக்க முடியும் என்று அறிவித்திருந்தோம். வாசகர்கள் அனுப்பியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவை...
எதை எடுத்துக்கொள்வது... எதை விடுவது?
சிறப்புப் பரிசு விகடன் குழும இணையதள ஆறு மாத சந்தா
2019-ம் ஆண்டு பெங்களூரில் இளைய மகனுடன் வசிக்க முடிவெடுத்து செல்ல விரும்பிய வேளையில் அவன் போட்ட கண்டிஷன்... `மிகவும் முக்கியமான தேவையான பொருள்களை மட்டுமே எடுத்து வரவும். பயன்படுத்திய துணிமணிகள், பாத்திரங்கள், உடைந்த மரச்சாமான்கள் போன்றவற்றை யாருக்காவது அங்கேயே பயன்படுத்தக் கொடுத்து விடவும்’ என்றபோது ஒரு வாரம் உறக்கமே வரவில்லை. எந்தப் பொருளை எடுத்துக்கொள்வது... எதை விடுவது?

பார்த்துப் பார்த்து ஆசை ஆசையாக வாங்கிய சேலைகள் இரண்டு அலமாரி களில் நிறைந்திருந்தன. மனதைத் தேற்றிக்கொண்டு, துணிமணிகள் பாத்திரங்கள் மரச்சாமான்களை முதியோர் இல்லத்துக்குக் கொடுத்து விட்டேன். அதன் பிறகு எந்த விசேஷத் துக்கும் புடவை, துணிமணிகள் வாங்கினால் அலமாரியில் உள்ள பழைய துணிமணிகளை அப்புறப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டேன். தேவைக்கு அதிகமான பொருள்கள் அடையாமல் வீடும் இப்போது விசாலமாகத் தெரிகிறது. வீட்டைச் சுத்தம் செய்வதும் எளிதாகியிருக்கிறது... வாழ்க மினிமலிசம்!
- சரஸ்வதி பத்மநாபன், சென்னை-51
*****
தேவைகள் குறையும்போது... - ரொக்கப் பரிசு ரூ.300

வாசகர்களே.... நீங்களும் எழுதி அனுப்பலாம்...
அனுப்ப வேண்டிய முகவரி:
வாழ்க மினிமலிசம்!
அவள் விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com