சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

E.V.M னா Electronic Voting Machineனு அர்த்தமா? இல்ல, Eppa Venumnalum Maathikalamனு அர்த்தமாண்ணே?

twitter.com/AnandNodal

தடுப்பூசி போட்டா கொரோனா வராதுன்னு சொல்லல. பெரும் பாதிப்பு/உயிரிழப்பு ஏற்படாது என்பதே தெளிவு!

Gym பயிற்சியாளரும் வெண்டிலேட்டர் போயிருக்காரு. ‘எந்த ஜுரத்துக்கும் உடம்பு தாங்காது சார்’ என ஓடி வந்தவரும் சாதாரணமா குணம் ஆயிருக்காரு. கோவிட் யாrai என்ன செய்யும்னே தெரியல!

தடுப்பூசி உயிர்காக்கும்.

kajal Agarwal - I AM BACK!
kajal Agarwal - I AM BACK!

twitter.com/tparaval

After TN visit,

மோடி: எப்டியும் 10 தேறிடும்...

எடப்பாடி: என்ன, ஜெயிக்கிற சீட்டா?

மோடி: இல்லை, கோயில் விசிட் பண்ணோம்ல. பத்து புரொஃபைல் போட்டோ தேறிடும்னு சொன்னேன்.

twitter.com/Baashhu

ஓட்டு எண்ணுற அன்னிக்கு காலைல மோடி யாருக்கு வாழ்த்து சொல்றார்னு பாத்தா ரிசல்ட் தெரியும்.

www.facebook.com/uma.pa.se9

Chaos Theory, akira Kurasova, Virus, Tsunami, weather prediction, Gandhi Killing, Godse, Varma Kalai, தேசப்பற்று டா, BingBang Theory, வாழ்வியல், வைஷ்ணவம், லலிதா சகஸ்ரநாமம், பரதநாட்டியம், காம்போதி ராகம், world history, ஒற்றை வைக்கோல் புரட்சி...

இதப் பத்தி எல்லாம் பேசுகையில் Stephen Hawking, Einstein போல் பேசுவது... எளிமையான இட ஒதுக்கீடு குறித்துக் கேட்டால் மட்டும், “ஒரு எட்டாங்கிளாஸ் பையன்கிட்டயே எல்லாத்தையும் கேட்டா எப்படி?”

www.facebook.com/gokul.prasad.

என்னிக்கு நாம எல்லாத் தமிழ் சினிமா இயக்குநர்களையும் விவசாய வேலைக்கு வலுக்கட்டாயமா பத்தி விடறமோ, அன்னிக்குத்தான்யா இந்தக் கொடுமைக்கெல்லாம் முடிவுகட்ட முடியும்...

twitter.com/RajaAnvar

காலண்டர் மட்டுமே தினம் தினம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.

யார் சொன்னா?

அந்தக் காலண்டர்லதான் போட்ருக்கு.

twitter.com/pachaiperumal23

அன்பார்ந்த நண்பர்களே, இன்று காலை எனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் இருந்து உப்புமாவைப் போற்றும் விதமாக ஒரு ட்வீட் போடப்பட்டி ருக்கிறது. அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அதைச் செய்தவர்களைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

twitter.com/balasubramni1

‘‘அண்ணே, ஒரு சந்தேகம்ணே!’’

‘‘என்னடா சந்தேகம்?’’

“E.V.M னா Electronic Voting Machineனு அர்த்தமா? இல்ல, Eppa Venumnalum Maathikalamனு அர்த்தமாண்ணே?”

twitter.com/mohanramko

‘சில்லறை இருக்கா’ என்பதன் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் ‘கூகுள் பே, போன் பே இருக்கா?’

twitter.com/LAKSHMANAN_KL

எம்.ஜி.ஆர் நடித்த ‘மதுரை வீரன்’ படத்தை மறக்க முடியாது!- மோடி.

உங்களைப் பார்க்கும்போதெல்லாம்... எம்.ஜி.ஆர் நடிச்ச ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம்தான் ஞாபகத்துக்கு வருது ஜீ..!

Samantha - நெக்ஸ்ட்டு ரெஸ்ட்டு !
Samantha - நெக்ஸ்ட்டு ரெஸ்ட்டு !

twitter.com/prabhu65290

மாஃபா. பாண்டியராஜன்: tவிட்டர் ஐடி என்னோடதுதான், ஆனா குறிப்பிட்ட அந்தப் பதிவை நான் போடலை...

இதே வசனத்தை எத்தன பேர்தான் சொல்லுவீங்க..?!

twitter.com/Kozhiyaar

நம்ம Accountல இருந்து பணம் எடுக்கிறது உடனே எடுத்துடுவாங்களாம்,

ஆனால் ஏதாவது தவறாக விட்டால் திரும்பப் பணம் வர மூணு நாள் ஆகுமாம்?!

என்னங்கடா Digital India?

twitter.com/skpkaruna

வீரம் என்பது செயலுக்கும் பேச்சுக்கும் பொறுப்பேற்பது.

1. ஆ.ராசா பேச்சுக்கு அவர் பொறுப்பேற்றார். விளக்கம் சொன்னார். வருத்தம் தெரிவித்தார்.

2. அண்ணாமலை தனது மிரட்டல் பேச்சை, யாரோ செய்த மிமிக்ரி என்றார்.

3. மாஃபா தனது ட்விட்டர் பதிவை தனக்குத் தெரியாமலேயே யாரோ போட்டது என்கிறார்.

twitter.com/Kannan_Twitz

காசு கொடுக்காம யார்னா ஓட்டு கேட்க வந்தா, ‘இவங்களுக்குலாம் வெட்கமாவே இருக்காதா? ஓசில ஓட்டு வாங்கிட்டு போறதுக்கு’ன்னு யோசிக்கிற அளவு டிசைன் பண்ணி வச்சிருக்காங்க!

twitter.com/kumarfaculty

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை!

தேர்தல் மட்டுமே என்னைக் கட்டுப் படுத்தும். அப்புறம் துள்ளி விளையாடுவேன்.

twitter.com/Aathiraj8586

ஆ.ராசாவை தி.மு.க-வுக்கு ஆதரவா பிரசாரம் செய்யக் கூடாதுன்னு சொல்லிட்டு மோடி, அமித்ஷா, யோகி எல்லாம் வந்து தி.மு.க-வுக்கு ஆதரவா பிரசாரம் பண்ணிட்டுப் போய்ட்டாங்க.

twitter.com/Vikki_Twits

வாழ்கையில் சில விஷயங்கள் தெரியவே தெரியாது...

1.வீட்டுல ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரி ஏன் இருக்குன்னு தெரியாது.

2.IPL டைம்ல அம்பயர்ஸ் மும்பை டீம் ப்ளேயரா ஏன் மாறுறாங்கன்னு தெரியாது.

3.தியாகத் தலைவி சின்ன அம்மா என்ன தியாகம் பண்ணினாங்கன்னு தெரியாது.

twitter.com/saravankavi

``அரசியலுக்கு இடைஞ்சல் ஏற்பட்டால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்.” - கமல்ஹாசன்.

புரிஞ்சுடுச்சு ஆண்டவரே, அரசியல்ல நடிப்பைத் தொடரப்போறீங்க...

twitter.com/mohanramko

‘இதைப்போய் ஏன் வாங்கின’ன்னு யாராவது மனைவியிடம் கேட்டா, ‘நான் எவ்வளவோ சொன்னேன், என் ஹஸ்பண்ட்தான் வாங்கிட்டு வந்துட்டார்’னு அட்மின் மேல் பழி போடற மாதிரி கணவன் மேல் பழி போட்டுடறாங்க.

SHIVAANGI - என்ன தெரிகிறது!
SHIVAANGI - என்ன தெரிகிறது!

twitter.com/RajaAnvar_

தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் திடீர் உயர்வு!

சிலிண்டர்ல வச்சேன்னு பார்த்தியா...டோல்கேட்ல வச்சேன்.

twitter.com/Suyanalavaathi

‘‘ஏன் தலைவரே அவன அடிக்குறீங்க?’’

‘‘அவுங்க இது மாம்பழ சீசன்னு விளம்பரம் போடுறாங்க... நம்ம தாமரை சீசன் எப்ப வரும்னு கேக்குறான்.’’

twitter.com/mohanramko

பிஜிஎம் இல்லாம ஒரு வீடியோ முழுமை பெறாத மாதிரிதான், 2 இருமல் இல்லாம ஆபீஸுக்கு லீவு சொல்றது.

twitter.com/GreeseDabba2

பாட்டி செத்துட்டாங்கன்னு லீவு கேட்டதன் நவீன வடிவமே, ‘ஆஸ்பத்திரில இருந்தேன், அதான் போன் எடுக்க முடியல’ன்னு சொல்லப்படும் காரணம்.

twitter.com/Subashini_BA

ஒரு விஷயம் கவனிச்சீங்களா... ஜெ. சமாதி பக்கம் ஒருத்தர்கூடப் போகலை பாருங்க!

தர்மயுத்தம் எல்லாம் பணம், பதவி பெறுவதற்கு மட்டுமே!

twitter.com/iamsathishvarun

நிஜம் எப்போது மறைகிறது...

அன்பானவர்மேல் வைக்கும் நம்பிக்கையின்போது.

twitter.com/Suyanalavaathi

கொரோனா டு வெயில்:

ஒத்துக்குறேன். நீ என்னையவிட மோசமானவன்தான். எனக்கு பயப்படாம எல்லாரும் வீட்டவிட்டு வெளிய வராங்க. ஆனா, உனக்கு பயந்து ஒருத்தரும் தேவையில்லாம வெளிய வர மாட்றாங்க.

www.facebook.com/saravanakarthikeyanc

தி.மு.க கூட்டணி 150+ வாங்கும் என்று சொன்னாலும் பார்ப்பனிய, இந்துத்துவச் சகவாசம் எனத் திட்டுகிறார்கள். 220+ என்றுதான் சொல்ல வேண்டுமாம். 219 என்று சொன்னால் கூடப் பரம்பரைத் திராவிடத் துரோகிதானாம்.

கணிப்பு சொல்ற நமக்கே இந்தத் திட்டு விழுகுதே, ஒரிஜினலா ஓட்டு போடப் போற பொது மக்களைச் சும்மா விடுவாங்கன்னு நினைக்கறியா நீ!

twitter.com/mohanramko

அரிசியையும் தண்ணீரையும் ஒண்ணா டிபன் பாக்ஸ்ல போட்டு, ஆபீஸுக்குக் கொண்டு போய்ப் பார்த்தா சாதமாகிடும் போல...

என்னா வெயிலு...

Akshara - சின்ன சின்ன அன்பில் தானே !
Akshara - சின்ன சின்ன அன்பில் தானே !

twitter.com/AravindRajaOff

ஆளும் கட்சிக்கு ஆதரவா பிரதமர் பிரசாரம் பண்ண வந்தா, எதிர்க்கட்சிக்காரனும் பிரதமர டேக் பண்ணி எங்க தொகுதிக்கு வாங்கன்னு கூப்புடுறான். ஐடி ரெய்டு விட்டா, அட்ரெஸ் தர்றேன் எங்க வீட்டுக்கும் வாங்கன்னு சொல்றானுங்க.

ஊராடா இது, ச்சைக்.

twitter.com/radhavenkat2

வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கும் மரத்தை நோக்கிக் கத்தும் பறவையைக் காணும் சிறுமி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் ஓவெனக் கதறி அழுகிறாள்.

சிறுமியின் ஆழ்மனதில் அழுந்திய சோகத்தை வெளியேற்றிய கணத்தில் பறவை அவ்விடம் விட்டுப் பறந்து போகிறது.

சில நிகழ்வுகள் எதற்காகவேனும் நிகழ்கின்றன.

twitter.com/raajaacs

நினைவு தடவிக்கொடுக்கும்போது வலி குறைந்து போகிறது.

twitter.com/amuduarattai

தூக்கமின்மை நோயை சரி செய்ய, மருத்துவமனைக்குச் செல்வதை விட, சலூனுக்குச் செல்வதே உடனடி பலன் தரும்

twitter.com/manipmp

சரக்கடிச்சவனும், சென்ட் அடிச்சவனும் அடிக்கடி கேட்பது, ‘‘வாசம் வருதா’’னு தான்!