பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

வலைபாயுதே

குஷ்பு என்றால் அழகு!
பிரீமியம் ஸ்டோரி
News
குஷ்பு என்றால் அழகு!

ஒரு டாக்டர் அப்பாய்ன்மென்ட் கேன்சல் பண்ணலாம்னு போன் பண்ணினேன்.

GreeseDabba2

ஒரு டாக்டர் அப்பாய்ன்மென்ட் கேன்சல் பண்ணலாம்னு போன் பண்ணினேன்.

ரிசப்சனிஸ்ட் காரணம் கேட்டார். ‘நாட் பீலிங் வெல்’னு சொல்லிட்டு வெச்சுட்டேன். # ரெண்டாயிரம் வருசமா லீவுக்குக் காரணம் கேட்டா, suffering from fever-னு லீவு லெட்டர் எழுதிட்டு இருந்த பய... திடீர்னு காரணம் கேட்டா, எப்படிச் சொல்லுவான்?

Thilipkumaar Ganeshan

“பிரபாகரன் எனக்கு ஆமைக்கறி சாப்பிடக் கொடுத்தார்.”

“பிரபாகரன் என்னிடம் பன்றிக்கறி சாப்பிட்டிருக்கீங்களா என்று கேட்டார்.”

“நானும் பிரபாகரனும் போய் அரிசிக் கப்பலைச் சுட்டோம்.”

“நான் சாப்பிடும் உணவு வகைகளைப் பின்னுக்கு நின்று ஒருத்தர் நோட் எடுத்துக்கொண்டிருந்தார்.”

இதையெல்லாம் வெச்சுப் பார்த்தா ஒரு உண்மை விளங்குது. சீமான் இலங்கை வந்து யாரோ ஒரு ஓட்டல் முதலாளியைச் சந்திச்சிருக்கார். அந்த சாப்பாட்டுக் கடைக்காரரின் பெயர் பிரபாகரன்.

Rajan Kurai Krishnan

“சார், நீங்க பெண்களையெல்லாம் மோசமா பேசறீங்கன்னுதானே பிரச்னை; பா.ஜ.க-ல அதையெல்லாம் என்கரேஜ் பண்ணுவாங்க சார். போலீஸ் கேஸானாகூட அரெஸ்ட்லாம் பண்ணவிடமாட்டங்க. உங்கள மாதிரி பேசறவங்களுக்கு அங்க நல்ல ஃப்யூச்சர் இருக்கும் சார்.”

“அப்டியா, சரி வண்டிய அந்தப் பக்கமா விடு.”

ItsJokker

சென்னை டு வருணபகவான் ~ என்னடா இப்படிப் பெய்யுற?!

பின்ன, நீ ரசிச்சுக் கவிதை எழுதவா நா வர்றேன்?! போ, போயி பிஸ்கட், சோத்துப் பொட்டலம் வாங்க தயாரா இரு.

mrithulaM

பஸ் ஏறும்போது புடவை எதுலயோ மாட்டிக்கிச்சு, ஏறவும் முடியல, இறங்கவும் முடியல,பெண்கள் உச்சுக் கொட்டி திட்ட ஆரம்பிக்க “நான் எடுத்து விடுறேன்மா”ன்னு ஒரு ஆண்குரல்... எடுத்தும் விட்டாப்ல, முகத்தை பாக்கவும் முடியல, சிரிக்கவும் முடியல...

yashikaaannand

shivaas_twitz

ஹோட்டல்ல நாம சாப்பிடும்போதும்கூடத்தான் சர்வர் நாம என்னென்ன சாப்பிடுறோம்னு நோட் பண்ணிக்கிட்டிருப்பாரு. அதையெல்லாம் மேடை போட்டுச் சொல்லிக்கிட்டா இருக்கோம்..?!

ஐ, கடல் கன்னி!
ஐ, கடல் கன்னி!

Im_Revathy

உங்களுக்கு நான் ஒரு மெயில் எழுதியிருக்கேன்னு பாப்பா நேத்து சொன்னா. ‘மெயிலா, உனக்கு எப்படி அதெல்லாம் அனுப்பத் தெரியும்?’னு கேட்டாக்க, ‘அனுப்பலையே, எழுதித்தான் வெச்சுருக்கேன். காமிக்கறேன்’னு சொல்லவும், ‘மெயில்னா நாமதான் இ-மெயில்னு நினைச்சுட்டோம். மெயில்னா லெட்டர்தானே’ன்னு உறைச்சுது.

yours_anjali

mohanramko

முதலில் ரெண்டு இருமல், லோ வாய்ஸ் பேச்சு இதெல்லாம் அவசியம் தேவைப்படுகிறது, ஒரு நாள் உடம்பு சரியில்லையென போனில் மேனேஜரிடம் லீவு சொல்ல...

தலைகீழ் விகிதம்
தலைகீழ் விகிதம்

venketramg

gokul.prasad

கன்னட மலையாள இலக்கியம் குறித்த குறைந்தபட்ச அறிமுகமாவது தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு இருக்கிறது. நிறைய வங்காள மொழிபெயர்ப்புகளையும் கொஞ்சம் மராத்தியையும்கூட வாசித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் முற்றிலும் அறிய முற்படாத இலக்கிய உலகம் தெலுங்கர்களுடையதுதான். என்ன மாதிரியான கதைகள் அங்கே எழுதப்படுகின்றன என்பதே இன்னமும் மர்மமானதாகவே உள்ளது. அந்த ஊர் திரைப்படங்களைப் பார்த்து பயந்ததாலோ என்னவோ எவருமே அதை எட்டிப் பார்க்கக்கூடத் துணியவில்லை.

குஷ்பு என்றால் அழகு!
குஷ்பு என்றால் அழகு!

ஒரே ஒரு, தெலுங்குச் சிறுகதைகள் தொகுப்பை சாகித்ய அகாதமி வெளியிட்டிருக்கிறது. அவை எவையும் சாதாரண நல்ல கதைகள்கூட இல்லை. ஆனால் அதை வைத்து மட்டுமே அறுதியான முடிவுக்கு வந்துவிடவும் முடியாது. நம்மூர் அகிலனின் விருது பெற்ற கதையை வாசிக்கும் வேற்று மாநிலத்து நல்ல வாசகரிடையே அது என்ன மாதிரியான மதிப்பைப் பெற்றுத் தரும் என்பது பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

தெலுங்கில் மூன்று எழுத்தாளர்கள் ஞானபீட விருது வாங்கியிருக்கிறார்கள். நம்மைவிட ஒன்று அதிகம். அதிலும் ஓர் எழுத்தாளர் நூற்று ஐம்பது நூல்களை எழுதியிருக்கிறாராம். நிறைய கவிதைகள், 23 சிறுகதைத் தொகுப்புகள், சில நாடகங்கள், நாவல்கள் என எழுதிக் குவித்திருக்கிறார். அந்த ஊர் ஆசான் போல!

withkaran

குடும்பமே சாப்பிடுற அளவுக்கு ஆபீஸ்ல டோக்கன் தர்றாய்ங்க.பர்ஸ் உப்புற அளவுக்கு சம்பளம் தர்றாய்ங்க.வீட்ல இருந்தே வேலை செய்ற ஆப்ஷன் தர்றாய்ங்க.வீட்டுக்குக் கொண்டுபோய் விட கேப் தர்றாய்ங்க.இதுக்கு மேல உங்களுக்கு என்ன பிரச்னை?

ஸ்ட்ரெஸ்ங்க ஸ்ட்ரெஸ்... இந்த வேலைல எவ்வளவு ஸ்ட்ரெஸ் தெரியுமா?

teakkadai1

ரொம்ப வருசமா சமையலறைப் பக்கமே போகாத ஆணாதிக்க வாதியா இருந்துட்டேன். இப்ப சில மாதமாத்தான் கூட நிக்கிறேன். எவ்வளோ கஷ்டப்படுத்தியிருக்கேன்னு உறுத்தலா இருக்கு.

Mari Selvaraj

ItsJokker

‘ஆதர்ச தம்பதிகள்’ என்பவர்கள் யாரெனில், ‘அவரைத் திருத்தமுடியாது’ என்பதை உணர்ந்த மனைவியும் ‘இவகிட்ட பேச முடியாது’ என்பதைப் புரிந்த கணவனும் ஒற்றுமையாய் வாழ்வதே..!

உரையாட இரு கோப்பைகள்..!
உரையாட இரு கோப்பைகள்..!

shivaas_twitz

பஸ் காலியா இருக்கும் போது ஏறி, எல்லா வகையிலும் அலசி ஆராய்ந்து ஒரு சீட்டைத் தேர்ந்தெடுத்து நாம உட்கார்ந்தா, போற வழியில மழை பெய்யும்போது முதல்ல நம்ம சீட் மேல இருந்துதான் மழைத் தண்ணி ஒழுகும்.

aishwaryarajessh

Bogan Sankar

“சார் இது பக்திப்படம் சார். அதனால ஷூட்டிங் ஸ்பாட்ல யாரும் நான் வெஜ் சாப்பிடக் கூடாது. கெட்ட பழக்கங்கள் கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கோம்.”

“அப்போ சைக்கோ திரில்லர் படம் எடுத்தா என்ன பண்ணுவீங்க?”

நம்ம வீட்டுப்பிள்ளை!
நம்ம வீட்டுப்பிள்ளை!

minimeens

கௌதம்மேனன் படம் பாக்கறது சொந்தக்கார வீட்ல கல்யாண ஆல்பம் பாக்கறாப்ல. அங்க கூடவே ஒருத்தர் உக்காந்து, “மாப்பிள்ளைதான் கறுப்பு, பொண்ணு ஜாக்கெட் 10,000 ஆச்சு”ன்னு சொல்லிட்டே இருக்கறாப்லயே இங்க படம் முடியற வரை, ஹீரோ வாய்ஸும் ஓவர்லேப்ல கதை சொல்லிக்கிட்டே வருது. முடியல!

ihansika

rajakumaari

5ஆவது, 8ஆவதுக்குப் பொதுத்தேர்வாம்ல? 1ஆம் வகுப்பை எதுக்கு விட்டு வெச்சிட்டு? முதலிலேயே ஃபெயிலாக்கிட்டா மொத்தமா சோலி முடிஞ்சிரும்ல!

Paint Me Red
Paint Me Red

chaintweter

ஹோட்டல் விளம்பரத்துல ‘வீட்டுச்சாப்பாடு’ன்னும் யூடியூப்ல ‘ரெஸ்டாரன்ட் ஸ்டைல், வீட்டிலேயே சமைக்கலாம்’னும் தலைப்பு வைக்கிறாங்க.

mohanramko

டாக்டர்கிட்ட போனா, ‘அடிமடியிலயே கையை வைக்கிறாங்க’ தொப்பையைக் குறைக்கச் சொல்லி.