Published:Updated:

`கடனே கூடாது'... Home Loan-க்கு இந்தக் கொள்கை பொருந்தாது. ஏன்?

Home Loan
Home Loan

Home Loan: மொத்தத் தொகையையும் செலுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனை அல்ல. கடனை விரைவாகச் செலுத்தி முடிப்பதால் வருமான இழப்பையும், அரசின் பல சலுகைகளையும் நாம் இழக்கிறோம்.

நடுத்தர வருமானப் பிரிவினர் அல்லது உயர் நடுத்தர வருமானப் பிரிவினரில் சிலர் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியிருப்பார்கள். இவர்களில் பலருக்கு இந்தக் கடன் மிகப்பெரும் சுமையாக, கவலை தருவதாக இருக்கும்.

இதன் காரணமாக, முடிந்தவரை விரைவாகக் கடனைச் செலுத்தி முடித்து, வீட்டுப் பத்திரத்தை வாங்கித் தங்கள் வசம் வைத்துக்கொள்வது என்பது பெரிய லட்சியமாகவே இருக்கும்.

ஆனால், மாதந்தோறும் சம்பளம் வாங்குபவர்களால் கடனை விரைவாகச் செலுத்தி முடிப்பது முடியாத செயலாகவே இருக்கும். தற்போதுள்ள கோவிட்-19 சூழலில் கடன் என்பது கூடுதல் சுமையாக இருக்கும். கையில் பணம் இருக்கும் பலர், வீட்டுக் கடனை முதலில் அடைத்துவிடும் எண்ணத்திலேயே இருக்கிறார்கள்.

தொழில்நுட்பத்தில் மேம்பட்டிருப்பவர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கப் பல வழிகள் உள்ளன. கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப் போவதால், குடும்பத்தில் பணப்புழக்கம் உயர்ந்திருக்கும். ஐ.டி துறையில் அதிக சம்பளத்திலிருப்பவர்கள் கணிசமான தொகையைச் சம்பாதிக்க முடியும்.

வீட்டுக் கடன்
வீட்டுக் கடன்

இதுதவிர, மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலையில் இருப்பவர்களிடம் கணிசமான தொகை இருக்கும். அதனால், `வீட்டுக் கடனிலிருந்து விரைவில் விடுதலை பெற வேண்டும்’ என நினைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.

ஆனால், முதல் சில ஆண்டுகள் கடனைச் செலுத்திவிட்டு, அதைத் தொடர்ந்து மொத்தத் தொகையையும் செலுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனை அல்ல. கடனை விரைவாகச் செலுத்தி முடிப்பதால் வருமான இழப்பையும், அரசின் பல சலுகைகளையும் நாம் இழக்கிறோம்.

`கடன் இருக்கக் கூடாது’ என்பது நல்ல கொள்கைதான். ஆனால், அந்தக் கொள்கை அநாவசியச் செலவுகளுக்கான கடன்களைத் தவிர்ப்பதற்காகவே தவிர, வீட்டுக் கடனுக்கு அல்ல என்பதை அறிந்துகொள்வது அவசியம். சொத்தை உருவாக்கப் பயன்படும் வீட்டுக் கடன் நல்லதுதான்!

> வீட்டுக் கடனை விரைவாகச் செலுத்தி முடிப்பதால் வருமான இழப்பையும், அரசின் பல சலுகைகளையும் நாம் இழப்பது எப்படி?

> ஒருவர் வீட்டுக் கடனை ஐந்து ஆண்டுகளில் செலுத்தி முடிக்கிறார் எனில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான வரிச் சலுகையை இழக்கிறார். எப்படி?

> சம்பாதித்த தொகை அதிகமாக இருக்கிறது; கடனை முன்கூட்டியே முடிப்பது சரியான செயலாக இல்லை என்னும்பட்சத்தில் நாம் என்ன செய்யலாம்?

- இந்தச் சந்தேகங்களுக்கு உரிய உதாரணங்களுடன் தெளிவு தரும் கைடன்ஸ் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > வீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா? - லாப நஷ்டக் கணக்கீடு! https://bit.ly/3ftZEND

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

வீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா? - லாப நஷ்டக் கணக்கீடு!

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு