Published:Updated:

24 நாள்களாகக் கடலில் தத்தளிப்பு; உணவு? - 'Help' என்ற வார்த்தையால் உயிர்பிழைத்த மாலுமி- என்ன நடந்தது?

மாலுமி
News
மாலுமி ( ட்விட்டர் )

எல்விஸ் ஃபிரான்கோய்ஸ் (Elvis Francois) என்ற மாலுமி, 24 நாள்களாக கரீபியன் கடலில் தத்தளித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

24 நாள்களாகக் கடலில் தத்தளிப்பு; உணவு? - 'Help' என்ற வார்த்தையால் உயிர்பிழைத்த மாலுமி- என்ன நடந்தது?

எல்விஸ் ஃபிரான்கோய்ஸ் (Elvis Francois) என்ற மாலுமி, 24 நாள்களாக கரீபியன் கடலில் தத்தளித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கிறார்.

மாலுமி
News
மாலுமி ( ட்விட்டர் )

டோமினிக்காவைச் சேர்ந்தவர் எல்விஸ் ஃப்ரான்கோய்ஸ் (Elvis Francois). மாலுமியான இவர், நெதர்லாண்ட்ஸ் அன்டில்ஸ் பகுதியிலிருக்கும் மார்ட்டின்ஸ் தீவில் படகைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இவர் கரீபியன் கடலில் தத்தளித்துவந்திருக்கிறார். நண்பர்களை உதவிக்காக அழைத்திருக்கிறார். ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.

இறுதியில் அவர் 'Help' எனும் ஆங்கில வார்த்தையைப் படகின் பக்கவாட்டில் எழுதிவைத்துக் காத்திருந்தார். ஒரு விமானம் அவரைக் கடந்தபோது, கண்ணாடி மூலம் ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து அதன் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார். அதைப் பார்த்த அதிகாரிகள், உதவிக்காக அவர் காத்திருப்பதை உறுதிப்படுத்தினார். அதிகாரிகள் கொடுத்த தகவல் மூலம், கொலம்பிய கடற்படை அவரைக் கண்டுபிடித்து மீட்டது.

மாலுமி
மாலுமி
ட்விட்டர்

இந்த நிலையில், எல்விஸ் ஃபிரான்கோய்ஸ் இது தொடர்பாக பேசிய வீடியோவில், ``24 நாள்கள் நிலம் இருப்பதற்கான தடயமே இல்லை. நான் எங்கிருக்கிறேன் என்றும், எனக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை. 24 நாள்களாக கெட்ச்சப் (Ketchup), பூண்டுப்பொடி, மேகி ஆகியவற்றை உட்கொண்டு உயிர் வாழ்ந்தேன். அந்த நாள்கள் மிகவும் கடினமானவை. ஒருகட்டத்தில் என் நம்பிக்கையை இழந்துவிட்டேன். என் குடும்பத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தேன். நான் வசிக்கும் நெதர்லாண்ட்ஸ் அன்டில்ஸ் பகுதியிலிருக்கும் மார்ட்டின்ஸ் தீவில் என் படகைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கையில், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். நான் கடற்கரையை அடைய எவ்வளவோ முயன்றேன். என் நண்பர்களைத் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. காத்திருப்பது தவிர வேறு எந்த வழியும் எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த புதன்கிழமை (18-1-2023) கொலம்பியா கடற்படை அவரை வடமேற்குப் பகுதியிலுள்ள லா குஅஜிரா என்னும் இடத்திலிருந்து மீட்டது. இந்த இடம் கொலம்பியாவின் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது. எல்விஸுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், அவர் மீண்டும் டோமினிக்காவுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.