கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

ஊரடங்கைவிட ஊரடங்குக்குப் பிறகான காலத்தை நினைத்துதான் பயமாக இருக்கு.

www.facebook.com/Suresh Kannan

நீண்ட நாள்கள் கழித்து என் அம்மாவிற்கு போன் செய்தேன்.

“எப்படிர்ரா.. இருக்கே?”

இப்பவாவது போன் செய்தானே என்று அவரின் குரலில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது போன்ற பிரமை.

kajal
kajal

“நல்லாருக்கம்மா... நீ எப்படி இருக்கே?”

“இருக்கேன்.. சொல்லுடா.. என்ன அதிசயமா போன் பண்ணியிருக்கே... உங்க வீட்டு மகாராணி எப்படியிருக்கா?” என்று குடும்ப பாலிட்டிக்ஸில் இறங்க முனைந்தவரை இடைமறித்தேன். “யம்மோவ்... ஒரு முக்கியமான விசயம் கேட்கணும்..தாயபாஸ்ல காய் தோயறதுக்கு.. தாயம்தான் போடணுமா.. அஞ்சு போட்டாகூட ஓகேன்றேன், இவ ஒத்துக்க மாட்டேன்றா” ‘இதையெல்லாம் பெத்து... வளத்து...’ என்று பிறகு யோசித்திருப்பார் போல...

www.facebook.com/கே. என். சிவராமன்

ஊரடங்கைவிட ஊரடங்குக்குப் பிறகான காலத்தை நினைத்துதான் பயமாக இருக்கிறது. எத்தனை பேருக்கு வேலை பறி போகப்போகிறது என்று தெரியவில்லை... போலவே சம்பள விகித வெட்டும்.

ஜூன் மாதம் பள்ளி / கல்லூரி ஃபீஸ் இருக்கிறது. எந்தப் பள்ளியும் ஃபீஸைக் குறைத்துக்கொள்ளாது. முடிந்தால் கட்டு இல்லையெனில் டிசி வாங்கு என்றுதான் கட்டளையிடப்போகிறது. போலவே செமஸ்டர் ஃபீஸ். இது ஒரு சோற்றுப் பதம்தான். பானைச் சோற்றின் பதத்தையும் பட்டியலிடத் தெம்பில்லை.

pcsreeram
pcsreeram

தவிர இந்தக் கல்வியாண்டில் பட்டப்படிப்பை முடிக்கப்போகிறவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படியிருக்கும் என்பது குறித்து யோசிக்கக் கூட முடியவில்லை. ஏற்கெனவே பொறியியல், எம்.பி.ஏ பட்டதாரிகள் swiggy மாதிரி பணிகளையே பெருமளவுக்கு இப்போது மேற்கொள்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் பணி வாய்ப்பு இனி வரும் காலங்களில் எப்படியிருக்கும்..? ஏற்கெனவே அங்கு வேலை பார்க்கும் இந்தியர்களின் நிலை இனி என்ன..? ஒன்று மட்டும் நிச்சயம். ரிசர்வ் பட்டாளத்தால் நாடும் உலகமும் தத்தளிக்கப்போகின்றன. இந்தியாவில் இளைஞர் சக்தி அதிகம். கொரோனாவுக்குப் பின் இந்த சக்தியை எப்படி சேனலைஸ் செய்யப்போகிறோம்?

சாதி / மத / இன வெறிகள் அதிகமாகும் என்பதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படுகின்றன. கொரோனாவைவிட கொரோனாவுக்குப் பிறகான காலத்தை நினைத்துதான் அச்சமாக இருக்கிறது. நினைக்கவும் முடியவில்லை... நினைக்காமல் இருக்கவும் இயலவில்லை...

twitter.com/manipmp

புக் பண்ணி சாப்பிட்டவனையெல்லாம் குக் பண்ணி சாப்பிட வெச்சிருச்சு கொரோனா.

https://twitter.com/sultan_Twitz

கொரோனா ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ் # ஜி ~ எதுக்கு, பா.ம.க-வுக்குக் கிடைத்த வெற்றின்னு வெளியே சொல்றதுக்கா..?!

nithyamenen
nithyamenen

twitter.com/gips_twitz

நீங்க பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பின பணம்லாம் எண்ணெயும் விளக்கும் வாங்கவே சரியாகிட்டு. வீட்ல இருக்கிற அண்டா குண்டாலாம் வித்துக் குடுத்தீங்கனா அடுத்த வாரம் கொரோனாவுக்கு எதிரா அலகு குத்து திருவிழா நடத்தலாம்னு இருக்கேன்.

twitter.com/shivaas_twitz

‘இனிமே குடிக்கவே கூடாது’ என்பதன் லாக் டௌன் வெர்ஷன்தான் ‘இனிமே பகல்ல தூங்கவே கூடாது.’

twitter.com/___kaditham

உலகில் இந்தியாவில் மட்டும்தான்

நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது,

மூத்திரம் குடிக்கப்படுகிறது.

twitter.com/sundartsp

பிரேசில் அமேசான் காட்டிலே இருந்து மருந்தெடுத்து முடி முளைக்க வைக்கிறேன்றானுங்க, அவங்க என்னடான்னா அனுமன் மாதிரி மருந்து குடுங்கறாங்க.

yuvan
yuvan

twitter.com/SettuOfficial

ஆனா இரண்டு கட்சியும் சண்டை போட்டுக்கிறது நம்மள காப்பாத்தத்தான்னு நினைக்கிறப்ப ஏன் நமக்கெல்லாம் இரண்டு ஓட்டு இல்லன்னு பீல் ஆகுது.

twitter.com/pkcomrade

சரக்குக் கடையைத் திறங்க,

சலூன் கடையைத் திறங்க,

கறிக் கடையைத் திறங்கன்னு எல்லாம் கேட்பவர்களில் இந்திய அரசு செய்வதெல்லாம் சரி என இத்தனை நாள் நம்பியவர்களும் இருப்பீர்கள். உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி!

இந்த மூன்று வாரத்துல ஒரு தடையாவது காஷ்மீர் மக்களின் வலியை உணர்ந்து மனதார வருந்தினீர்களா?

www.facebook.com/raghul.baskar.5

கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டில் மூன்றாவது நாள் பணியை வெற்றிகரமாக முடித்திருக்கிறான் தஞ்சை மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருக்கும் என் தம்பி. ஆபத்தான சூழலில் பணி செய்யும் அவனுடைய உடல்நலம் குறித்து கவலை கொள்ளும் அதே நேரத்தில் நெருக்கடியான சூழலில் மக்களுக்கான மருத்துவனாக பணி செய்வது உண்மையில் பெருமையாகத்தான் இருக்கிறது. 'அந்த கீழத்தெரு பசங்க கூட சேரக்கூடாது','அந்த கீழத்தெரு பசங்க கூட சைக்கிள்ல போகக்கூடாது','அந்த கீழத்தெரு பசங்கூட சேர்ந்து விளையாடக்கூடாது' என்று ஒதுக்கி வைக்கப்பட்ட கீழத்தெருவிலிருந்து வந்த முதல் மருத்துவன். நீட் தேர்வு எழுதாத,சிபிஎஸ்இ பள்ளியில் படிக்காத,இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த மாணவன். இது என் தம்பயின் கதை.

ப்ளஸ் டூ தேர்வில் மருத்துவம் படிக்கிற அளவு மதிப்பெண் எடுத்துவிட்டு தேர்வு முடிவுகள் கூட பார்க்க முடியாமல் சாலை போடும் பணியிலிருந்த மாணவன்,செங்கல் சூளையில் வேலை செய்துக் கொண்டே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த மாணவி என தற்போது களத்தில் நிற்கிற ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் ஒரு நெடிய போராட்டத்தின் கதை இருக்கிறது‌. தமிழகமே நெருக்கடியான சமயத்தில் முன் வரிசையில் நின்று போரிட்டது நீட் தேர்வு எழுதாத, இட ஒதுக்கீட்டில் படித்த, உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த மருத்துவர்கள் என்று வரலாற்றில் பொறிக்கப்படட்டும்.