பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

Atharvaa
பிரீமியம் ஸ்டோரி
News
Atharvaa

பொறுமைக்கும் எல்லையுண்டு. ஸ்மார்ட் போனில் பேட்டரி தீரும் வரை..!

https://twitter.com/i_soruba

எமோஷனல் பிளாக்மெயிலுக்கு அடுத்தாப்ல மிகப்பெரிய குடும்ப வன்முறை, பாத்திரம் துலக்கிட்ருக்கறப்ப அடுத்தடுத்து அதைக் கொண்டாந்து சிங்க்ல போடறது.

Malavikamohanan
Malavikamohanan

https://twitter.com/manipmp

தூங்கிறவனைக்கூட எழுப்பிடலாம் ஹெட்போன் கேட்டுத் தூங்கிறவனை எழுப்பவே முடியாது.

https://twitter.com/Thaadikkaran

அடேய் கம்மியா ஒர்க் அவுட் பண்ணச் சொல்லுங்கடா, ஒர்க் அவுட் பண்ணி டயர்டா இருக்குன்னு சூட்டிங் வராமப் போயிறப் போறாரு..!#Maanaadu

https://twitter.com/RahimGazzali

காஷ்மீரில் இணையம் இருந்தால் தவறான படங்களைப் பார்ப்பதைத் தவிர, வேறு எதையும் செய்ய மாட்டார்கள்..! - நிதி ஆயோக் குழு உறுப்பினர் வி.கே.சரஸ்வத். காஷ்மீர் மக்களையெல்லாம் பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள் மாதிரி நினைத்துவிட்டார் போல...

Atharvaamurali
Atharvaamurali

https://twitter.com/kumarfaculty

பொறுமைக்கும் எல்லையுண்டு. ஸ்மார்ட் போனில் பேட்டரி தீரும் வரை..!

https://twitter.com/shivaas_twitz

வாஸ்து சாஸ்திரத்தில் செல்போன் சிக்னல் மூலையைச் சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

https://twitter.com/mohanramko

நம்ம கூடவே ஒருவரை வச்சிக்கணும்னு நினைச்சா, அவருடைய கைப்பேசிக்கு ‘ஹாட்ஸ்பாட்’ ஆன் பண்ணினாலே போதும்.

https://twitter.com/Suyanalavaathi

பண்டிகைக்குச் சொந்த ஊருக்கு நாம் செல்வதா இல்லை பெற்றோர்களைச் சென்னைக்கு வரச் சொல்வதா என்பதை முடிவு செய்வது பஸ் மற்றும் டிரெயின் டிக்கெட்டுகளே!

Viratkohli
Viratkohli

https://twitter.com/amuduarattai

மொபைல் ரிப்பேர் ஆகி, சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்லும்போது, உடம்பு சரியில்லாத குழந்தையை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிச் செல்வது போல, என்னாச்சோ, ஏதாச்சோ என்று ஒரே படபடப்பாகத்தான் இருக்கிறது.

https://twitter.com/RahimGazzali

டேபிளில் பிரித்து வைத்த ரசப்பொட்டலத்தை நிறுத்துவதும் நாய் வாலை நிமிர்த்துவதும் ஒன்றுதான், நிற்கவே நிற்காது.

Varusarathkumar
Varusarathkumar

https://twitter.com/Kozhiyaar

வீட்டுக்கு வெளியே திரையில் வரும் ரஜினிகாந்த்போல கெத்தாகவும், வீட்டுக்குள்ளே மேடையில் பேசும் ரஜினி போல காமெடியாகவும் அமைந்துவிடுகிறது ஆண்களின் வாழ்க்கை!

https://twitter.com/manipmp

வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி இருப்பதற்கு டயட் என்று பெயர்.

https://twitter.com/Kannan_Twitz

கறி இல்லா ஞாயிறு கொஞ்சப்படாத குழந்தைபோன்றது!

https://twitter.com/Subbumeil

தன் சௌகர்யத்துக்கு ஏற்றாற்போல கூட்டியும் குறைத்தும் சொல்லும் பொய்க்கு உண்மை என்று பெயர்!

https://twitter.com/Buddhan_

கார்ல போறப்ப கேக்கிறதுக்கு ராஜா பாட்டு ப்ளே லிஸ்ட் ரெடி பண்ணியாச்சு.இனி கார் வாங்க வேண்டியது மட்டுந்தான் பாக்கி.

Nithyamenen
Nithyamenen

https://twitter.com/kumarfaculty

ஸ்டிக்கர் பொட்டு வந்த பிறகு பாத் ரூம்களும் சுமங்கலிகள் ஆகிவிட்டன..!

facebook.com/ ஜெ.வி.பிரவீன்குமார்

பொங்கலுக்குக் கிடைக்கும் லீவில் என்ன செய்வது எனத் தெரியாமல், ஏதாவது ஒரு கருமத்தை இழுத்துப்போட்டுச் செய்கிறார்கள். பின்பு அதுவே பழக்கமாகிவிடுவதால், அதைப் பண்பாடு, கலாச்சாரத்துடன் சேர்த்துவிடுகிறார்கள்.