Published:Updated:

கொள்ளிடம் ஆற்றைச் சுரண்டும் மணல் மாஃபியா: சாட்டை எடுத்த நீதிமன்றம்... ஆய்வில் இறங்கிய ஆட்சியர்!

கொள்ளிடம் ஆறு
News
கொள்ளிடம் ஆறு ( DIXITH )

கொள்ளிடம் ஆற்றில் விதிகளை மீறி மணல் கொள்ளை நடப்பது குறித்து வழக்குத் தொடுத்த நிலையில், `மாவட்ட அளவிலான குழு குவாரிகளில் ஆய்வு செய்து மார்ச் 16-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:

கொள்ளிடம் ஆற்றைச் சுரண்டும் மணல் மாஃபியா: சாட்டை எடுத்த நீதிமன்றம்... ஆய்வில் இறங்கிய ஆட்சியர்!

கொள்ளிடம் ஆற்றில் விதிகளை மீறி மணல் கொள்ளை நடப்பது குறித்து வழக்குத் தொடுத்த நிலையில், `மாவட்ட அளவிலான குழு குவாரிகளில் ஆய்வு செய்து மார்ச் 16-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொள்ளிடம் ஆறு
News
கொள்ளிடம் ஆறு ( DIXITH )

`தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகே திருச்சென்னம்பூண்டி மற்றும் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் பகுதியில் செயல்படும் மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். கல்லணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் 15 கி.மீ தூரம் வரை மணல் அள்ளுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது. சட்டவிரோதமாக விதிகளை மீறி மணல் அள்ளுகின்றனர். இதனால் விவசாயம் மட்டுமன்றி குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும். கல்லணைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்' என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் சண்முகம் வழக்குத் தொடுத்திருந்தார்.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

அந்த வழக்கின் அடிப்படையில், `மாவட்ட அளவிலான குழு குவாரிகளில் ஆய்வு செய்து மார்ச் 16-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் திருச்சென்னம்பூண்டியில் உள்ள மணல் குவாரியில் தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்புக் குழுவினர் பிப்ரவரி 11-ம் தேதி ஆய்வு செய்தனர்.

இன்று திருச்சி கூகூரில் உள்ள மணல் குவாரியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தினார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், ``கூகூரில் இல்லீகல் குவாரி நடந்துகிட்டு இருக்குன்னு சண்முகம் என்பவர் கோர்ட்ல பெட்டிஷன் போட்டிருந்தாங்க. அது சம்பந்தமாக இன்னைக்கு நேரில் ஆய்வு செஞ்சோம். கல்லணையில் இருந்து 500 மீட்டர் தூரத்துல குவாரி இதுக்கிறதென புகார். ஆக்சுவலா 1,000 மீட்டர்லதான் குவாரி இருக்கு. முழுமையாக விசாரணை செஞ்சிட்டு, அளவீடு முடிந்த பின்னர்தான் என்ன நடந்திருக்கிறதென தெரியவரும். 2 கி.மீ தூரத்துக்கு ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறேன். தவறு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கொள்ளிடம் ஆற்றில் திருச்சி கலெக்டர்
கொள்ளிடம் ஆற்றில் திருச்சி கலெக்டர்
DIXITH

மணல் குவாரிகளின் விதிமீறல்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த சண்முகம் மீது, `பக்கத்து வீட்டுப் பெண் ஒருவரை தகாத முறையில் பேசி, தாக்க முற்பட்டதாக' சமீபத்தில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போதே, மணல் குவாரி மீதான வழக்கினாலே திட்டமிட்டு சண்முகம் மீது பொய்வழக்கு போடப்பட்டதாகப் பேசப்பட்டது.

தற்போது ஜாமீனில் சண்முகம் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், இன்று திருச்சி கலெக்டர் நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட சண்முகம், மணல் குவாரிகளின் விதிமீறல்களை நேரில் விளக்கிக் கூறியிருக்கிறார். கலெக்டரின் அறிக்கையில்தான் கொள்ளிடம் ஆற்றில் குவாரிகள் எந்த அளவுக்கு அட்டகாசம் செய்துள்ளனர் என்பது தெரியவரும்.