Published:Updated:

ரஷ்யா - பெலாரஸ் இணைந்து கூட்டுப் போர் பயிற்சி: `கீவ்’-ல் உச்சகட்ட பதற்றம் - உக்ரைனில் நடப்பது என்ன?!

உக்ரைனில் சேதமடைந்த கட்டடம்
News
உக்ரைனில் சேதமடைந்த கட்டடம் ( ட்விட்டர் )

'ரஷ்யா - பெலாரஸ்' இணைந்து கூட்டு போர் பயிற்சியைத் தொடங்கியிருக்கிறது. வரும் காலங்களில் தரை வழியிலான தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் உக்ரைனில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவியிருக்கிறது.

Published:Updated:

ரஷ்யா - பெலாரஸ் இணைந்து கூட்டுப் போர் பயிற்சி: `கீவ்’-ல் உச்சகட்ட பதற்றம் - உக்ரைனில் நடப்பது என்ன?!

'ரஷ்யா - பெலாரஸ்' இணைந்து கூட்டு போர் பயிற்சியைத் தொடங்கியிருக்கிறது. வரும் காலங்களில் தரை வழியிலான தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் உக்ரைனில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவியிருக்கிறது.

உக்ரைனில் சேதமடைந்த கட்டடம்
News
உக்ரைனில் சேதமடைந்த கட்டடம் ( ட்விட்டர் )

தொடங்கிய போர்:

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் 'நேட்டோ' படையில் இணைவதற்கு முனைப்பு காட்டியது. இதற்கு ரஷ்யா அதிபர் புதின் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், உக்ரைன் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறது.

உக்ரைனில் சேதமடைந்த கட்டடம்
உக்ரைனில் சேதமடைந்த கட்டடம்
ட்விட்டர்

கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கிவிட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் சபை எவ்வளவு முயற்சி செய்தும் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. தனது பலமான ராணுவ கட்டமைப்புகளைக் கொண்டு உக்ரைனின் ராணுவ நிலைகள், குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றை ரஷ்யா தகர்த்துவருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் உதவி:

மறுபுறம் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்கிவருகின்றன. குறிப்பாக அமெரிக்கா அதிக உதவிகளைச் செய்துவருகிறது. இதனால், உக்ரைனும் கடுமையாக எதிர்வினையாற்றிவருகிறது. இது ரஷ்யாவுக்கும் பலத்த இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த டிசம்பர் 21-ம் தேதி அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

அப்போது, 'ரஷ்யாவுக்கு எதிராகப் போராடுவதற்காக உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, உக்ரைனுக்கு 3.75 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கிறது. இதை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத/நிதி உதவி வழங்குவதாக தெரிவித்திருக்கிறது.

நேர்மறையான பலன்களைத் தருகிறது:

மேலும் 'நேட்டோ' படையில் உக்ரைன் கண்டிப்பாக இணையும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இது ரஷ்யா அதிபர் புதினை மேலும் கோபமடையச் செய்தது. முன்னதாக புதின், "உக்ரைனில் மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையானது நேர்மறையான பலன்களைத் தருகிறது. ரஷ்ய வீரர்கள் மேலதிக சிறப்புகளைக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

புதின்
புதின்

போரின் காரணமாக மேற்கத்திய நாடுகள் அளித்த பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என எதிரிகள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தற்கு மாறாக ரஷ்யாவின் பொருளாதாரம் நிலையாக இருக்கிறது. வேலைவாய்பின்மை குறைந்திருக்கிறது" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 'ரஷ்யா - பெலாரஸ்' இணைந்து கூட்டு போர் பயிற்சியைத் தொடங்கியிருக்கிறது. இனி தரை வழியிலான தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவியிருக்கிறது.

ரஷ்யா - பெலாரஸ் கூட்டுப் பயிற்சி:

இது குறித்து பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சகம், "இரு நாடுகளும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியை ஜனவரி 16-ம் தேதி தொடங்கியிருக்கிறது. இது பிப்.1-ம் தேதி வரை நடக்கும். இதில் அனைத்து பெலாரஸ் ராணுவ விமானநிலையங்களும் பயன்படுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் முதல் துணை மாநிலச் செயலாளர் பாவெல் முராவேகோ, "நாங்கள் கட்டுப்பாட்டையும், பொறுமையையும் பராமரிக்கிறோம். உக்ரைன் நாட்டின் தெற்கு எல்லையில் நிலைமை மிகவும் அமைதியாக இல்லை. உக்ரைன் பெலாரஸை ஆத்திரமூட்டி வருகிறது. எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்து இருந்ததாகத் தகவல்கள் வெளியாயின.

 ரஷ்யா, உக்ரைன் போர்
ரஷ்யா, உக்ரைன் போர்

போர் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:

ஆனால், உக்ரைன் உடனான மோதலில் இன்னும் தீவிரமான பங்கை எடுக்க பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியான தகவலை, ரஷ்யா மறுத்திருக்கிறது. முன்னதாக பெலாரஸிலிருந்து தாக்குதல் நடத்தக்கூடும். எனவே, அந்த நாட்டின் எல்லையில் நாடு தயாராக இருக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்தப் போர் தொடங்கியதிலிருந்து பெலாரஸ் தனியாகவும், ரஷ்யாவுடன் கூட்டாகவும் பல ராணுவப் பயிற்சிகளை நடத்தியிருக்கிறது. இதன் மூலம் தங்களது ராணுவத்தை அந்த நாடு மேம்படுத்திவருகிறது. இதற்கிடையில், பெலாரஸுக்கு வரும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ போக்குவரத்து விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 15-ம் தேதி மட்டும் எட்டு போர் விமானங்கள் மற்றும் நான்கு சரக்கு விமானங்கள் பெலாரஸுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா கேஹெச்-22 ஏவுகணைத் தாக்குதல்:

இதனால் இனி தரை வழியிலான தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உக்ரைனில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாகக் கடந்த 15-ம் தேதி டினிப்ரோவிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள், உக்ரைன் அதிகாரிகள். முன்னதாகக் கடந்த 14-ம் தேதி நடந்த தாக்குதலில் குறைந்தது 73 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

இதில், 30 பேர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகவும், 12 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுக்குமாடி கட்டடத்தில் வசித்த 39 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோரின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், ``உக்ரைனின் விமானப்படை, 'ரஷ்யா கேஹெச்-22 ஏவுகணையால் அடுக்குமாடி குடியிருப்பு தாக்கப்பட்டது.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

`சிறப்பு ராணுவ நடவடிக்கை’

சுட்டு வீழ்த்துவதற்கான வான் பாதுகாப்பு உக்ரைனுக்கு இல்லை. சோவியத் காலத்து ஏவுகணையான இதை, பனிப்போரின்போது போர்க்கப்பல்களை அழிக்க உருவாக்கப்பட்டது" என்று தெரிவித்திருக்கிறது. ரஷ்யா கடந்த அக்டோபர் மாதம் முதல் உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கிவருகிறது. `சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்று அழைக்கும் ரஷ்யாவின் இந்தப் படையெடுப்பு, ஏற்கெனவே ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது. மில்லியன் கணக்கானவர்களை இடம்பெயரச் செய்திருக்கிறது. மேலும், பல நகரங்களை இடிபாடுகளாக மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.