Published:Updated:

"ராகுல், பாரத் ஜோடோ யாத்திரையைச் சிறப்பாகக் கையாண்டுவருகிறார்" - பாராட்டும் ராம் மந்திர் செயலாளர்

சம்பத் ராய்  - யோகி ஆதித்யநாத்
News
சம்பத் ராய் - யோகி ஆதித்யநாத் ( ட்விட்டர் )

``பாரத் ஜோடோ ஒரு நல்ல முழக்கம், இந்தியா ஒன்றுபட வேண்டும்.'' - ராம் மந்திர் அறக்கட்டளையின் மூத்த அறங்காவலர்

Published:Updated:

"ராகுல், பாரத் ஜோடோ யாத்திரையைச் சிறப்பாகக் கையாண்டுவருகிறார்" - பாராட்டும் ராம் மந்திர் செயலாளர்

``பாரத் ஜோடோ ஒரு நல்ல முழக்கம், இந்தியா ஒன்றுபட வேண்டும்.'' - ராம் மந்திர் அறக்கட்டளையின் மூத்த அறங்காவலர்

சம்பத் ராய்  - யோகி ஆதித்யநாத்
News
சம்பத் ராய் - யோகி ஆதித்யநாத் ( ட்விட்டர் )

ராகுல் காந்தி தலைமையில், கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 100 நாள்களுக்கும் மேலாக ஒன்பது மாநிலங்களைக் கடந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை உத்தரப்பிரதேசத்தில் நடந்துவருகிறது. இதற்கிடையில், ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். இது தொடர்பாக, ``பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி சிறப்பாகக் கையாண்டுவருகிறார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி
பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி

அவருடைய முயற்சியில் எந்தத் தவறுமில்லை. கிராமப்புறங்களில் நடையாக நடந்துவரும் அவரை நான் பாராட்டுகிறேன். நான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன், பாரத் ஜோடோ யாத்திரையை ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் கண்டித்ததில்லை. அவர் இந்தக் கடுமையான காலநிலையிலும் நடந்துவருகிறார், இதைப் பாராட்ட வேண்டும்'' என்றார்.

இதைத் தொடர்ந்து, ராம் மந்திர் அறக்கட்டளையின் மூத்த அறங்காவலரான கோவிந்த் தேவ் கிரியும், பாரத் ஜோடோ யாத்திரையைப் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர், ``தேசம் ஒற்றுமையாகவும், வலுவாகவும், நல்லிணக்கத்தோடும் இருக்க அவரை ஆசீர்வதிக்க ராமரைப் பிரார்த்திக்கிறேன். பாரத் ஜோடோ ஒரு நல்ல முழக்கம், இந்தியா ஒன்றுபட வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.