Published:Updated:

அரசியலமைப்பு குறித்து சர்ச்சைப் பேச்சு; ராஜினாமா... மீண்டும் அமைச்சரானார் சஜி செறியான்!

அமைச்சர் சஜி செறியான்
News
அமைச்சர் சஜி செறியான்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசியதாக சஜி செறியான் குறித்து கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தொடர்ந்து சஜி செறியான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Published:Updated:

அரசியலமைப்பு குறித்து சர்ச்சைப் பேச்சு; ராஜினாமா... மீண்டும் அமைச்சரானார் சஜி செறியான்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசியதாக சஜி செறியான் குறித்து கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தொடர்ந்து சஜி செறியான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அமைச்சர் சஜி செறியான்
News
அமைச்சர் சஜி செறியான்

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் 2.0 ஆட்சியில் மீன்வளத்துறை மற்றும் கலாசாரத்துறை அமைச்சராகப் பதவிவகித்தவர் சஜி செறியான். கடந்த ஜூலை மாதம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியில் நடைபெற்ற வாராந்திர அரசியல் கண்காணிப்புக் கூட்டத்தில் பேசிய சஜி செறியான், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களைக் கொள்ளையடிப்பதற்கே உதவுகிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூறியதைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதிவைத்துள்ளனர். சாதாரண மக்களைச் சுரண்டுவதுதான் இதன் நோக்கம்" என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசியதாக சஜி செறியான் குறித்து கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் போராட்டத்தைத் தொடர்ந்து சஜி செறியான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சஜி செறியானுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்த கவர்னர் ஆரிஃப் முகமதுகான்
சஜி செறியானுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்த கவர்னர் ஆரிஃப் முகமதுகான்

இந்த நிலையில், சஜி செறியானுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க முதல்வர் பினராயி விஜயன் முடிவுசெய்தார். சஜி செறியான் மீதான வழக்கு கோர்ட்டில் நடைபெற்றுவரும் நிலையில், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க கவர்னர் ஆரிஃப் முஹமது கான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் சில விளக்கங்களைப் பெற்று பதவிப் பிரமாணம் செய்துவைக்க சம்மதித்தார். இதையடுத்து, நேற்று மாலை கவர்னர் மாளிகையில் வைத்து சஜி செறியான் அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியை எதிர்க்கட்சியான காங்கிரஸ் புறக்கணித்தது.

ஷஜி செறியான்
ஷஜி செறியான்

இதற்கு முன்பு 13 மாதங்கள் அமைச்சராகப் பதவிவகித்த சஜி செறியான் 182 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பின்பு தன்னுடை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சஜி செறியான், "முதல்வர் பினராயி விஜயனுக்கும் கவர்னருக்கும் செங்கன்னூர் மக்களுக்கும் நன்றி. இதற்கு முன்பு 13 மாதங்கள் செய்த மக்கள் பணியின் தொடர்ச்சியை மீண்டும் செய்வேன். ஏற்கெனவே வகித்துவந்த மீன்வளத்துறை, கலாசாரத்துறை உள்ளிட்ட துறைகள் மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன்" என அமைச்சர் சஜி செறியான் கூறினார்.