Published:Updated:

``சீன எல்லையில் நிலைமை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது, ஆனாலும்..!" - ராணுவத் தளபதி சொல்வதென்ன?

ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே
News
ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே

`சீனாவுடனான வடக்கு எல்லைப்பகுதியில், அவர்கள் (சீனா) தங்களின் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள்.' - ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே

Published:Updated:

``சீன எல்லையில் நிலைமை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது, ஆனாலும்..!" - ராணுவத் தளபதி சொல்வதென்ன?

`சீனாவுடனான வடக்கு எல்லைப்பகுதியில், அவர்கள் (சீனா) தங்களின் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள்.' - ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே

ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே
News
ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பேசுபொருளானது. இந்த நிலையில், ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, சீனாவுடனான வட எல்லைப்பகுதியில் நிலைமை கணிக்க முடியாததாக இருப்பதாகவும், அதேசமயம் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

டெல்லியில் நடைபெற்ற வருடாந்திர ராணுவ தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மனோஜ் பாண்டே, ``சீனாவுடனான வடக்கு எல்லைப்பகுதியில், அவர்கள் (சீனா) தங்களின் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து அங்கு என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கவனித்துவருகிறோம். மேலும், அங்கு நிலைமை என்னவென்று கணிக்க முடியாததாக இருந்தாலும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், எந்தவொரு நிலைமையையும் சமாளிக்க போதுமான இருப்புகள் எங்களிடம் இருப்பதால், சீனாவுடனான ஏழு எல்லைப் பிரச்னைகளில் ஐந்து பிரச்னைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கிறோம்.

ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே
ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே

பாகிஸ்தானுடனான எல்லையைப் பொறுத்தளவில் நிறுத்தம் சிறப்பாக இருக்கிறது. ஆனாலும்கூட, பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கான ஆதரவு இன்னும் அங்கு இருக்கிறது. எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.