Published:Updated:

'ரூட்டு தல' - மாணவர்கள் போடும் ஆட்டம்... அரசியல்வாதிகள் போட்ட கூட்டம்!

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்

சிறு கட்சியிலிருந்து பெரிய கட்சிகள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. கட்சிகளில் இருக்கும் மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் இவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

சென்னையில் மாணவர்கள் தொடர்பில் நிகழும் சம்பவங்கள், அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ரயிலில் தொங்கிக்கொண்டே பட்டாக்கத்தியைத் தரையில் கீறி மக்களை மிரட்டுவது, 'பஸ் டே' என்கிற பெயரில் அரசுப் பேருந்துகளை நாசம் செய்வது... எனத் தொடரும் அடாவடிகள், இப்போது நடுரோட்டில் பட்டாக்கத்தியை வைத்து ரத்தம் தெறிக்க மோதிக்கொள்வது வரை சென்றுள்ளது.

மதுரையிலோ, டிக்கெட் கேட்ட நடத்துநரைப் பட்டாக்கத்தியால் தலையில் வெட்டியிருக்கிறார்கள் மாணவர்கள். தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள், கொலை வரையில் போய் முடியும் அபாயமும் இருக்கிறது. நம் நாட்டின் எதிர்காலம் மாணவர்களே என்று ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கொண்டிருக்க... மக்கள் கண் முன்னாலேயே அந்த நம்பிக்கையை குழிதோண்டிப் புதைத்துள்ளனர், வன்முறைகளில் ஈடுபட்ட மாணவர்கள்.

'ரூட்டு தல' - மாணவர்கள் போடும் ஆட்டம்... அரசியல்வாதிகள் போட்ட கூட்டம்!

கடந்த காலங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மத்தியில்தான் இதுபோன்ற வன்முறைப் போக்கு இருந்தது. ஆனால், இப்போது அது லயோலா கல்லூரி போன்ற தனியார் அறக்கட்டளை கல்வி நிலையங்களிலும் தலைதூக்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, லயோலா கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, பெரும்பதற்றம் உருவானது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளுடன் மோதிக்கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்துதான், மிகப்பெரிய சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக இது விவாதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 92. அங்கு, சுமார் 6,500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன. இதனாலேயே வகுப்புகள் முழுமையாக நடப்பதில்லை. வாசிப்புப் பழக்கமும் அருகிவிட்டது. இதுபோன்ற காரணங்களாலேயே மாணவர்கள் வகுப்பறைகளைவிட்டு வெளியேறி, சுற்றுகிறார்கள்.

'ரூட் தல' மாணவர்களை அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக்கொள்கின்றன. சிறு கட்சியிலிருந்து பெரிய கட்சிகள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. கட்சிகளில் இருக்கும் மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் இவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

குறிப்பாக, பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்களுக்கு 'ரூட்டு தல' மூலம் கூட்டம் சேர்க்கப்படுகிறது. இதற்காக 'ரூட்டு தல' மாணவரை வெயிட்டாக கவனிக்கிறார்கள். கூட்டங்களில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குக் குறைந்தபட்ச கேரன்டியாக குவாட்டரும், பிரியாணியும் உண்டு. வட்டம், மாவட்டம் என அரசியல் தலைகளைப் பார்த்து, 'ரூட் தல' மாணவர்கள் கிறங்கிவிடுகிறார்கள்.

'ரூட்டு தல' - மாணவர்கள் போடும் ஆட்டம்... அரசியல்வாதிகள் போட்ட கூட்டம்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, 'ரூட் தல' மாணவர்களின் கூட்டத்தைப் பெரிய அளவில் ஓர் அரசியல் கட்சி வடசென்னையில் நடத்தியிருக்கிறது. சென்னையின் வி.வி.ஐ.பி ஒருவர்தான் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடும் செய்திருக்கிறார்.

> 'ரூட்டு தல'... என்ன நடக்கிறது இங்கே, ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள், அரசியல்வாதிகளுக்கும் 'ரூட்டு தல' மாணவர்களுக்கும் இருக்கும் தொடர்புகள் என்ன, இப்படியான வன்முறைகளில் ஈடுபடும் மாணவர்களின் உண்மையான உளவியல்தான் என்ன? அனைத்தையும் அலசும் சிறப்புக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் விரிவாக வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு