சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஸ்மைல் ப்ளீஸ் கருந்துளை!

கருந்துளை!
பிரீமியம் ஸ்டோரி
News
கருந்துளை!

ஒளிகூடத் தப்பமுடியாத கருந்துளைகளைப் புகைப்படமெடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. அதற்கு கிட்டத்தட்ட பூமியின் அளவில் ஒரு தொலைநோக்கி நமக்குத் தேவை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மங்கலான விண்வெளிப் புகைப்படம் ஒன்று மொத்த இணையத்தையும் ஆட்கொண்டது. சயின்ஸ் பிக்‌ஷன் படங்களிலும் இயற்பியல் பாடப்புத்தகங்களிலும் மட்டுமே பார்த்திருந்த கருந்துளையின் (பிளாக் ஹோல்) முதல் புகைப்படம் அது. இப்போது அதைவிடவும் சவாலான மற்றுமொரு கருந்துளைப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார்கள், அதே ‘ஈவென்ட் ஹோரைசன் டெலஸ்கோப்’ (EHT) திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இம்முறை நம் சூரியக்குடும்பம் இருக்கும் பால்வீதியின் (Milky Way) நடுவில் மையம் கொண்டிருக்கும் ஷஜிடேரியஸ் ஏ ஸ்டார் (Sagittarius A*) என்ற கருந்துளையை வெற்றிகரமாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

ஸ்மைல் ப்ளீஸ் கருந்துளை!

காலப்போக்கில் ஒரு நட்சத்திரம் அளவில் மிகவும் பெரிதாகி வெடித்துச் சிதறும். இதை ‘சூப்பர்நோவா’ என்பார்கள். இப்படியான வெடிப்புக்குப் பிறகு அந்த நட்சத்திரத்தின் கரு மட்டுமே மிஞ்சும். அதிகமான நிறையைக் கொண்டிருக்கும் அது அதிவேகமாக சுழலும். ஐன்ஸ்டீன் சார்புக் கோட்பாட்டின்படி இதன் ஈர்ப்பு விசை மிக மிக அதிகமாக இருக்கும். இதன் அருகில் செல்லும் ஒளிகூட இதனிடமிருந்து தப்பமுடியாது. இதைத்தான் ‘பிளாக் ஹோல்’ என்கிறோம்.

ஸ்மைல் ப்ளீஸ் கருந்துளை!

ஒளிகூடத் தப்பமுடியாத கருந்துளைகளைப் புகைப்படமெடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. அதற்கு கிட்டத்தட்ட பூமியின் அளவில் ஒரு தொலைநோக்கி நமக்குத் தேவை. அது தற்போது சாத்தியமில்லை. இதற்காகப் பூமி முழுவதிலும் 8 ரேடியோ தொலைநோக்கிகளை வெவ்வேறு இடங்களில் அமைத்து, Very Long Baseline Interferometry (VLBI) என்ற முறையில் பூமியின் அளவுக்கு நிகரான ஒரு மெய்நிகர் தொலைநோக்கியை அமைத்தது இந்த EHT குழு. 2019-ல் படம்பிடிக்கப்பட்டது நமக்கு அண்டை கேலக்ஸியான மெஸ்ஸியர் 87-ல்(M87) இருக்கும் கருந்துளை. இது பூமியிலிருந்து 5 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. தற்போது படம்பிடிக்கப்பட்டிருக்கும் ஷஜிடேரியஸ் ஏ ஸ்டார் வெறும் 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில்தான் இருக்கிறது. இருந்தும் இதைப் படம்பிடிப்பதுதான் பெரும் சவாலாக இருந்திருக்கிறது. M87 ஸ்டார் கருந்துளையுடன் ஒப்பிடுகையில் ஷஜிடேரியஸ் ஏ ஸ்டார் அளவில் மிகவும் சிறியது. வாயுக்கள் மற்றும் துகள்கள் என, சுற்றியிருக்கும் பிளாஸ்மா பகுதிகள் வெளியிடும் ஒளியும் குறைவுதான். கிட்டத்தட்ட இரண்டு கருந்துளைகளுமே ஒரே நேரத்தில் தான் கண்காணிக்கப்பட்டன. ஆனால், மொத்தமாக இந்தப் படத்தை பிராசஸ் செய்ய இந்தக் குழுவுக்குக் கூடுதலாக மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

அறிவியல் வரலாற்றில் இது ஒரு மகத்தான நகர்வு!