Published:Updated:

Real Estate: வீடுகளின் விலையை மத்திய அரசு குறைக்கச் சொல்வது நியாயமா?

Real Estate
Real Estate

பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு இப்படி முடங்கிக் கிடப்பதால், வங்கிகளும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குத் தந்த கடன் திருப்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டு, வங்கிகளின் வாராக்கடன் ஏகத்துக்கும் அதிகரித்திருக்கிறது

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்... ''லட்சக்கணக்கான வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக விற்காமல் கிடக்கின்றன. இந்த வீடுகளின் விலையைக் கொஞ்சம் குறைத்து விற்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்குப் பணம் கிடைக்கும். இந்தப் பணத்தைக் கொண்டு புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களில் நீங்கள் இறங்கலாம்'' என்பது அவர் விடுத்த வேண்டுகோள்.

மத்திய அமைச்சரின் கருத்து தவறானது! - டாக்டர் ஆர்.குமார், தலைவர், நவீன் ஹவுஸிங்

''வீடுகளின் விலையைக் குறைக்கச் சொல்லும் மத்திய அமைச்சரின் கருத்து தவறானது. ஸ்டீல், சிமென்ட், நிலம் விலை குறைக்கப்படவில்லை. பத்திரப்பதிவு கட்டணம், கட்டுமானப் பொருள்கள் மீதான வரி, அப்ரூவல் கட்டணம், ரியல் எஸ்டேட் மீதான ஜி.எஸ்.டி என அரசுத் தரப்பில் எதையும் குறைக்காமல் ரியல் எஸ்டேட் விலையைக் குறைக்கச் சொல்வது என்ன நியாயம்?

கடந்த பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் விலை 40% அதிகரித்திருக்கிறது. ஆண்டுக்குச் சராசரியாக 4% மட்டுமே வளர்ச்சி. ஆனால், ரியல் எஸ்டேட் பில்டர்கள் வாங்கிய கடனுக்கு 13-18% வரை வட்டி செலுத்தியிருக்கிறார்கள். பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்-19 பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ரியல் எஸ்டேட்தான். இதில் விலையைக் குறைத்து விற்றால், நஷ்டம் இன்னும் அதிகமாகும்.

தற்போது தேவையைவிட அதிக எண்ணிக்கையில் வீடுகள் விற்பனைக்கு இருப்பதால், விலை ஏற்கெனவே கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில், விலையை மேலும் குறைத்தால், கடும் பாதிப்பு ஏற்படும். வீடு விற்பனை அதிகரிக்க வேண்டுமென்றால் திருப்பிச் செலுத்தும் வீட்டுக் கடன் அசல் தொகை மற்றும் வட்டிக்கு முழுமையாக வரிச் சலுகை அளிக்க வேண்டும். வீட்டுக் கடன் வட்டியை இன்னும் குறைக்க வேண்டும்." என்கிறார் ஆர்.குமார்.

நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > விற்காமல் கிடக்கும் வீடுகள்... விலை குறையாததற்குக் காரணங்கள்...! https://bit.ly/2ULLNKe

Real Estate: வீடுகளின் விலையை மத்திய அரசு குறைக்கச் சொல்வது நியாயமா?

அரசாங்கத்துக்கு என்ன பிரச்னை?

ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்கப்படாத நிலையில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு முடங்கிக்கிடக்கிறது. உதாரணமாக, நம் நாட்டில் மொத்தம் 6.44 லட்சம் வீடுகள் (தனி மற்றும் அடுக்குமாடி வீடுகள்) கட்டப்பட்டுவரும் நிலையில், 78,000 வீடுகள் முழுவதுமாகக் கட்டி முடிக்கப்பட்டு, உடனடியாக விற்பனைக்குத் தயாராக உள்ளன. `இவற்றின் மதிப்பு மட்டுமே ரூ.65,950 கோடி' என்கிறது சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக். தற்போது கட்டுமானம் நடந்துவரும் மொத்த வீடுகளில் இது வெறும் 12% மட்டுமே என்கிறபோது, மீதமுள்ள வீடுகளின் மதிப்பையும் கணக்கிட்டால் இந்தத் துறையில் சுமார் ரூ.2 லட்சம் கோடிக்குமேல் முதலீடு முடங்கிக் கிடக்கிறது.

பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு இப்படி முடங்கிக் கிடப்பதால், வங்கிகளும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குத் தந்த கடன் திருப்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டு, வங்கிகளின் வாராக்கடன் ஏகத்துக்கும் அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனையாகாத நிலையில், புதிதாக நடக்க வேண்டிய கட்டுமான வேலைகள் சுணக்கம் கண்டுள்ளன. இதன் காரணமாக, இரும்பு, சிமென்ட் மற்றும் கட்டடம் கட்டத் தேவையான கட்டுமானப் பொருள்களுக்கான தேவை கணிசமாகக் குறைந்திருக்கிறது. இதனால் பல லட்சம் பேருக்கும் வேலை கிடைப்பது குறைந்திருக்கிறது. வருமானம் குறைந்ததால், மக்கள் செலவு செய்வது குறைந்து, பொருளாதாரம் சுணக்கம் கண்டிருக்கிறது.

கட்டுமானத்துறையில் நீண்டகாலமாக தொய்வு காணப்படுவதை அறிந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது மத்திய அரசாங்கம். வாங்கக்கூடிய விலையிலான வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்ற நோக்கில் பல சலுகைகள் தரப்பட்டதாலும் அடுக்குமாடிக் குடியிருப்பின் தேவை குறையவே செய்தது.

சிக்கல்களிலிருந்து ரியல் எஸ்டேட் துறை மீள வேண்டு மெனில் சில வழிமுறைகளைக் கையாளலாம். அவற்றுடன் விரிவான கவர்ஸ்டோரியை நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > விற்காமல் கிடக்கும் வீடுகள்... விலை குறையாததற்குக் காரணங்கள்...! https://bit.ly/2ULLNKe

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு