சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

Anushka Sharma - வருக வருக வாமிகா!

twitter.com/SadhaaAzhagiri

பார்த்துக்கிட்டே இருங்க, பழக்கதோஷத்துல ஒரு நாள், ‘அதிமுக-வை தனியாருக்கு விற்கிறோம்’னு அறிவிக்கப் போகுது பாஜக!

“போயிட்டு போகட்டும், எனக்கு அங்கே ஏதாவது பதவி கிடைக்குமா?” என அப்போதும் தவறாமல் கேட்பார் மாஃபா பாண்டியராஜன்!

Dinesh Karthik - கப்பு முக்கியம் கார்த்தி!
Dinesh Karthik - கப்பு முக்கியம் கார்த்தி!

facebook.com/Abdul Hameed Sheik Mohamed

பென்ஷனை மட்டும் நம்பியிருக்கும் 75 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இனி வருமானவரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

- நிர்மலா சீதாராமன்

புரட்சிகரமான திட்டம் மேம்... அப்படியே 100 வயதானவர்கள் சுயமாகத் தொழில் தொடங்க கடனுதவி அளித்தால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும்.

www.facebook.com/Vinayaga Murugan

சமீபமாக ராகுல் காந்தி சாப்பிடுற புகைப்படங்கள் அதிக அளவில் வெளிவருகின்றன. இது ஒருவகையில் எங்க அண்ணன் சீமானை மறைமுகமாகச் சீண்டும் வேலை. வன்மையான கண்டனங்கள்.

Cooku with Komali - கேக் வித் கோமாளிஸ்!
Cooku with Komali - கேக் வித் கோமாளிஸ்!

www.facebook.com/Ilango Krishnan

இந்த பட்ஜெட் உரை பத்தி எல்லாம் ரூமி ஏதும் சொல்லலையா... ஏன் எப்பவும் திருவள்ளுவரையே பிடிச்சுத் தொங்கறாங்க..?

twitter.com/JamesStanly

எல்லாத்தையும் தனியார் ஆக்குற‌ மாதிரி இந்த ஜெயிலயும் ஆக்கிட்டா நானே லீசுக்கு எடுத்துப்பேன்... ஆவண செய்யவும்!

twitter.com/HAJAMYDEENNKS

ரிசர்வ் பேங்க்கைத் தனியார்மயமாக்க வில்லை என சந்தோஷப்படுவது மட்டுமே தற்போதைய ஒரே ஆறுதல்!

Vani Bhojan - ஓ மை கடவுளே!
Vani Bhojan - ஓ மை கடவுளே!

twitter.com/HariprabuGuru

ராகுல் தமிழக வருகையில் நான் தெரிஞ்சிக்கிட்டது என்னன்னா, மனுஷன் கல்யாணம் மட்டும் பண்ணலைன்னா நிம்மதியா ஊர் ஊரா போய் விதவிதமா சமைச்சு சாப்பிடலாம்.

twitter.com/amuduarattai

‘நூடுல்ஸ்’ என்பது குழந்தைகளின் பசியைத் தூண்டுவதற்கான ஒரு சொல் ஆகும்.

twitter.com/RahimGazzali

ஏர் இந்தியா விற்பனைக்கு வருதாம். நீ வாங்கி, ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் கொடு மாறா...

Anushka Sharma - வருக வருக வாமிகா!
Anushka Sharma - வருக வருக வாமிகா!

twitter.com/Suyanalavaathi

டாக்டர்கிட்டயும் வக்கீல்கிட்டயும் பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அதுபோலதான், சலூன் கடைக்காரர் கிட்ட சொல்லக் கூடாத வார்த்தை, ‘லைட்டா குறைச்சிருங்க.’

twitter.com/sridhar_says

பெட்ரோல் போட்டுட்டு வேலைக்குப் போனதெல்லாம் ஒரு காலம். இப்ப பெட்ரோல் போடுறதுக்காகவே வேலைக்குப் போக வேண்டியிருக்கு!

twitter.com/shivaas_twitz

கணக்குப் பாடமும் புதுசா மாத்தின பாஸ்வேர்டும் ஒண்ணு. அந்த நேரத்துல நல்லா ஞாபகம் இருக்கும். அடுத்த முறை போடும்போது மறந்துடும்.