Published:Updated:

புதிய வீடு கட்ட சரியான தருணம் இதுதான்... ஏன்? எப்படி?

பொருளாதார மந்தநிலை காரணமாக கட்டுமானப்பொருள்களின் விலை சற்றுக் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, கட்டுமானத்துக்கு உதவும் இரும்புக் கம்பிகள் விலை குறைந்துள்ளது

house
house

எங்கு பார்த்தாலும் பொருளாதார மந்தநிலை பற்றிய பேச்சுகளே அடிபடுகின்றன. இந்த நிலையில், ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. அதுதான், வீடு கட்டுவதற்குத் தேவைப்படும் பொருள்களின் விலை குறைந்திருப்பது. சமீபத்தில் இல்லாத அளவுக்கு வீடுகட்டத் தேவைப்படும் பொருள்களின் விலை குறைந்திருப்பது, வீடு கட்டலாமா என்கிற யோசனையில் இருப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். விரிவாக படிக்க க்ளிக் செய்க.... http://bit.ly/2kpMMB0

பொருளாதார மந்தநிலை நிலவிவரும் இந்தச் சமயத்தில், விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு சில நிறுவனங்கள் பொருள்களின் விலையைக் குறைத்துவிற்கின்றன. கட்டுமானத்துறை சார்ந்த பொருள் களின் விலைச்சரிவு நுகர்வோருக்கு அதாவது, சாமானிய மக்களுக்குச் சாதகமான செய்தியாக பார்க்கப்படுகிறது. வீடு கட்டலாம் என்று முடிவு எடுத்துள்ளவர்கள், தற்போதைய மந்தமான சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி அழகாக வீடு கட்டத் தொடங்கலாம்.

கட்டுமானப்பொருள்களின் விலைச்சரிவு, வங்கிகளின் வீட்டுக்கடன் மீதான வட்டி குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பது மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களின் கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

இந்தச் சூழலில் அவர்களுக்கு வீடு கட்டும் பணியைக் கொடுத்தால் குறைந்த லாப வரம்புக்குள் செய்துமுடிப்பார்கள்.

தற்போது நிலவிவரும் பொருளாதார மந்தநிலையின் விளைவாக, சமீப காலத்தில் கட்டுமானத்துக்குப் பயன்படும் சிமென்ட், ஸ்டீல், மணல், ஜல்லி, கிராவல், செங்கல், தரை ஓடுகள், பெயின்ட், ஜன்னல், கதவுகள், பிளம்பிங், எலெக்ட்ரிகல் போன்ற கட்டுமானப்பொருள் களின் விலை 10% முதல் 15% வரைக்கும் குறைந்திருக்கிறது. இந்தக் கணக்குப்படி பார்த்தால், 1,000 சதுர அடி கட்டுவதற்கு சுமார் ரூ.1.5 லட்சம் வரை செலவு குறைகிறது. எனவே, அடுக்குமாடிக் கட்டடங்கள் உள்பட புதிய வீடுகளின் விலை குறைய வாய்ப்புள்ளது.

"பொருளாதார மந்தநிலை காரணமாக கட்டுமானப்பொருள்களின் விலை சற்றுக் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, கட்டுமானத்துக்கு உதவும் இரும்புக் கம்பிகள் விலை குறைந்துள்ளது. இதன் விலை ஏறாமல் அப்படியே இருந்தாலேகூட அது விலைக்குறைவுக்கு ஒப்பானதுதான்.

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்

தற்போது கட்டுமான வேலைகள் அதிகமில்லாததால், பில்டர்களுக்கு அதிக வேலை இருக்காது. எனவே, இந்தச் சூழலில் அவர்களுக்கு வீடு கட்டும் பணியைக் கொடுத்தால் குறைந்த லாப வரம்புக்குள் செய்துமுடிப்பார்கள். காலம் கடத்தாமல் விரைவாகவும் வேலையை முடித்துத் தருவார்கள். எனவே, புதிய வீடு கட்டுவோருக்கு ஏற்ற தருணமாகத்தான் இதை நான் பார்க்கிறேன்" என்கிறார் நிதி ஆலோசகர் வ.நாகப்பன்

- வீடுகட்டத் தேவைப்படும் பொருள்களின் விலை ஏன் குறைந்தது, அடுக்குமாடி வீடுகள் விலை நிலவரம் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கு முழுமையான விடைசொல்லும் நாணயம் விகடன் கவர் ஸ்டோரியை வாசிக்க > https://www.vikatan.com/news/general-news/the-construction-materials-cost-is-low-is-this-the-right-time-to-build-a-home