சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

ஆபீஸ்ல வேக்ஸினேஷனுக்கு ஏற்பாடு பண்றாங்க. என்னைத் தவிர ஒருத்தர்கூட வேக்ஸின் போட்டுக்க முன்வரல... கேன்சல் ஆகுற நிலைமைல இருக்கு இப்ப

facebook.com/karkyjohnson

அதென்னடா, போதி தர்மர் எல்லாத்துக்கும் மருந்து கண்டுபுடிச் சவரு, வழுக்கை மண்டைக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க மறந்துட்டாரா... ஏதாச்சும் யோசிக்கிறப்போ மண்டய சொறிஞ்சிருந்தாக்கூட உறைச் சிருக்குமே?!

facebook.com/Senthil karikaalan

‘ராமர் கோவில்தானே கேட்ட, ஆஸ்பத்திரி கேட்கல, ஆக்சிஜன் கேட்கலையே’ என வட இந்திய மக்களிடம் மத்திய பா.ஜ.க அரசாங்கம் கேள்வி கேட்பதுபோல் பல மீம்களைப் பார்க்க முடிகிறது. அதில் சிரித்துக் கொண்டாட என்ன இருக்கிறது? நம் கண் முன்னே உயிர்கள் சரியும்போது அதைக் கொண்டாடுவது சரியா? அவன் இந்தியனோ, அமெரிக்கனோ, வேறு எந்த நாட்டவனாக இருந்தாலும் சரி! நாம் விழிப்புணர்வோடு இருக்கிறோம், மகிழ்ச்சி. அதற்காக அறியாமையில் இருக்கும் அப்பாவி மக்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பது அறமா?

twitter.com/razkolu

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை கட்சி இந்த எலெக்ஷன்ல போட்டியிடாததால தப்பிச்சிட்டீங்கடா டேய்!

Ritu Varma - அது ஒரு அழகிய கனாக்காலம்!
Ritu Varma - அது ஒரு அழகிய கனாக்காலம்!

twitter.com/gladiyes

ஆபீஸ்ல வேக்ஸினேஷனுக்கு ஏற்பாடு பண்றாங்க. என்னைத் தவிர ஒருத்தர்கூட வேக்ஸின் போட்டுக்க முன்வரல... கேன்சல் ஆகுற நிலைமைல இருக்கு இப்ப. அவ்ளோ பேரும் கான்ஸ்பைரஸி தியரிய நம்புறானுங்க. இத்தனைக்கும் எல்லாரும் படிச்சவனுங்க. ஆபீஸ்லயே கொலீக் ஒருத்தர் சீரியஸா இருக்கார். ஆனாலும் பயமில்ல.

twitter.com/ajithAKthala

தமிழ் கமென்ட்ரி: (அம்பத்தி ராயுடு சிக்ஸ் அடிக்கும்போது) ‘‘ப்பா, செம சிக்ஸ்!’’

(போலார்ட் சிக்ஸ் அடிக்கும்போது): ‘‘கிரவுண்ட் சின்னது சின்னது சின்னது!”

twitter.com/arattaigirl

18 வயசுக்கு மேல தடுப்பூசி போடறது உறுதி. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

twitter.com/senbalan

புது நோட்டே அச்சடிக்காமல் பழைய நோட்டைச் செல்லாதுன்னு சொன்னவர்களுக்கு, தடுப்பூசியே இல்லாமல் எல்லாருக்கும் தடுப்பூசின்னு சொல்றது பெரிய விஷயமா?

twitter.com/thooyon_

கொரானாப் பெருந்தொற்று நம் தேசத்தில் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஐ.பி.எல் கேளிக்கைகள் அவசியமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்... ஒரு நிமிஷம் இருங்க, மார்கன் சிக்ஸ், ஃபோர் அடிக்கறான் போல... அவன் அவுட்டானப்புறம் வந்து மீதி சொல்றேன்!

facebook.com/Manikandan

இதே கோவைதான் நாடாளுமன்றத் தேர்தலில் முழு வெற்றியைக் கொடுத்தது. அப்போ சாதி வெறியர்களாக, தமிழ்நாட்டில் ஓர் உத்தரப்பிரதேசமாகத் தெரியாத கோவை இப்போ தெரிவதற்குக் காரணம் திமுகவின் இயலாமை/போதாமை அவ்வளவுதான். இணைய உடன்பிறப்புகளின் உளவியல் ரொம்பவே எளிதானது, அவர்களின் போதாமைகளை அடுத்தவர் பேரில் எழுதிக்கொள்வார்கள்.

twitter.com/Abhirhythm

தூங்கற மாதிரி கண்ண மூடி நடிக்கிறேன்... கண்டுபிடிக்க மூக்குல கை வச்சுப் பாக்கறான்... தூங்குனா மூச்சுமாடா நின்னுபோயிரும்?!

twitter.com/ChainTweter

‘‘போன் 3 மணி நேரம் சார்ஜ் ஏறுது. 1 மணி நேரத்துல காலியாப் போயிடுது...”

‘‘போனுக்கு தெவசம் பண்ணவேண்டிய நேரம் வந்துருச்சு!”

twitter.com/Winter_Souljour

மருத்துவமனைகள்ல ஆக்சிஜன் பற்றாக்குறைக்குக் காரணம் மரங்களை அழிச்சதுதான்னு கண்டுபிடிச்சிருக்காங்க வாட்ஸப்ல!

twitter.com/mahesh74391485

அதுல பாருங்க சம்பந்தி... ஒரு கிலோ காப்பர் தயாரிச்சாதான் 3 கிலோ ஆக்சிஜன் கிடைக்குமாம் ஸ்டெர்லைட்ல!

twitter.com/idonashok

நல்லா வாழணும், செமையா வாழணும், செழிப்பா வாழணும், வளமா வாழணும் என்பதில் இருந்து ‘வாழணும்’ என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக் கிறது கொரோனா! எல்லோரும் இதைச் சேர்ந்தே கடப்போம்!

AR Rahman - அடுத்த பாட்டு ரெடி!
AR Rahman - அடுத்த பாட்டு ரெடி!

twitter.com/HariprabuGuru

ஆண்டவர்: நானாவது நாலு படத்தை மட்டும்தான் விட்டுட்டு வந்தேன். பின்னாடி ஒருத்தர் ஐஏஎஸ் வேலையெல்லாம் விட்டுட்டு வராருங்கய்யா...

twitter.com/iKrishS

கடைசிக் கட்ட சுஹாசினி டான்ஸ்னால 500 ஓட்டு கிட்ட பாதிப்பாகியிருக்கும்.

twitter.com/ranjanikovai

மோடிஜி தமிழ்நாட்டுக்கு வந்தா Goback modi டிரெண்ட் ஆகுறமாதிரி, ஸ்டாலின் கோயம்புத்தூருக்கு வந்தா எதுனா டிரெண்ட் ஆகுமா?

twitter.com/Pisaasu

வெறும் 38 வயசு, ஐசியூல இருந்து வெளில வந்து ஆக்சிஜன் லெவல் அப்படியே இறங்கி கொலாப்ஸ்டு,.நண்பரின் நண்பர்... இது ரொம்ப ஒர்ஸ்ட்டா இருக்கு! மக்களே, எவ்ளோ முடியுமோ அவ்ளோ கவனம் தேவை!

twitter.com/Abhirhythm

எல்லாருக்கும் பொறுமையா மெல்லிசா தோசை சுட்டுக் கொடுத்தப்புறம் நமக்கு சுடும்போது மட்டும் டக்குனு ரெண்டு ஊத்தப்பம் ஊத்திட்டு கடைய சாத்தலாம்னு தோணுது!

twitter.com/mbalajieee

நேற்று இசைப்பிரியாவை மறக்கச் சொன்னவர்கள், இன்று ஸ்னோலினை மறக்கச் சொல்லுகிறார்கள். நாளை அனிதாவையும் மறக்கச் சொல்லுவார்கள். #ஸ்டெர்லைட்

twitter.com/SeSenthilkumar

அவன்: நாளைலேர்ந்து கரன்ட் கட் ஆகும் பாரேன்.

நான்: ஏன், எடப்பாடி போகும்போது ஃபீஸ் கேரியரைப் புடுங்கிட்டுப் போய்டுவாரா?!

twitter.com/vpvoldemortt

‘‘இதெல்லாம் நார்மல்தான் சார். மீடியாதான் அப்டி பெரிசுபடுத்துறாங்க!”

பெரிய பெரிய மருத்துவமனைகளே நிரம்பி, படுக்கை வசதி இல்லாம, ஆக்சிஜன் இல்லாம, எரிக்க மயானங்கள் இல்லாம இன்னும் நாடு எவ்வளவு மோசமான சூழ்நிலைக்குப் போனாலும் சிலருக்கு எல்லாமே நார்மல்தான்.

twitter.com/SundarrajanG

மூச்சுவிடத் திணறும் இந்தியர்களுக்காக ஆக்சிஜன் தயாரிக்கத்தான் ஸ்டெர்லைட் அனுமதி கேட்கிறது என்று இன்னுமா உலகம் நம்புகிறது?

twitter.com/urs_venbaa

2 வருஷமா ஸ்கூலுக்கு அனுப்பாம, அத்தனை பேரையும் ஆல் பாஸ் செய்ய வச்ச இந்த அப்பாவி எடப்பாடியாருக்கு ஓட்டுப் போடல இல்லையா..?

twitter.com/HariprabuGuru

பாண்டி பாஜக: இங்க ஒரு எம்.எல்.ஏ ஜெயிச்சிருக்காரே.

யோவ், அவர் அந்தக் கட்சி முதல்வர் கேண்டிடேட். அவரையாவது விட்டு வை...

twitter.com/vasantalic

சீமான் மூன்றாவது இடம் எனப் பலர் சொல்கிறார்கள். இரண்டாம் இடத்திற்கும் மூன்றாம் இடத்திற்கும் எத்தனை கி.மீ தூரம் உள்ளது என யாராவது சொல்லுங்க!

twitter.com/iKrishS

4 மாநிலத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சிப் பதவியிலிருந்து விலகணும்னுகூட ராகுலைக் கேக்க முடியாது. அடிக்கடி கேக்குறாங்கன்னு ரொம்ப அட்வான்ஸா பண்ணி வச்சிருக்காப்ல.