Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

காய்கறிச் சந்தையாக மாறிவிட்ட பேருந்து நிலையத்தில் இன்றொரு பேருந்து வந்து நிற்கிறது.

facebook.com/Isai Karukkal

இந்த `ரூமி’ இன்னும் எவ்வளவு தான்டா சொல்லிருக்கார்.

facebook.com

/Bala Chakravarth

பால் கெட்டுப்போனால் மாற்றித் தருகிறார்கள். மீன் கெட்டுப்போனால் மாற்றித் தருகிறார்கள். குடித்துக் கெட்டுப்போனால் குதூகலிக் கிறார்கள். குடியானவன் கெட்டுப் போனால் விட்டுப் போகிறார்கள்.

குடியே கெட்டுப்போனால் ஒளிந்து கொள்கிறார்கள்..!

yuvan
yuvan

facebook.com/மேகவண்ணன் புதியதடம்

காய்கறிச் சந்தையாக மாறிவிட்ட பேருந்து நிலையத்தில் இன்றொரு பேருந்து வந்து நிற்கிறது. திருவிழா யானையைப்போல் நானதைப் பார்த்தேன்.

facebook.com/gokul.prasad.737

‘பூ, பழம் வாங்கிக்க. சந்தனம், குங்குமம், நெய், கற்கண்டு, நிறைய ஒத்த ரூவா சாக்லேட்டு, ஊதுபத்தி, வெத்தலை, பாக்கு. சில்வர் தட்டு இருக்கா?’

‘ஏற்கெனவே எடுத்து வச்சாச்சு.’ ‘தட்டுல கண்ணாடி வைக்கணும். அப்பறம் பவுடரு.’ ‘பவுடர எல்லாமா தட்டுல வைக்கப்போறீங்க?’ ‘ஒரே செட்டா வாங்கி வச்சாத்தான் நல்லாருக்கும். மறக்காம சானிட்டைசர் வாங்கிடு. வர்றவங்க கைல எல்லாம் புளிச்சு விடணும்.’

hansika
hansika

‘பன்னீருக்கு பதிலாவா?’

‘நூறு மாஸ்க் வாங்கிக்க.’

‘நூறு மாஸ்க்கா... ஏன், கல்யாணத்துக்கு வர்றவங்களே அதைப் போட்டுட்டு வர மாட்டாங்களாமா?’

‘போன வாரம் நடந்த கோமதி கல்யாணத்தில முந்நூறு மாஸ்க் கொடுத்தாங்களாம். விதண்டாவாதம் பண்ணாம சொல்றத மட்டும் செய்.’

கொரோனா காலத்துக் கல்யாணங்கள்.

twitter.com/sultan_Twitz

கிருஷ்ணகிரியில் இருப்பது லோகஸ்ட் வெட்டுக்கிளியில்லை; லோக்கல் வெட்டுக்கிளிதான் - மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் #

லோகஸ்ட் : ஓஹோ..! இவங்க தான் உள்ளுர் ஆட்டக்காரங்களோ..?!

twitter.com/pachaiperumal23/

ஹலோ நான் கொரோனா குமாரு பேசறேன்... மாஸ்க் மணி இருக்காரா?

amyjackson
amyjackson

twitter.com/ItsJokker

ஜி, நிவாரண நிதியை PM CARE FUND க்கு அனுப்பட்டுமா?

தாராளமா அனுப்புப்பே...

ஜி, அந்த PM FUND எதுக்கு யூஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?!

~ முடியாதுப்பே, அத மட்டும் சொல்ல மாட்டோம். ரகசியம்ப்பே.

twitter.com/mohanramko

நேத்து வச்ச சாம்பாரை, சுட வச்சி அடுத்த நாள் சாப்பிடுற மாதிரி இருக்கு, இந்த ஊரடங்கு நீடிப்பு.

twitter.com/star_nakshatra

செய்வதெல்லாம் செய்துவிட்டு

சாரி சொன்னால் மனிதனும்,

பரிகாரம் செய்தால் கடவுளும்

சமாதானமாகிவிட வேண்டும் என நினைக்கும் உலகம் இது.

twitter.com/RahimGazzali

கையத்தட்டி, விளக்கேற்றியதால் செத்துப்போன கொரோனா வெல்லாம் ராத்திரில ஆவியா அலையுதாம். அதனால் எல்லோரும் இரவு நேரங்களில் மட்டும் லாக்டௌனைக் கடைப்பிடிக்கவும்.

twitter.com/SHIJA25

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுத உள்ளார் ; அனைத்து மொழிகளிலும் அந்தக் கடிதம் வெளியாகும்

நான் வேற பயந்துட்டேன்..! மக்கள் அனைவரும் கொரனாவுக்கு லெட்டர் போடுங்கன்னு சொல்லிடுவாரோன்னு.

twitter.com/eramurukan

வாட்ஸ் அப்பில் நாலைந்து பேர் ‘சுஜாதா மாயவரம் காளியாகுடி ஓட்டலைப் பற்றி எழுதியது’ என்று நீளமான ஒரு கட்டுரையை அனுப்பியிருக்கிறார்கள். வரவர சுஜாதா புதியதாக நிறைய எழுத ஆரம்பித்துவிட்டார்…

surya
surya

.facebook.com பிகு

உடல்கேலி என்றால் என்னவென்று தெரியும் வரை கவுண்டமணியின் காமெடிகளை முழுமையாக ரசிக்க முடிந்தது.

twitter.com/gmkhighnes

பாதை தவறக் கூடாதென்று ரயில் தண்டவாளத்தின் மேல் நடந்தே பீகார், உத்தரப்பிரதேசம் போய்ச் சேர்ந்தார்கள் அகதிகள். மும்பையிலிருந்து அசாம் போகவேண்டிய ரயில் வண்டியோ அசாம் போகாமல் பீகார் போய்ச் சேர்ந்தது. இது Butterfly effect இல்லை. இதுதான் வெட்டுக்கிளி effect.