Published:Updated:

ஏற்றுமதி தொழில் தொடங்க விருப்பமா? என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டும் தமிழக அரசின் கருத்தரங்கு!

ஏற்றுமதி

ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகள் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இரண்டு நாள் கருத்தரங்கை நடத்துகின்றன.

Published:Updated:

ஏற்றுமதி தொழில் தொடங்க விருப்பமா? என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டும் தமிழக அரசின் கருத்தரங்கு!

ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகள் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இரண்டு நாள் கருத்தரங்கை நடத்துகின்றன.

ஏற்றுமதி

இந்தியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது மூலமாகத் தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன.

எனவே, ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகள் பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இணையவழி கருத்தரங்கை நடத்துகின்றன. ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த இந்த இணையவழி கருத்தரங்கம் சென்னையில் 2 நாள்கள் நடைபெற உள்ளது.

வரும் 05.05.2023 மற்றும் 06.05.2023 ஆகிய இரண்டு நாள்களும் காலை 10.30 முதல் மதியம் 2.00 மணி வரை இந்த இணையவழி கருத்தரங்கம் நடைபெறும்.

ஏற்றுமதி
ஏற்றுமதி

இப்பயிற்சியில்,

  • ஏற்றுமதி சந்தையின் தேவை

  • கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள்

  • ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள்

  • வங்கி நடைமுறைகள்

  • அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள்

  • காப்பீடு குறித்த தகவல்கள்

  • ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள்,

  • ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள்... அவற்றைப் பெறும் முறைகள்

  • அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள்...

போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

யார் கலந்துகொள்ளலாம்...

ஏற்றுமதி சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இப்பயிற்சியில் சேரலாம்.

ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்கள்!
ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்கள்!

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பயிற்சி கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு...

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சிட்கோ, சென்னை - 600032.

தொடர்புகொள்ள தொலைபேசி / கைபேசி எண்கள்.

44-22252081 / 22252082,  9677152265,  8668102600.

திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.