Published:Updated:

பஞ்சாப்பில் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்களுக்கு தனித்தனி வாக்குரிமை!

வாக்காளர் அடையாள அட்டை பெறும் சகோதரர்கள்
News
வாக்காளர் அடையாள அட்டை பெறும் சகோதரர்கள்

பஞ்சாப்பில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

Published:Updated:

பஞ்சாப்பில் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்களுக்கு தனித்தனி வாக்குரிமை!

பஞ்சாப்பில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தனித்தனி வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாள அட்டை பெறும் சகோதரர்கள்
News
வாக்காளர் அடையாள அட்டை பெறும் சகோதரர்கள்

பஞ்சாப் சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க கூட்டணி என 3 அணிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் இடையேதான் கடுமையான போட்டி நிலவுவதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமிர்தசரசில் சோகன் சிங், மோகன் சிங் என்ற இரட்டை சகோதரர்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் ஆவர். கடந்த ஆண்டு இருவருக்கும் 18 வயது நிரம்பியது. இருவருக்கும் தனித்தனி வாக்குரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தற்போது இருவருக்கும் தனித்தனி வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள் கொண்டாடும் இரட்டையர்கள்
பிறந்த நாள் கொண்டாடும் இரட்டையர்கள்

அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களுக்குத் தனித்தனியாக வாக்காளர் அடையாள அட்டைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பஞ்சாப் தேர்தல் அதிகாரி கருணா ராஜு கூறுகையில், "சோகன், மோகன் ஆகிய இரண்டு பேரையும் தனித்தனி வாக்காளர்களாக தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. எனவே அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இருவரும் தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

அதோடு 12வது தேசிய வாக்காளர் தினத்தில் இரண்டு பேருக்கும் தனது கையால் வாக்காளர் அடையாள அட்டையை கருணா வழங்கினார். பஞ்சாப் வாக்காளர்கள் தங்களது தொகுதி வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி உட்பட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள மொபைல் ஆப் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளதாக கருணா தெரிவித்தார். டெல்லியில் இரட்டையர்களாக பிறந்த சோகன் மற்றும் மோகனை அவர்களது பெற்றோர் அநாதையாக விட்டுச் சென்றுவிட்டனர். அவர்களை தொண்டு நிறுவனம் ஒன்றுதான் எடுத்து வளர்த்தி வருகிறது.