Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

கொரோனாவைவிட சில விஷயங்கள் கொடுமையானவை.

twitter.com/chithradevi

வாழ்ந்துகெட்ட மனிதனைப்போல பரிதாபமாக வந்து நிற்கிறது லாக்டௌன் காலத்து ஞாயிற்றுக் கிழமைகள்.

twitter.com/yaar_ni

20 லட்சம் கோடி சொன்ன உடனே பணம்னு நினைச்சியா? இந்தா கொண்டக் கடலை!

malavikamohanan
malavikamohanan

twitter.com/Maddoc_

ஒரு வாரம் Covid-19 பணி‌ நிறைவுற்றது. புதுப்புது அனுபவங்கள். கோயம்பேட்டுல இருந்து நடந்தே வந்த ஒருத்தரு ரிசல்ட் தெரிஞ்சதும் எப்படியாவது + ஆகணும்னு வேண்டுனேன் சார்... 2 வாரத்துக்கு சாப்பாடு கிடைக்கும்னு கும்பிட்டது இன்னும் கண்ணுலயே இருக்கு... கொரோனாவைவிட சில விஷயங்கள் கொடுமையானவை.

வலைபாயுதே

www.facebook.com/கவிதா சொர்ணவல்லி

மலையாள நாளிதழான மாத்ரூபூமியில் வெளியான படம் இது.

புலம்பெயர் தொழிலாளிகளை ஏற்றிக் கொண்டு விரைகின்ற பேருந்துகள் அருகருகே நின்றபோது இந்தப் பொடியன்கள் ஒருவரையொருவர் பார்த்து நண்பர்களாகிவிடுகின்றார்கள்.

பழத்தைக் கொடுக்கின்ற கன்னையா இராஜஸ்தானுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றான். வாங்கிக் கொண்டிருக்கின்ற கன்ராமோ ஜார்க்கண்டுக்கு.

www.facebook.com/revathy.ravikanth

என்ன சமையல்னு நான் கேட்டப்ப, `குடல்’ வாங்கிட்டு வந்தேன், செய்யணும்னு சொன்னதக் கேட்டு அதிர்ச்சி ஆகி, அதெல்லாம் சமைக்கத் தெரியுமா பரவால்லையேன்னு நெனச்சு கேட்டா, அதுல என்ன கஷ்டம் பாக்கெட்ட பிரிச்சு எண்ணெய்ல போட்டு எடுத்துற வேண்டியது தான்னு சொல்லுறாங்க டோழி!

ஆமாய்யா..அந்த மஞ்சக் கலர் குழல் வத்தலு!அதான் குடலாம்!!

dhurv.vikram
dhurv.vikram

twitter.com/imcomrade

பால்வாடி ஆயா சென்சஸ் எடுக்க வந்திருக்காங்க. வீட்டுல இருக்குங்க தகவல் எல்லாம் சேகரிக்குறாங்க. வந்தவங்க கிட்ட நம்ம bio 10 copy குடுத்து நல்ல பொண்ணுங்க இருக்க வீட்டுல குடுங்கன்னு சொல்லி குடுத்துடுவோமா. #Quarantine90skidsசிந்தனைகள்

samantharuthprabhu
samantharuthprabhu

twitter.com/gmkhighness

இந்த வருடம்

அமைதிக்கான

நோபல் பரிசைக்

கடவுளுக்குக்

கொடுத்து விடுங்கள்...

இத்தனை காலம்

நான் படும்

இன்னல்களைப் பார்த்தும் அமைதியாகவே இருக்கிறார்...!!!

twitter.com/TenPercentFraud

Almost இட ஒதுக்கீட்டின் வரலாறே இங்க இருக்க இளைய தலைமுறைக்கு தெரியல.. பல பேர் என்கிட்ட quota வ தூக்கணும் திறமை அடிப்படையில வரனும் னு பேசிருக்காங்க. நீங்களே reservation ல தான் படிச்சீங்க னு சொன்னால் நம்ப மாட்டேங்குறாங்க.. இனிமே 2000 வருஷம் கதையை சொல்லி அவங்களுக்கு புரிய வைக்கணும்.

Gouri
Gouri

twitter.com/ItsJokker

ஏன் திமிங்கலம், தீர்ப்பு வந்ததே மதியம்தான். அதுக்குள்ள எப்படி எந்த கேப்ல இவ்ளோ டோக்கன பிரின்ட் பண்ணானுங்க?!

twitter.com/naaraju

தற்காலிகமாவாச்சும், ‘ஆன்லைன் வசதிகள், அவை பற்றிய அறிவு, ஐடியா உள்ள பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும்தான் கல்வி’ன்ற ஒரு நிலைமை வந்துடுச்சுல்ல!

twitter.com/ravi_r08

OTTக்குப் படம் எடுக்கறதுன்னு முடிவாகிடுச்சுனா, நம்மூர் சினிமா அடிப்படை டெம்ப்ளேட்டே மாறும்ல? இன்டர்வல் ட்விஸ்ட், அஞ்சு பாட்டு, நாலு பைட்ங்கற மாடல் வழக்கொழிய வாய்ப்பிருக்கு.

Nanditha
Nanditha

twitter.com/mohanramk

மல்லையா நவ் - நான் வேணும்னா மறுபடியும் வந்து லோன் வாங்கிக்கவா?

twitter.com/amuduarattai

அடிக்கிற வெயிலுக்கு, ஹெலிகாப்டர் ஃபேனுக்கு அடியில் இருந்தால்தான் வேர்க்காதுபோல.

twitter.com/Kozhiyaar

மதியம் தூங்கலைன்னா சாயங்காலம் தலை வலிக்குது! மதியம் தூங்கினா இரவு தூக்கம் வர மாட்டேங்குது! வெரி டெலிகேட் பொசிஷன்!

twitter.com/urs_venba

போனையும் பார்த்திட்டு குக்கர் விசிலையும் சரியாக எண்ணுவது தசாவதானி ஆனதற்குச் சமம்.

twitter.com/RahimGazzali

எழுதிக்கொண்டிருக்கும்போது திடீர்னு குலப்பமா, குழப்பமா, குளப்பமான்னு குழப்பம் வந்த பின்பே தெளிவு கிடைக்கிறது