
ஓட்டலுக்குச் சென்றதும் முதலில் இரண்டு இட்லி கேட்பவர்கள் பெருசுகள்.
twitter.com/mekalapugazh
இரண்டு இட்லி ஒரு வடைன்னா நடுவயதினர்...பூரி மசாலான்னு சொன்னால் இளசுகள்.

twitter.com/Suyanalavaathi
ஞாயிற்றுக்கிழமை :
லேட்டா குளிப்போமா - கிட்ஸ்
தலைக்குக் குளிப்போமா - அடல்ட்ஸ்
கண்டிப்பா குளிக்கணுமா - லெஜெண்ட்ஸ்
twitter.com/manipmp
குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில் இல்லாதவர்கள் எல்லாம் தூரத்துச் சொந்தமாகிவிட்டனர்.

twitter.com/skpkaruna
தொடங்கியபோது, ‘பாபர் மசூதி இடிப்பு வழக்காக’ இருந்தது, நிறைவுறும்போது ‘அயோத்தி நில வழக்காக’ மாறியதில் உள்ளது 29 ஆண்டுக்கால இந்திய அரசியல் வரலாறு.
twitter.com/manipmp
பைக்கில் டோல் கேட்டைக் கடப்பவர்கள் எல்லாருமே சுங்கம் தவிர்த்த சோழர்களே.
twitter.com/ItsJokker
அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து நடிப்பேன் ~ ரஜினிகாந்த்.
ஆமா, வண்டியை எப்போ விடுவ?
~ வாடகை குடுக்கும்போது
வாடகை எப்போயா குடுப்ப?!
~ வண்டியை விடும்போது குடுப்பேன்.

twitter.com/Raajavijeyan
அரைமணி நேரம் தொட்டி ஆட்டுனா
32 நிமிஷம் தூங்குறதும்
ஒரு மணி நேரம் தொட்டி ஆட்டுனா
62 நிமிஷம் தூங்குறதும்
குழந்தைகளின் டிசைன்...
twitter.com/Thaadikkaran
குழந்தை கூட வாக்கிங் போவதென்பது குரூப் 4 எக்ஸாம் எழுதுற மாதிரி, அத்தனை கொஸ்டின்ஸ் இருக்கும் ஆனா நமக்கு பதில்தான் தெரியாது..!
twitter.com/withkaran
இப்படித்தான் தமிழிசை தேர்தல் டைம்ல தி.மு.க பா.ஜ.க-வோடு பேச்சுவார்த்தை நடத்துச்சுன்னு சொன்னாங்க. ஸ்டாலின் ஆதாரம் கேட்டதும், பேச்சுவார்த்தை நடத்தலைன்னு நீங்கதான் ஆதாரம் கொடுக்கணும்னு சொன்னாங்க.

facebook.com/Venkatesh Chakravarthy
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு கட்டங்களைப்பற்றியும், அவற்றைச் சார்ந்த வழிமுறைகள், விழுமியங்களைப் பற்றியும், அவற்றுடன் தொடர்புள்ள கேள்விகளையும் ஏதாவது ஒரு விதத்தில் பேசுவது தெற்காசிய மதங்களுக்குப் பொதுவான ஒரு வழக்கம். ஆனால் வைதீக மரபில் இந்த நான்கு கட்டங்களை நான்கு புருஷார்த்தங்கள் என்று சம்ஸ்கிருதத்தில் குறிப்பிட்டிருந்தாலும் அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு நூல்கள் உள்ளன. அறத்திற்குப் பல தர்ம சாஸ்திரங்கள், கொடூரமான மனுஸ்மிருதி உட்பட. பொருளுக்கு அர்த்த சாஸ்திரங்கள். இன்பத்திற்கு காமசூத்ரா போன்ற காம சாஸ்திரங்கள். வீட்டுக்கு உபநிடதங்கள். ஆனால் எல்லாவற்றையும் ஒரே நூலில் திருக்குறள்போல் ரத்தினச்சுருக்கமாகச் சொன்ன நூல் எதுவும் சம்ஸ்கிருதத்தில் கிடையாது. மேலும், திருக்குறள் சொல்லும் அறம் வேறு; மனுஸ்மிருதி சொல்லும் அறம் வேறு. இப்படி எத்தனையோ வேற்றுமைகள் அதில்.

facebook.com/Aadhavan Dheetchanya
சற்றுமுன் கிடைத்த தகவல்: பசும்பாலில் தங்கம் இருப்பதுபோலவே எருமைப்பாலில் பிளாட்டினம் இருப்பதாகக் கண்டறி யப்பட்டுள்ளது.
facebook.com/மு.இரா.செந்தில் குமார்
என்னது, ஒண்ணாம் தேதியானா ஹவுஸ் ஓனர் வாடகை கேக்குறாரா? நீ என்ன பண்ற, நைட்டோட நைட்டா உன் தாத்தன் போட்டோவ நடுவீட்ல புதைச்சு வெச்சிரு. மீதிய கோர்ட்டுல பார்த்துக்கலாம்.
twitter.com/ItsJokker
தன் கணவர் எத்தனை “சுறுசுறுப்பானவர்” என்றும், எவ்வளவு “நகைச்சுவைத் தன்மை வாய்ந்தவர்” என்றும், தன் தங்கையின் வருகைக்குப் பின் மனைவி அறிந்து கொள்ளலாம்.

twitter.com/kaviintamizh
எதிர்க் கருத்து சொல்றதுக்கு ஒரு தயக்கம் இருக்கில்ல... இதான் ஜனநாயகத் தோல்வியின் முதல் அறிகுறி...
twitter.com/amuduarattai
ஆண்களின் கால் ஹிஸ்ட்ரி அதிக டயல்டு கால்களைக் கொண்டது. பெண்களின் கால் ஹிஸ்டரி அதிக மிஸ்டு கால்களைக் கொண்டது.
facebook.com/vadivel.murugan.796
ஐயப்பனுக்குப் பதிலா வள்ளுவர் சாமிக்கு மால போடுறேன்னு போட்டிருந்தா, இன்னக்கி வேர்ல்டு டிரெண்டு சிம்புதான்...