Published:Updated:

நேதாஜியின் பொக்கிஷங்கள் முதல் அதானியின் அவதாரம் வரை - 2022-ன் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்!

Rewind 2022
News
Rewind 2022

இப்போது படித்தால் கூட, நிகழ்காலத்துடன் பொருத்திப் பார்க்கத் தோன்றும் அப்படிப்பட்ட சில கட்டுரைகள் உங்களுக்காக ஒரே தொகுப்பாக...

Published:Updated:

நேதாஜியின் பொக்கிஷங்கள் முதல் அதானியின் அவதாரம் வரை - 2022-ன் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்!

இப்போது படித்தால் கூட, நிகழ்காலத்துடன் பொருத்திப் பார்க்கத் தோன்றும் அப்படிப்பட்ட சில கட்டுரைகள் உங்களுக்காக ஒரே தொகுப்பாக...

Rewind 2022
News
Rewind 2022
உக்ரைன் போர் ஒரு பக்கம், உ.பி தேர்தல் இன்னொரு பக்கம் என உலகிலும் இந்தியாவிலும் பல பரபரப்பான நிகழ்வுகள் இந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்றன. தமிழகத்துக்கு வெளியே நிகழ்ந்த பல சம்பவங்கள் குறித்த ஆழமான அலசல்களை தொடர்ச்சியாகத் தமிழ் வாசகர்களுக்குக் கொடுத்து வருகிறது விகடன். அவை வெறும் நடப்பு நிகழ்வுகளை விவரிப்பதாக இல்லாமல், அவற்றின் பின்னணி குறித்தும், அவை ஏற்படுத்த இருக்கும் தாக்கங்கள் குறித்தும் விவரிக்கும் கட்டுரைகளாகவே அமைகின்றன. இப்போது படித்தால் கூட, நிகழ்காலத்துடன் பொருத்திப் பார்க்கத் தோன்றும் அப்படிப்பட்ட சில கட்டுரைகள் உங்களுக்காக ஒரே தொகுப்பாக...
நேதாஜி ஃபைல்கள்
நேதாஜி ஃபைல்கள்
The National Archives, New Delhi

வரலாற்றின் பல மர்மங்கள் இன்னும் புதிராகவே இருக்கிறது. டி.பி. கூப்பர் எங்கே? மலேசிய MH 370 விமானத்திற்கு என்ன ஆனது? இந்த பட்டியலில் மிகவும் மூத்தது நேதாஜி குறித்த மர்மங்களும், சர்ச்சைகளும். அவர் குறித்து ஆனந்த விகடன் பதிப்பாளர் தி. முருகன் எழுதிய கட்டுரை...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பொக்கிஷங்கள் எங்கே? மறைக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல்!

சில நாள்கள் உலகப் பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்துவிட்டு இப்போது மூன்றாம் இடத்துக்கு வந்திருக்கிறார் கௌதம் சாந்திலால் அதானி. இரண்டாவது இடமோ, மூன்றாவது இடமோ, அது ஆசியர்கள் யாரும் தொடாத உயரம். பெரும் பணக்காரர்கள் என்றால் டாடா, பிர்லா மட்டுமே என்று நம்பிய இந்தியச் சமூகத்துக்கு அம்பானி பெரும் ஆச்சர்யம். இரண்டே தலைமுறைகளுக்குள் இந்தியாவின் உச்ச இடத்துக்குத் தாவியது அம்பானி குழுமம். அதானியோ தன் வாழ்வின் 40 ஆண்டுக்காலத்துக்குள் இதைச் சாதித்திருக்கிறார்.

இப்படிச் சர்வதேச அளவில் அதிகம் பேசப்பட்ட இந்திய தொழிலதிபர் அதானி குறித்து தெரிந்து கொள்வோம்...

அதானி அவதாரம்!

அதானி அவதாரம்
அதானி அவதாரம்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் தொடங்கிய சர்ச்சை இது, ரேஷன் வரை தொடர்ந்தது. பிரதமர் மோடி புகைப்படம் இருக்கலாமா கூடாதா என்பதுதான் அது. இது குறித்து விகடனில் விரிவான கட்டுரை ஒன்று வெளியானது.

ரேஷன் கடையில் வேண்டுமா பிரதமர் படம்?

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு - இவ்வாண்டு இந்திய சமூகத்திற்கு ஒரு பேரிழப்பு. இந்தியாவின் 36-வது பெரும் பணக்காரராக இருந்து, 62 வயதில் திடீர் மாரடைப்பால் ஆகஸ்ட் 14-ம் தேதி உயிரிழந்த ராகேஷின் வாழ்க்கையைப் படிப்பவர்கள், பணத்தின் முழுமையான மதிப்பையும் அர்த்தத்தையும் உணர்வார்கள். அவர் குறித்து படிக்க...

பணத்தின் மதிப்பு சொன்ன பங்குச்சந்தைக் காளை!

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

வரலாற்றின் குறிப்புகளில் எப்போதும் அழுத்தமாக பதிந்திருக்கும் நாட்கள் இவை. 300 நாட்களையும் கடந்து நீள்கிறது ரஷ்யா உக்ரைன் போர். ஓரிரு நாட்களில் முடியும் என்றுதான் முதலில் பலரும் நம்பினார்கள். ஆனால், சர்வதேச அளவில் வெளியுறவு பல நாடுகளின் கொள்கைகளையே மாற்றும் என யாரும் நினைக்கவில்லை. சாமானியன் ஆன நம்மையும் பல வகைகளில் பாதித்திருக்கிறது இந்த யுரேசிய யுத்தம்.

ஆயுத வியாபாரிகள் ஆசைப்பட்ட போர்!