Published:Updated:

சிவகாசி: உராய்வு காரணமாக இரு இடங்களில், பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து; மூவர் பலி, ஆறு பேர் படுகாயம்!

வெடி விபத்து
News
வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இரண்டு வெவ்வேறு இடங்களில் மூலப்பொருள்களில் உராய்வுக் காரணமாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த இரண்டு வெவ்வேறு வெடி விபத்துகளில் மூன்று தொழிலாளர்கள் பலியானார்கள். ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

Published:Updated:

சிவகாசி: உராய்வு காரணமாக இரு இடங்களில், பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து; மூவர் பலி, ஆறு பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இரண்டு வெவ்வேறு இடங்களில் மூலப்பொருள்களில் உராய்வுக் காரணமாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த இரண்டு வெவ்வேறு வெடி விபத்துகளில் மூன்று தொழிலாளர்கள் பலியானார்கள். ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

வெடி விபத்து
News
வெடி விபத்து

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டுவருகிறது. 55 அறைகள்கொண்ட இந்தப் பட்டாசு ஆலையில் ஃபேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் 150 தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், வழக்கம்போல் இன்று பட்டாசுத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ரசாயன மூலப்பொருள்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

தரைமட்டம்
தரைமட்டம்

இந்த வெடி விபத்தில் அறை ஒன்று முழுவதும் தரைமட்டமாகி, அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் சிக்கினர். உடனடியாக இந்த விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழப்பு
உயிரிழப்பு

இந்த விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவி (வயது 58) என்பவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் இடிபாடுகளில் சிக்கி, படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சாமுவேல் ஜெயராஜ் (45) என்பவர் சிகிச்சைக்காக, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்துகள் ஏற்பட்டுவரும் நிலையில், விபத்தில்லா வகையில் பட்டாசு தயாரிப்புப் பணியை மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதேப்போல, சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் பெண் உட்பட இரண்டு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதனை விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் பொறுப்பெடுத்து நடத்தி வருகிறார். பட்டாசு உற்பத்திக்கு, நாக்பூர் உரிமம் பெற்ற இந்த தொழிற்சாலையில், 50-க்கும் மேற்பட்ட அறைகளில் 80 தொழிலாளர்களுக்கு மேல் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம்போல் நடைபெற்ற பணிகளின்போது திடீரென மூலப்பொருள்களில் ஏற்பட்ட உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிக்கி சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண்ணும், உடன் பணிபுரிந்த மற்றொரு தொழிலாளியும் பலியானர்கள். 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். படுகயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.