ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

மீண்டும் பள்ளிக்குச் சென்றபோது..!

மீண்டும் பள்ளிக்குச் சென்றபோது..!
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டும் பள்ளிக்குச் சென்றபோது..!

#Avaludan

செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 1-ல் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளன. உங்கள் வீட்டு ‘பேக் டு ஸ்கூல்’ அனுபவங்களை, கருத்துகளை #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் பகிருங்கள் என அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்கள் கேட்டிருந்தோம். அவற்றில் சிறந்தவை இங்கே...

Siva Sakthi Vidyalaya Cbse

ஆசிரியரான நான், என் குழந்தைகளைப் பார்க்க ஒன்றரை வருடங்களாகக் காத்திருந்த ஏக்கம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ‘குட் மார்னிங் மேம்’, ‘இப்போ என் க்ளாஸ்ரூம் எது மேம்’ என்ற கீச் கீச் கிளிப்பேச்சுகளைக் கேட்டபோது அத்தனை சுகம். `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என என் கண்களும் மனமும் நிறைந்துபோனது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்களைப் பின்பற்ற வைக்க வேண்டிய பொறுப்புடன் வரும் நாள்களை நோக்கி...

Sai Nandhini Paramasivam

என் மகனுக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா, தடுப்பூசி போடாததால எனக்குக் கொஞ்சம் பயம்தான். நம்ம பிள்ளைங்களோட ஆரோக்கியத்துக்காகவும் படிப்புக் காகவும் எல்லாரும் பிரார்த்தனை பண்ணிப்போம்.

Srividhya Prasath

இரவு முதல் ஸ்கூல் பேக் ரெடி செய்வதில் இருந்து ஷூஸ் எடுத்து வைப்பது வரை வீடே விழாக்கோலம் தான். ஆளாளுக்குக் குழந்தைகளுக்கு அறிவுரைகளைக் கொட்டி காலையில் அனுப்பிவைத்தோம். அவர்கள் வீடு திரும்பியதும், ‘க்ளாஸே எடுக்கல, எல்லா டீச்சரும் ஜாலியா பேசினாங்க, ஸ்வீட்ஸ் கொடுத்தாங்க’ என்றனர் சந்தோஷத்துடன்.

Anbu Bala

முதல் நாள் இரவில் இருந்தே பள்ளி செல்லத் தயாராகி, காலையில் எழுந்தால் ‘கன மழை காரணமாகப் பள்ளிக்கு விடுமுறை’ என்ற அறிவிப்பைப் பார்த்ததும் குழந்தை முகம் வாடிப்போய்விட்டது.

Priya Jegan

தீபாவளி நேரம் என்பதால், நவம்பர் 1 ஸ்கூல் ரீஓப்பன் என்பதை தீபாவளி விடு முறைகள் எல்லாம் முடிந்து நவம்பர் 8 என்று அரசு அறிவித்திருக்கலாம். கன மழை, தீபாவளி பயணங்கள் என்ற இக்கட்டான சூழலில் பள்ளிகள் திறந்ததில் பல பெற்றோர்களுக்கும் சிரமமே.

Subai

கிட்டத்தட்ட 600 நாள்கள் கழித்துப் பள்ளிக்குக் கிளம்பும்போதும், ‘அம்மா ஃபீவர் அடிக்கிற மாதிரி இருக்கு பாரு’ என்ற பழைய ஃபார்முலாவை மகன் சொன்னபோது சிரித்துவிட்டோம். கொரோனாவே முடிந்தாலும் பிள்ளை களின் ஸ்கூல் ஃபீவர்கள் முடிவதில்லை.

மீண்டும் பள்ளிக்குச் சென்றபோது..!
மீண்டும் பள்ளிக்குச் சென்றபோது..!

Shahira Binth Jamal

என் இளைய மகன் கல்லூரி முதல் வருடம் சேர்ந்திருக்கிறார். பாரா மெடிக்கல் கோர்ஸ் என்பதால் வகுப்புகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ‘அண்ணா... நாங்க கூட ஸ்கூலுக்குக் கிளம்பிட்டோம், நீங்க இன்னும் வீட்டுலேயே இருக்கீங்க...’ என்று பள்ளி மாணவர்கள் அவரை வம்பிழுக்க, என் பையன் என்னை முறைக்க, நான் சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.

Gomathi Sivayam

ஒருவழியாகப் பள்ளி திறந்துவிட்டது என அப்பார்ட்மென்ட் லேடீஸ் ஜாலி யானோம். பின்னே... எட்டு குட்டீஸை ஒன்றரை வருடங்களாகச் சமாளித்த பாடு எங்களுக்குத்தானே தெரியும். இந்த 600 நாள்களில் 600 சம்பவங்கள் செய்திருப்பார்கள் அந்த குட்டி சூப்பர்மேன்கள்!

Anand Raman

தினமும் பள்ளியில் குழந்தைகள் 4 மணி நேரம் மாஸ்க் அணியும் சூழல், பள்ளி வளாகத்தில் முறையாகப் பின்பற்றப்படாத கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என இந்தச் சூழலும், அரசின் முடிவும் எனக்கு உடன்பாடாக இல்லை.