Published:Updated:

`தேர்தல் பிரசார பாடலா?’ - பாலியல் குற்றவாளியின் வீடியோ, ஹரியானா முதல்வரைச் சாடிய மகளிர் ஆணைய தலைவி!

மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால்
News
மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால்

``குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. வெட்கமில்லாமல் அனைத்து எல்லைகளும் மீறப்பட்டுள்ளன. மக்களே உங்கள் மகள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவார்கள்.’’

Published:Updated:

`தேர்தல் பிரசார பாடலா?’ - பாலியல் குற்றவாளியின் வீடியோ, ஹரியானா முதல்வரைச் சாடிய மகளிர் ஆணைய தலைவி!

``குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. வெட்கமில்லாமல் அனைத்து எல்லைகளும் மீறப்பட்டுள்ளன. மக்களே உங்கள் மகள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவார்கள்.’’

மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால்
News
மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால்

ஹரியானா மாநிலம் தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங். அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கிலும், ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கிலும் குர்மீத் ராம் ரஹீம் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற அவர், தற்போது 40 நாள்கள் பரோலில் வெளியே வந்துள்ளார்.

இசையமைக்கும் 
 குர்மீத் ராம் ரஹீம்
இசையமைக்கும் குர்மீத் ராம் ரஹீம்

இதற்கு முன்னர் குர்மீத் ராம் ரஹீம் சிங் தானே பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து சில ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் சில திரைப்படங்களை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்த சாமியார் வளரும் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், 40 நாள்கள் பரோலில் வந்த குர்மீத் ராம் ரஹீம் சிங், ஒரு பாடலுக்கு இசையமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வலைதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைக்கும் 
 குர்மீத் ராம் ரஹீம்
இசையமைக்கும் குர்மீத் ராம் ரஹீம்

`ஹரியானா மாநில பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார், இதை அடுத்த தேர்தலுக்கான பிரசார பாடலாக வைக்க உள்ளாரா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார், டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால்.

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஸ்வாதி மாலிவால், ``பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளியான குர்மீத் ராம் ரஹீமுக்கு ஏற்கெனவே பரோல் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு 40 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. வெட்கமில்லாமல் அனைத்து எல்லைகளும் மீறப்பட்டுள்ளது. மக்களே உங்கள் மகள்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

குர்மீத்க்கு பல முறை பரோல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அக்டோபர் 22-ல் பரோல் அளிக்கப்பட்டது. அவர் பஞ்சாயத்து தேர்தலுக்கும், அதாம்புர் இடைத் தேர்தலுக்கும் பிரசாரம் பண்ண விடுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. `பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டாரின் பிரசார பாடலுக்கு இந்த சாமியார் இசையமைக்கிறாரா?’ என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் ஸ்வாதி.