Published:Updated:

``எனது ஆடை, மதத்தால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள்” - நடிகை உர்ஃபி ஜாவேத் வேதனை

 உர்ஃபி ஜாவேத்
News
உர்ஃபி ஜாவேத்

மும்பையில் எனது உடையைக் காரணம் காட்டி, வீடு வாடகைக்குக் கொடுக்க மறுக்கிறார்கள் என்று நடிகை உர்ஃபி ஜாவேத் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

``எனது ஆடை, மதத்தால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள்” - நடிகை உர்ஃபி ஜாவேத் வேதனை

மும்பையில் எனது உடையைக் காரணம் காட்டி, வீடு வாடகைக்குக் கொடுக்க மறுக்கிறார்கள் என்று நடிகை உர்ஃபி ஜாவேத் தெரிவித்திருக்கிறார்.

 உர்ஃபி ஜாவேத்
News
உர்ஃபி ஜாவேத்

பிக் பாஸ், டி.வி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் அணியும் ஆடை எப்போதும் மிகவும் வித்தியாசமாகவும், கவர்ச்சியாவும் இருக்கும். சமீபத்தில் அவர் மேலாடை இல்லாமல் முன்பக்கத்தில் தனது முடியை எடுத்துப்போட்டுக்கொண்டு வெளியில் வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதையடுத்து, அவர் மீது பாஜக பிரமுகர் சித்ரா வாக் மும்பை அம்போலி போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் ஜாவேத்துக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

``எனது ஆடை, மதத்தால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள்” - நடிகை உர்ஃபி ஜாவேத் வேதனை

இதையடுத்து, அம்போலி போலீஸில் ஆஜராகி உர்ஃபி ஜாவேத் வாக்குமூலம் கொடுத்தார். அதில் தனது தொழிலுக்கு இது போன்ற ஆடை தேவையாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தற்போது இந்த ஆடை பிரச்னையால் அவருக்கு மும்பையில் வீடு கூட வாடகைக்கு கிடைப்பதில்லை என்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ``மும்பையில் எனக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனது உடையை காரணம் காட்டி முஸ்லிம்கள் தங்களது பகுதியில் வீடு வாடகைக்குக் கொடுக்க மறுக்கின்றனர். நான் முஸ்லிம் என்பதால் இந்துக்கள் தங்களது பகுதியில் எனக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மறுக்கின்றனர். சில வீட்டு உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் மிரட்டல் காரணமாகவும் வீடு கொடுக்க மறுக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உர்ஃபி ஜாவேத்தின் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் உர்ஃபி ஜாவேத்துக்காக வருத்தம் தெரிவித்திருக்கின்றனர். அதோடு இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், தவறானது என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஒருவர் காந்திவலி, போரிவலியில் வீடு பார்ப்பதாக இருந்தால் நான் ஏற்பாடு செய்கிறேன். இந்தப் பகுதியைக் குறைத்து மதிப்பிடவேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.