Published:Updated:

உச்ச நீதிமன்றத்தில் பாலின நடுநிலை கழிவறைகள் - தலைமை நீதிபதி பெருமிதம்!

உச்சநீதிமன்றம்
News
உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்ற வளாகத்தில் திருநர் சமூகத்தினர், LGBTQவினர் பயன்படுத்தும் வகையில் பாலின நடுநிலை கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Published:Updated:

உச்ச நீதிமன்றத்தில் பாலின நடுநிலை கழிவறைகள் - தலைமை நீதிபதி பெருமிதம்!

உச்ச நீதிமன்ற வளாகத்தில் திருநர் சமூகத்தினர், LGBTQவினர் பயன்படுத்தும் வகையில் பாலின நடுநிலை கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம்
News
உச்சநீதிமன்றம்

சமீபகாலமாக திருநர் சமூகத்தினர், LGBTQ சமூகத்தினர் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற பிரதானக் கட்டடம் மற்றும் கூடுதல் கட்டட வளாகங்களில் பல்வேறு இடங்களில் ஒன்பது பாலின நடுநிலைக் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருநர்கள், நான் பைனரி (Non binary) பாலின அடையாளம் பின்பற்றாதவர்களுக்காக (Gender nonconforming) இந்தக் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

LGBTQ
LGBTQ
Photo by Jose Pablo Garcia on Unsplash

அதேபோல், வழக்கறிஞர்களின் ஆன்லைன் போர்ட்டலை பாலினம் உள்ளடக்கியதாக மாற்றியுள்ளது உச்ச நீதிமன்றம். இதில் புதிதாக ஒரு பகுதி உருவாக்கப்பட்டு அதில் வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராகும் போது அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் போது தங்கள் பாலினம் தொடர்பான விருப்பமான பிரதிப் பெயர்களை (Pronoun) தேர்ந்தெடுக்கும் கூடுதல் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது திருநர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் பாலினத்தை விருப்பம்போல் வெளிப்படுத்தும் வாய்ப்பை உறுதி செய்யும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்துள்ள இந்த புதிய முயற்சிகள், LGBTQ சமூகத்தினருக்கு கண்ணியமான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதோடு பொதுமக்களிடம் அவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. ``நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்குள் பாலின நடுநிலை கழிப்பறைகளை நிறுவியுள்ளோம். திருநர்களுக்கான கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்பது நாங்கள் பெற்ற கோரிக்கைகளில் ஒன்று. அதை தற்போது நிறைவேற்றி விட்டோம்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்
தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்
ட்விட்டர்

மேலும், 11 பேர் கொண்ட பாலின உணர்திறன் மற்றும் உள் புகார்கள் (GSICC) குழுவில் உறுப்பினராக மூத்த வழக்கறிஞரும், பிரபல ஓரினச்சேர்க்கை உரிமை வழக்கறிஞருமான மேனகா குருசுவாமியை நியமிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.ஐ.சி.சி-யின் நோக்கத்தை 'பாலினம் மற்றும் பாலியல் உணர்வு மற்றும் உள் புகார்கள் குழு' என விரிவுபடுத்தும் திட்டமும் தீவிர பரிசீலனையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.