
ஸ்டாலின் கம்முனு இருந்தா கொரோனா ஒழியும் - அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி.
https://twitter.com/ajmalnks
அரிசி,கோதுமை இருப்பு உள்ளது -RBI கவர்னர்! உடனே நாளைக்கு பேங்க்ல போய் 50 கிலோ அரிசியும்,10கிலோ கோதுமையும் கேட்டு வாங்கிடணும்.

https://twitter.com/HariprabuGuru
‘ஆலோசனை சொல்ல ஸ்டாலின் என்ன மருத்துவரா?’ - எடப்பாடி. இவரு டாக்டர் பட்டம் வாங்கிட்டாராமாம்...
https://twitter.com/Thaadikkaran
ரம்மி ஆடி பணம் வெல்வீர்னு தினமும் மெசேஜ் அனுப்புறவன்கிட்ட கொரோனா நிதி வாங்குங்கய்யா, இப்போதுள்ள நிலைக்கு அவன்கிட்டதான் அதிக பணம் இருக்கும்..!
https://twitter.com/pachaiperumal23
“ஸ்டாலின் கம்முனு இருந்தா கொரோனா ஒழியும்” - அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி. நம்மளையெல்லாம் தேவையில்லாம வீட்டுக்குள்ள பூட்டி வெச்சி ஏமாத்திட்டாங்கடா.

https://twitter.com/SeSenthilkumar
வாட்ஸப்பில் குட் மார்னிங் அனுப்புறவங்க அருள்கூர்ந்து இன்னிக்கு என்ன நாளுன்னும் சொல்லி அனுப்புனீங்கன்னா நல்லாருப்பீங்கன்னு சொல்லியிருக்கேன்.
https://twitter.com/thirumarant
ஆனா ஒண்ணுடா... EMI எடுத்தது போக சம்பளம் அப்படியே பேங்க்ல இருக்கு...
https://twitter.com/Kannan_Twitz
முடி வெட்டிட்டு வந்தேன். பக்கத்து வீட்டு குட்டிப் பொண்ணு போலீஸ்காரர் மாதிரி இருக்கீங்கன்னு சொல்லிச்சி! பி.கு - குழந்தைகள் பொய் சொல்லாது!

https://twitter.com/murugan_itz
தூங்கவே கூடாது எனப் பகலிலும், தூங்கியே ஆகணும் என இரவிலும் போராட வேண்டியிருக்கிறது!
https://twitter.com/shivaas_twitz
ஏற்கெனவே நம்ம ஆளுங்க புரோட்டா, பனீர் பட்டர் மசாலா எல்லாம் வீட்டுலயே செய்யத் தொடங்கிட்டாங்க. இன்னொரு முறை லாக்டௌன் எக்ஸ்டெண்ட் பண்ணினா வீட்டுலயே தந்தூரி அடுப்பு ரெடி பண்ணிடுவாங்க.
https://twitter.com/saravankavi
மூன்று நாள்களுக்குப் பிறகு கொரோனாத் தொற்று இருக்காது. அப்படி இருந்தா...? மீண்டும் ஒரு தடவை மேல இருக்கறதைப் படிச்சுக்குங்க...!

https://twitter.com/Kozhiyaar
மே 3 வரை Lockdown என்று அறிவித்து விட்டு, எதற்காக ஏப்ரல் 20-ல் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும்?! அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்து மட்டும் நடக்கும் பட்சத்தில் அவற்றின் விலை ஏறாதா?! மக்களை மேலும் துயுரத்தில் ஆழ்த்தும் இம்முடிவு யாருக்காக?!
https://twitter.com/thoatta
லாக்டௌன் முடிஞ்சு அதிகம் பேர் போகப்போற இடத்துல கண் ஆஸ்பத்திரியையும் சேர்த்துக்கலாம்.
https://facebook.com abdul mutha;iob
யானைக்கு மதம் புடிச்சா மொதல்ல பாகனுகளத்தான் தேடும்னு சொல்லுவாங்கல்ல. அப்டி இருக்கு, டாக்டர்களத் தாக்குறதும் அவங்களுக்கு இறுதி மரியாதகூட செய்யவிடாம கலவரம் பண்றதும்.

https://twitter.com/writernaayon
பூனைகளிடம் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய காரணங்களுள்ளன; முடிவில் மியாவ் என்று மட்டுமே அவற்றால் சொல்ல முடியுமென்பதால், தவிர்ப்பதுதானே பகுத்தறிவு!
https://twitter.com/blankie
கொரோனாவால சாவாங்களான்னு தெரியல. ஒரு குரூப் சோத்துக்கு வழியில்லாம பசியாலயும் இன்னொரு குரூப் தின்னு தின்னே ஒபி-சிட்டி வந்தும் வேணா... இங்க்ரெடிபிள் இண்டியா.
https://twitter.com/ivedhalam
சமைக்கிறது, வீட்ட க்ளீன் பண்றது, டிவி பாக்குறது இதெல்லாம் பெரிய வேலையான்னு நினைச்சுட்டிருந்தேன். இப்ப வீட்ல இருக்கும் போதுதான் நமக்காக குடும்பத்துக்காக எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு தெரியுது. டீ-ன்னு ஒத்த வார்த்தைல சொல்லாம ப்ளீஸ் டீ போட்றியாப்பான்னு கேக்கலாம். நாமளே கூட போட்டுக்கலாம்!
https://twitter.com/HariprabuGuru
உங்க ஊர்லதான்டா இதுக்குப் பேரு “ரேப்பிட் டெஸ்ட் கிட்.” எங்க ஊர்ல இதுக்குப் பேரு பணக்காரர்களைக் கண்டுபிடிக்கும் நவீன மெஷினு...

https://twitter.com/vandavaalam
மூணு நாள்ள 0 காட்டுவேன்னு சொல்லிட்டு, 105 பேர்னு உண்மையான கவுன்ட்டைக் கொடுத்ததுக்காகவே எடப்பாடிக்கு அடுத்த எலெக்ஷன்ல ஓட்டு போடலாம்.