கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

உங்களையெல்லாம் பாராட்டி மலர் தூவிப் பாராட்டுகிறோம்.

twitter.com/star_nakshatra

ஒரு மாசமா குடும்பத்துல சந்தோசமா இருந்தோம். காசு இல்லாட்டியும் தேவையில்லாத செலவு இல்ல. இன்னிக்கு அந்த டாஸ்மாக் சனியனால திரும்ப சண்டை - ஆபீஸ்ல வேல பாக்குற ஒரு அம்மாவின் ஆதங்கம்.

anupamahere
anupamahere

twitter.com/HAJAMYDEENNKS

ஆல்கஹால் இருக்கிறதனால சாராயம் கொரோனாவைக் கொல்லும்னு நிஜமாவே நம்பிட்டாங்கபோல!

twitter.com/mohanramko

உங்களையெல்லாம் பாராட்டி மலர் தூவிப் பாராட்டுகிறோம். துப்புரவுப் பணியாளர்கள் நவ்- யோவ், நாளைக்கு காலைல நாங்கதான் அதையும் பெருக்கணும்.

CM Meet
CM Meet

twitter.com/ikrishS

போறபோக்கப் பாத்தா, மே கடைசி, ஜூன் வாக்குல ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலாவுக்குக் குவிந்த மக்கள்ன்ற செய்தியும் வரும்னு நினைக்கிறேன்.

twitter.com/TamilOffl

ஒரேதா ரெண்டு மாசம்னா ஷாக் ஆய்ருவானுங்கனு இந்தா வந்துருச்சுனு மொத தடவ பாதயாத்திரை கூட்டிட்டுப் போறவனுக்குச் சொல்றாப்ல ஒரு வாரம் தான் ஒரு வாரம் தான்னே எக்ஸ்டண்ட் பண்ணி கூட்டுட்டுப் போறானுங்க.

twitter.com/thoatta

முதல் நாள் போகக் கூடாது. கும்பல் அதிகமா இருக்கும், தெரிஞ்சவன் பார்ப்பான். ரெண்டாவது நாளும் போகக் கூடாது, நாம கேட்கிற பிராண்ட் இருக்காது. மூணாவது நாள் மதியம் போனா அள்ளிட்டு வரலாம். தட் சொடுக்கு பால் போட்டா அவுட்டாகிடுவான் மொமன்ட் #Free #Advise

thirumavalavan
thirumavalavan

twitter.com/onaytwitz

முழு மது விலக்கு வேணும்னு கூவணும்.கூட்டணி தர்மத்தையும் காப்பாத்தணும்.கடைய திறக்கச் சொன்ன அரசாங்கத்தையும் திட்டக் கூடாது, எதிர்க்குற திமுகவையும் திட்டணும்.இதுக்கு இடையில டைமுக்குப் போய் சரக்கும் வாங்கணும்னா ஒருத்தன் எத்தன வேலைதாங்க பாக்குறது.

twitter.com/mrithulaM

ஆணோட சமையல் எவ்வளவு கேவலமாருந்தாலும் அவங்க மனசு கஷ்டப்படக் கூடாதேன்னு பெண்கள் பாராட்டுவோம்... அந்த மனசெல்லாம் ஆண்களுக்கு வரவே வராது.

twitter.com/SKP KARUNA

சிம்பிள் லாஜிக்! டாஸ்மாக் திறக்கப்பட்ட போதோ, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியபோதோ, சமூக இடைவெளி தெறித்து ஓடியபோதோ, குடிகார ஆண்களால் தாய்மார்கள் அடிபட்டபோதோ ரஜினியாக அமைதியாக இருக்க முடியும். ஆனால், சினிமாவோ அரசியலோ கமல்ஹாசன் ஸ்கோர் செய்தால் அவரால் பதற்றமடையாமல் இருக்கவே முடியாது.

twitter.com/mangudiganesh

நிருபர்: பிரதமர் ஏன் சந்திக்கவில்லை?

பினராயி விஜயன்: அதைவிட எனக்கு முக்கியமான பணிகள் உள்ளன!

நிருபர்: மதுக்கடை ஏன் திறக்கவில்லை?

பினராயி விஜயன்: போலீசாருக்கு அதைவிட முக்கியமான பணிகள் உள்ளன!

‘என்ன மனுஷன்யா நீ...’

lydian nadhaswaram
lydian nadhaswaram

facebook.com/Mala Thi

சென்னைல இருந்து வந்தோம்னு சொன்னா சீனால இருந்து வந்தா மாதிரி பாக்குறாங்க.