
நல்லா விசாரிங்கய்யா, சினிமா ஷூட்டிங் வேடிக்கை பார்க்க வந்தவங்களா இருக்கப் போறாங்க!
https://twitter.com/shivaas_twitz/
‘பெரிதினும் பெரிது கேள்’ என்பதன் வடிவேலு வெர்ஷன்தான்...’கேளுடா...யாரு கிட்ட கேக்குற... அண்ணன் கிட்ட தான கேக்குற...’
https://twitter.com/Thaadikkaran
தீர்ந்துபோன தண்ணி கேனை மாத்தி முடிச்சதும் ஜிம்முக்குப் போய்ட்டு வந்த எபெக்ட்..!

https://twitter.com/sowmyan69
விஜய்யை ஜோசப் விஜய்ன்னு அழைக்கும்போது... ரஜினியை சிவாஜிராவ் கெய்க்வாட்னு அழைப்பது தானே முறை?!
https://twitter.com/9thchoice
அப்போ நீ என்னய சந்தேகப்படறியான்னு கேட்கறதைவிட, அப்போ நான் மாட்டிக்கிட்டேனான்னு கேட்கறது உண்மைக்கு நெருக்கமா இருக்கும்.
https://twitter.com/mekalapugazh
ஒரு அமைச்சர் சிறுவனை அழைத்துச் செருப்பைக் கழற்றச் சொன்னதெல்லாம்... ஒரு பேசுபொருளாக மாறுவதென்பது வடக்கேயெல்லாம் நடக்கவே வாய்ப்பில்லைதானே! தமிழகம் பெரியார் மண் என்பதற்கு இதுவும்தான் ஒரு காரணம்.

https://twitter.com/saravankavi
‘மாஸ்டர்’ விஜய்க்கு எதிராக 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டம்!
நல்லா விசாரிங்கய்யா, சினிமா ஷூட்டிங் வேடிக்கை பார்க்க வந்தவங்களா இருக்கப் போறாங்க!
https://twitter.com/Thaadikkaran
பேரனுக்கு செருப்பு மாட்டிவிட தாத்தாவுக்கு எப்போதும் தயக்கம் இருப்பதில்லை. அதையே அவரும் செய்வார் என்று நம்புவோமாக...!
https://twitter.com/manipmp
நம்ம எழுத்தை ஒரு தலைமுறையே படிக்கணும்னா, கல்யாண வீட்ல மொய் எழுதினாலே போதுமானது.
facebook.com/Dhamayanthi
கிளி தேர்ந்தெடுக்கும் சீட்டாய் ஆகிறது வாழ்க்கை. முருகனின் படம் வந்த கணேசனுக்கும் ராமரின் படம் வந்த பெருமாளுக்கும் கதை வேறாய் இருக்கலாம். கூலியாய்க் கிடைக்கும் அரிசிமணிகள் மட்டும் கிளிக்கு வேறல்ல.

facebook.com/Cable Sankar
இதுல என்ன சொல்ல வர்றாங்க அப்படின்னு படம் முடியுற வரைக்கும் கேட்டுட்டே இருந்தான் என் பெரிய பையன், நான் இன்னும் அந்தப் படம் பார்க்கல. இருந்தாலும் நான் என்ன சொன்னேன்னா, `உலகப் படத்தையெல்லாம் நீ கேள்வி கேட்கப்படாது. நீயா எதையாச்சும் புரிஞ்சா மாதிரி சீன் போடு. அதான் உனக்கு நல்லது’ன்னேன். என்ன நான் சொல்றது?
https://twitter.com/manipmp
பத்து மீட்டர் இடைவெளி விட்டு வரவும் எனும் விதியைக் கடைப்பிடிப்பது கம்பி லாரிக்கு மட்டும்தான் பொருந்துகிறது.
https://twitter.com/gips_twitz
ஏன் லேட்டுனு மனைவி கேட்கும்போது, கணவனுக்குள் ஒரு சீமான் உருவாகிறான்.

https://twitter.com/amuduarattai
ஒருவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள, நாம் சைக்காலஜி படித்திருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களின் ஸ்டேட்டஸைப் படித்தாலே போதுமானது.