
உண்மையிலேயே அந்த ஏழு பேரை விடுவிக்கிற அதிகாரம் யார்கிட்டதான் இருக்கோ?
twitter.com/pachaiperumal23
உண்மையிலேயே அந்த ஏழு பேரை விடுவிக்கிற அதிகாரம் யார்கிட்டதான் இருக்கோ?
twitter.com/skpkaruna
பொதுச்செயலாளராக சிறைக்கு அனுப்பி வச்சுட்டு, திரும்ப வரும்போது ‘நீங்க உறுப்பினர்கூட இல்லை’ எனக் கதவை அடைக்கும் திருப்பம். இதனால்தான் அரசியலும் சினிமாவும் தரும் சுவாரஸ்யத்தை மற்ற துறைகளால் தர முடியவில்லை.

twitter.com/Raajavijeyan
சமீபகாலத்தில் என்னதான் புதுப்புது மாடல்களில் பைக்குகள் வந்தாலும்... கட்டைப் பைல காய்கறி வாங்கி சைடுல போட்டுக்கிட்டுப் போக முடியலையே!
twitter.com/thoatta
‘‘ஏன்டா இப்படி எல்லாத்தையும் வித்துக்கிட்டே இருக்கீங்க? எதாவது வாங்குங்கடா...’’
‘‘அதான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை வாங்குறோம்லண்ணே!’’
twitter.com/Annaiinpillai
லோ பட்ஜெட் கல்யாண ஆல்பம் #பென்டிரைவ்
twitter.com/karna_sakthi
தேசம் என்பது வெறும் நிலமல்ல, அதில் வாழும் மக்களின் உணர்ச்சித்தொகுப்பு. எப்பொழுதும் மக்கள் பக்கம் நிற்கின்றவர்களே உண்மையான தேசிய விளையாட்டு வீரர்கள்.
twitter.com/sultan_Twitz
வெளிநாட்டுக்காரன் முதலீடு மட்டும் வேணுமாம்... ஆனா வெளிநாட்டுக்காரன் கருத்து சொல்லக்கூடாதாம். மொதல்ல நீங்க மத்த நாட்டுப் பிரச்னைல மூக்கை நுழைக்காம இருங்க!
twitter.com/ItsJokker
ரஜினி: பாரபட்சம் பாக்காம வச்சு செஞ்சுருப்பாங்களே.
சச்சின்: ஆமா.
ரஜினி: ‘தலைவா’ன்னு சொன்ன வாயால கெட்ட வார்த்தைல திட்டியிருப்பாங்களே.
சச்சின்: ஆமா. ஆனா இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
ரஜினி: என்னையும் இப்படித்தான் செய்வானுகளே.
twitter.com/pithanspeaks/
போலி எஸ்பிஐ கிளை நடத்திய மூன்று பேர் கைது.
சிரிச்ச முகத்தோட சேவை செஞ்சுருப்பானுங்க, சிக்கிட்டானுங்க.
twitter.com/shivaas_twitz
அதென்ன, ஃபங்க்ஷன்ல பணக்கார சொந்தக்காரங்களைப் பார்த்ததும், மோடியைப் பார்த்த எடப்பாடியார் மாதிரி பவ்யமா எழுந்து நின்னு எல்லாப் பல்லும் தெரியிற அளவுக்குச் சிரிக்கிறாங்க. ஏழை சொந்தத்தைப் பார்த்தா ஒரு சைடு வாயை மட்டும் பின்னாடி இழுத்து கடமைக்கு ஒரு சிரிப்பு சிரிக்கிறாங்க.

twitter.com/ItsJokker
சீமான் ~ அப்படியே அந்த மொத்த செந்நாய்க் கூட்டமும் என்கிட்ட வந்திருந்தா என்ன பண்ணியிருப்பேன்னு கேளேன்...
என்னையா பண்ணியிருப்பே?
மொத்த செந்நாயவும் கொன்னு செந்நாய் வறுவல் சாப்பிட்டுருப்பேன்.
twitter.com/arattaigirl
யாருமே மாஸ்க் போடறதில்ல. போடறவங்களும் மூக்கை கவர் பண்றதில்ல. இதுல சிலர் மாஸ்க்கே பார்க்க கொரோனா அட்டாக் பண்ணினாப்ல கிழிஞ்சு தொங்குது. ஒருத்தர் மார்க்கெட்ல இருந்து வெளிய வந்ததும் காய்கறிக் கூடைக்குள்ள மாஸ்க்கைப் போட்டுட்டுப் போறாரு.
twitter.com/mrithulaM
ஸ்கூலுக்குப் போற மொத நாளே கம்ப்ளைண்ட் இழுத்துவிட்டு நம்மளை வேலைக்கும் லேட்டா போக வெச்சு கடுப்பாக்கிவிட மகன்களாலதான் முடியும்.
facebook.com/gokul.prasad.
கொரோனா காலத்தில் குடும்பத்தை மெயிண்டெய்ன் செய்வதைவிட எடையை மெயிண்டெய்ன் செய்வது தான் பலருக்கும் பிரச்னையாக இருந்திருக்கிறது. நீண்ட நாள்கள் கழித்து சந்திக்கிறவர்கள் எல்லோருக்கும் ஏழெட்டு கிலோ எடை அதிகரித்து பீம்பாய் மாதிரி காட்சியளிக்கிறார்கள். எடை கூடாமல் இருப்பவர்களைப் பார்த்து, ‘ஒண்ணும் பிரச்னை இல்லையே? எல்லாம் நல்ல படியாத் தானே போய்ட்டு இருக்கு?’ என நலம் விசாரிக்கும் அளவிற்கு நிலைமை கைமீறிச் சென்றுவிட்டது.

twitter.com/rajivgandhilaw
ஒரு தரப்பினரால் கொண்டாடப்படும் A2-ன் சிறை விடுதலையும், மறு தரப்பினரால் கற்பிக்கப்படும் A1 அவர்களின் அரசியல் புனிதத்தன்மையும் ஒன்றை உணர்த்துகிறது. நடப்பது Accusedகளின் ஒப்புதல் வாக்குமூல ஆட்சிதானே ஒழிய ‘சட்டத்தின் ஆட்சி’ இல்லை.
twitter.com/shivaas_twitz
பந்தியில தண்ணி பாட்டில் வச்சிருந்தா, சாப்பாட்டுல கை வைக்கிறதுக்கு முன்னாடி பாட்டில் மூடியைத் திறந்து வச்சிக்கிற யோசனை எல்லாம் ஏழாம் அறிவு சார்ந்தது.
twitter.com/amuduarattai
மாற்றான் வீட்டு பிரியாணிக்கு மணம் அதிகம்.
twitter.com/RahimGazzali
கொசு, ஈக்கு எல்லாம் பயப்படமாட்டோம்! - அமைச்சர் ஜெயக்குமார்.# ஆமா... அவசர அவசரமா சமாதியை மூடுவோம். கட்சி ஆபீஸ் வாசலில் தடுப்பு போட்டு போலீஸை நிப்பாட்டுவோம். மற்றபடி பயப்படவெல்லாம் மாட்டோம்.
twitter.com/HAJAMYDEENNKS
ஊரை அடித்துக் கொள்ளையடித்த வழக்கில் சிறை சென்றவர் சசிகலா - அமைச்சர் சி.வி.சண்முகம் #அதிமுக ஆட்சியில் என்பதைச் சொல்ல மறந்துட்டீங்க!

twitter.com/saravankavi
அதெப்படிப்பா மக்கள் நலன் கருதி விடற அறிவிப்பு எல்லாம் தேர்தல் சமயத்தில் மட்டும் வருது?
twitter.com/HariprabuGuru
‘‘ஏண்ணே அவனை அடிக்குறீங்க?’’
‘‘பொங்கல் செலவுக்கு 2500 ரூபாய் பணம் கொடுத்தாங்களே, காதலர் தின செலவுக்கு எவ்வளவு தருவாங்கன்னு கேக்குறாம்ப்பா.’’
twitter.com/asdbharathi
முந்திரிப் பருப்பை வாயில் போடாமல் பாயசத்தில் மட்டும் போடுவதற்கு மாபெரும் மனக் கட்டுப்பாடு வேண்டும்.
twitter.com/mohanramko
‘‘அண்ணே, நம்ம ஊர்ல ரோடு போடப் போறாங்க...’’
‘‘ஆணி வச்ச ரோடா? வைக்காத ரோடா?’’
Nithya menen - நினைவெல்லாம் நித்யா!
பர்சனல் லோனையும் தள்ளுபடி செய்தீங்கன்னா... மொத்தத் தொகுதியும் உங்களுக்குத்தான் ஐயா!