Published:Updated:

``பெண் காவலருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு...” - எடப்பாடி, அண்ணாமலை காட்டம்

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல்
News
திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல்

சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் காவலர் ஒருவருக்குப் பாலியல் அத்துமீறல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளன.

சென்னை, விருகம்பாக்கத்தில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர ராஜா உள்ளிட்ட திமுக-வின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

``பெண் காவலருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு...” - எடப்பாடி, அண்ணாமலை காட்டம்

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றசாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ``திமுக-வின் பொதுக்கூட்டத்தில் பெண் காவலர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய திமுக நிர்வாகிகள்... பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடமிருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையின் பொறுப்பாளராக இருக்கக்கூடிய இந்தக் கையாலாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

இது போன்ற தொடர் சம்பவங்கள், இவரின் விடியா ஆட்சியில் சாமானியப் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்கவேண்டிய சூழ்நிலை, உடனடியாகக் குற்றவாளிகளைக் கைதுசெய்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று ட்விட்டரில் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில், "பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர்களைக் கைதுசெய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.

அண்ணாமலை
அண்ணாமலை

மேடைகளில் பெண்களை ஆபாசமாகப் பேசுவது திமுக-வுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்துகொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்தப் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைதுசெய்ய முதல்வர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.